ஸ்டான்லி வேண்டாம்.. ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி! பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து திடீரென்று மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் இருந்து அமமுக சென்று திமுகவில் இணைந்தவர் செந்தில் பாலாஜி. இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். இந்த வேளையில் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது.

Why Minister Senthil Balaji shifted from Chennai Stanley Hospital to Omandurar Hospital

இதையடுத்து அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஜூன் மாதம் 13ம் தேதி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சையை தொடர்ந்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே தான் உடல்நலனை காரணம் காட்டி அவர் தொடர்ந்து ஜாமீன் கோரினார். இதனை விசாரித்த நீதிமன்றங்கள் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அதோடு செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 10ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டது. அதாவது வரும் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் செந்தில் பாலாஜி தொடர்ந்து புழல் சிறையிலேயே உள்ளார்.

இந்நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு இன்று மாலை அழைத்து வரப்பட்டார். மருத்துவமனை வளாகத்தில் வந்திறங்கிய ஆம்புலன்ஸில் இருந்து செந்தில் பாலாஜி சிரமப்பட்டு இறங்கினார்.

போலீஸ்காரர் கைத்தாங்கலாக பிடித்தபடியே இறக்கிவிட்டனர். இதையடுத்து வீல் சேரில் அவர் மருத்துவமனைக்கு உள்ளே அழைத்து செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. எக்கோ, இதயம் சார்ந்த பல மருத்துவ பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கழுத்து வலிப்பதாக கூறியதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இதயம் மற்றும் கழுத்து வலிப்பதாக அவர் கூறிய நிலையில் அந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என டாக்டர் பரிந்துரைத்தனர். இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+