'படத்தை பார்த்துட்டு பேசுங்க'.. பகாசூரன் படம் குறித்து அனுராக் கஷ்யப் ட்வீட்டால் வெடித்த சர்ச்சை
மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பகாசூரன் படத்திற்கு பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வாழ்த்து தெரிவித்ததை பலரும் ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள்.
சென்னை: மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பகாசூரன் படத்திற்கு பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வாழ்த்து தெரிவித்ததை பலரும் ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள். படத்தை பார்க்காமல் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதேநேரம் அனுராக் கஷ்யப் ட்வீட்டை பாராட்டுபவர்களும் அதிகமாக உள்ளனர். வேண்டுமென்றே சாதி முத்திரை குத்தி மோகன் ஜியின் படங்களை விமர்சிப்பதாக அவர்கள் ட்விட்டரில் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இயக்குனர் செல்வராகவன், நட்டி, ராதாரவி, தாரக்ஸி, கே.ராஜன்,கூல் சுரேஷ்,சசிலயா உள்பட பலர் நடித்து வெள்ளிக்கிழமை வெளியாகி உள்ள படம் பகாசூரன். சாம்.சி.எஸ். இசையமத்துள்ள இந்த படத்தை மோகன் ஜி இயக்கி உள்ளார். செல்ஃபோனும், அதில் உள்ள டேட்டிங் செயலிகளும் இளம் தலைமுறையினரை, குறிப்பாக பெண்களை எப்படியெல்லாம் சீரழிக்கின்றன என்பது தான் பகாசூரன் கதையாகும்.
பகாசூரன் படத்திற்கு முன்பு பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம், திரௌபதி போன்ற படங்களை எடுத்தார் மோகன் ஜி. இதில் திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்றவை சாதி ரீதியான விமர்சனங்கள் எழுந்தன. அந்த பாணியில் பகாசூரன் படமும் சர்ச்சை கலந்த விமர்சனம் எழுந்துள்ளது.

பெண்கள் கல்வி
மோகன் ஜியின் பகாசூரன் படத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, 'பெண்களின் ஒழுக்கம்', 'பெண் கெளரவம்' என அதீத பழைய பார்வை மற்றும் பிற்போக்கான கருத்துக்களைப் படம் முன் வைப்பதாக பிரபல ஊடகங்கள் விமர்சித்தன. பிரபல தமிழ் ஊடகம் ஒன்று தனது விமர்சனத்தில், 50 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தனையிலிருந்து உருவாகியிருக்கிறது 'பகாசூரன்'. பல நூறாண்டுகளுக்குப் பிறகு பெண்கள் தங்களது அடுப்பங்கறையிலிருந்து இப்போதுதான் வெளியில் வந்து கல்வி கற்கத் தொடங்கியிருக்கின்றனர். இதனை பதட்டத்துடன் பார்த்த ஒருவர் எழுதிய கதையாக வந்திருக்கிறது 'பகாசூரன்'. பெண்களைக் காக்க வேண்டும் என சொல்ல வரும் இயக்குநர் அதற்காக படத்தில் ஆபாச நடனம் வைப்பதெல்லாம் கண்முன் தெரியும் முரண்.

கண்காணிக்கணும்
செல்வராகவனின் மகள் முதல் தலைமுறை பட்டதாரியான பிறகு மேற்படிப்புக்காக வெளியூர் செல்ல விரும்புகிறார். சென்னையில் வாழ்பவர்கள் வெளிநாட்டில் வாழ்பவர்களாக மாறிவிட்டதாக ஒரு வசனம் வருகிறது. "ஊருக்குள்ளயே படிக்க வைக்க வேண்டியதுதான", "நம்ம புள்ளைங்க ரூமுக்குள்ள என்ன பண்ணுறாங்கன்னு கண்காணிக்கனும்" என இப்படிப்பட்ட வசனங்கள் படம் முழுக்க தொடர்கின்றன,

செல்போன் ஆபத்து
ஆபாசப் படங்களை எடுத்து பெண்களை மிரட்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தராமல், பெண்கள் ஒழுங்காக இருந்தால் எல்லாம் சரியாகும், பெண்களே கெளரவம் என அதர பழைய கல்வெட்டையே தூக்கி சுமந்த 'பகாசூரன்' கெளரவம், ஒழுக்கம், இத்யாதி, இத்யாதி என பெண்களையே எல்லாச் சுமைகளையும் சுமக்கச் சொல்லியிருக்கிறது. படத்தின் இறுதியில் பேசும் செல்வராகவன், செல்போன்களையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆபத்தானதாக பேசுகிறார். அதனைத் தொடர்ந்து பேசும் நட்டி நமது பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார். பெண்கள் வெளியில் வரட்டும். கல்வி கற்கட்டும். அவர்களின் உடலை இன்னும் ஆபத்தானதாகக் காட்டி அவர்களின் பாதைகளில் குழிவெட்டி காத்திருக்க வேண்டாம்" என பிரபல தமிழ் ஊடகம் விமர்சித்துள்ளது.

விமர்சனம்
மொபைல் போன்களைப் பயன்படுத்துவது, பெண்களை மட்டும் ஒழுங்காக இருக்கச் சொல்வது போன்ற பிரச்சாரங்களும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் பலரும் பகாசூரன் படம் குறித்து கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் பதிவிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்தியில் பாம்பே வெல்வெட், கேங்க்ஸ் ஆஃப் வசேப்பூர், மர்மெர்சியான் போன்ற படங்களை இயக்கியவரான அனுராக் கஷ்யப், "பகாசூரன் படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தெற்கிலிருந்து வரும் செய்தியின் மூலம் நான் கேள்வியுற்றேன். எனது நண்பர் நட்டி மற்றும் இயக்குநர் செல்வராகவனுக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டிருந்தார்.

படம் பாருங்கள்
இந்நிலையில் சமூகத்தில் வெளிப்படையாக முற்போக்கு கருத்துக்களை பேசும் அனுராக் கஷ்யப் சாதி ரீதியாக தவறான கண்ணோட்டத்தில் படங்களை எடுக்கும் இயக்குநரின் படத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளதாக அனுராக் கஷ்யப்பை விமர்சித்து வருகின்றனர். அனுராக் கஷ்யப் படத்தை பார்க்காமல் அதுகுறித்து வாழ்த்துக்களை தெரிவித்திருப்பதாகவும், விவரம் தெரியாமல் படம் குறித்து பாராட்ட வேண்டாம் என்றும் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர். நீங்கள் உங்கள் நண்பர் நட்டிக்காக ட்வீட் போட்டிருப்பது தெரிகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பலரும் கருத்து பதிவு
இதனிடையே மோகன் ஜிக்கு ஆதரவாகவும் காஷ்யப் ட்வீட்டிற்கு கீழ் அதிக அளவு கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. சாதி ரீதியான முத்திரைகளை வேண்டுமென்றே சிலர் மோகன் ஜியின் மீது பரப்புவதாக அவர்களது குற்றச்சாட்டு உள்ளது. தற்போதைய நவீன யுகத்தில் செல்போன் என்ன விளைவை ஏற்படுத்துகிறது. பெண்கள் எப்படி எல்லாம் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படம் காட்டுகிறது என மோகன் ஜிக்கு ஆதரவாக ட்வீட் போட்டவர்களின் வாதமாக உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications