லோக்சபா தேர்தல் சீட் ரேஸிலிருந்து வெளியேற்ற குஷ்புவுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி?
குஷ்புவுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டதன் பின்னணியை விவரிக்கிறது இச்செய்தி.
சென்னை: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் சீட் ரேஸிலிருந்து வெளியேற்றுவதற்காகவே நடிகை குஷ்புவுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்களில் சலசலப்பு கிளம்பியுள்ளது.
தமிழ்நாட்டு சினிமா ரசிகர்கள் நடிகை குஷ்புவுக்கு கோவிலே கட்டியவர்கள் என்கிற் காலம் இருந்தது. சினிமாவை தொடர்ந்து அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தார் நடிகை குஷ்பு.

2007-ம் ஆண்டு தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அன்னை மணியம்மையார் கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார். அந்த கால கட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் நெருக்கமானவராகவும் இருந்தார் குஷ்பு. அதனால் அதிமுகவில் ஐக்கியமாவார் குஷ்பு என கூறப்பட்டது. ஆனால் திமுகவில் 2010-ம் ஆண்டு இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகை குஷ்பு பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தார். 2013-ம் ஆண்டு திமுகவில் நடிகை குஷ்பு இருந்த போது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்பாக அவர் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையானது. திருச்சியில் திருச்சி சிவா எம்பி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய குஷ்பு கார் மீது செருப்புகளை வீசினர் திமுகவினர். சென்னை பட்டினப்பாக்கம் குஷ்பு வீடும் தாக்கப்பட்டது.
திமுகவில் இருந்த போது தம்மை ஒரு பெரியாரிஸ்டாக, பெண்ணியவாதியாக குஷ்பு அடையாளப்படுத்தினார். இதனாலும் பல சர்ச்சைகளை எதிர்கொண்டார். ஒருகட்டத்தில் திமுகவில் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் காங்கிரஸுக்கு தாவினார் நடிகை குஷ்பு. காங்கிரஸில் ஏற்கனவே கோஷ்டி பூசல் உச்சமாக கோலோச்சிக் கொண்டிருந்தது. குஷ்புவின் வருகைக்குப் பின்னர் ஏற்கனவே காங்கிரஸில் இருந்த நடிகை நக்மாவுடன் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அங்கேயும் குஷ்புவால் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினார். பின்னர் ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டார் குஷ்பு.
பாஜகவில் குஷ்பு இணைந்தாலும் பெரிய அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்காமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது குஷ்பு, சீட்டுக்காக பட்டபாடு பரிதாபத்துக்குரியது. சேப்பாக்கம் தொகுதியில் எப்படியும் சீட் வாங்கி விடுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டார். ஆனால் சேப்பாக்கம் கிடைக்காமல் போனது குஷ்புவுக்கு. பின்னர் நெல்லை தொகுதிக்கு குறிவைத்தும் பார்த்தார். அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. வேறவழியே இல்லாமல் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
இந்த தோல்விக்குப் பின்னர் பாஜகவில் ஏதாவது பதவி பஞ்சாயத்து வந்தால் குஷ்பு பெயரும் அடிபடுவது ஒன்றாகவே இருந்து வந்தது. தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு சிலர் குஷ்பு பதவியை முன்வைத்து கருத்து தெரிவித்திருந்தனர். ஆனாலும் குஷ்புவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான பதவிகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எப்படியாவது போட்டியிட சீட் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் நடிகை குஷ்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவருக்கு எதிரான பாஜக லாபிகளோ, குஷ்புவுக்கு சீட் கிடைத்துவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தன. தற்போது நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். என்னதான் குஷ்புவுக்கு பதவி கொடுக்கப்பட்டாலும் அவருக்கு தேர்தல் சீட்டை மறுக்கத்தான் இந்த பதவி கொடுத்து ஒதுக்கிவைத்துவிட்டனர் என்கிற குரல் பாஜகவுக்குள்ளே வலம் வந்து கொண்டிருக்கிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications