சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் ஒதுக்குகிறாரா.. "அண்ணன்" தவிர்க்கிறாரா.. என்னாச்சு?.. பரபரப்பில் அறிவாலயம்..!

முக அழகிரியை முக ஸ்டாலின் ஏன் சந்திக்கவில்லை என்ற காரணம் வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: என்னாச்சு? முக அழகிரியை, முக ஸ்டாலின் ஒதுக்குகிறாரா? நேருக்கு நேர் சந்தித்து பேசுவதை தவிர்க்கிறாரா? என்ற கேள்விகள் கிளம்பி உள்ளன.. அதேசமயம், நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரின் சந்திப்பு ஏன் நிகழவில்லை என்ற காரணமும் வெளிவந்துள்ளது.

ஸ்டாலின் பதவியேற்புக்கு முன்பேயே, முக அழகிரி பாசத்துடன் தம்பிக்கு வாழ்த்து என்று சொல்லி இருந்தார்.. இதையடுத்து, பதவியேற்றதும், மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி வாய்மொழி உத்தரவினை முக ஸ்டாலின் பிறப்பித்ததாகவும் சொல்லப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில்தான், மதுரைக்கு ஸ்டாலின் சென்றிருந்தபோது, எப்படியும் அழகிரியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் பரபரத்தன.. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.

 சந்திப்பு

சந்திப்பு

ஸ்டாலின் வீடு தேடி வந்து பார்க்கட்டும் என்று அழகிரி நினைத்துவிட்டாராம்.. அண்ணனே வந்து தம்மை நேரில் சந்தித்து பேசட்டும் என்று ஸ்டாலின் நினைத்து விட்டாராம்.. எனவே, ஜுன் 3-ம்தேதி, அதாவது கருணாநிதி பிறந்த நாள் அன்று இருவரும் எப்படியும் சந்தித்து விடுவார்கள், அன்றைய தினம் குடும்பத்தினருடன் இணைந்து கட்சி விவகாரங்கள் குறித்து பேசுவார்கள் என்றும் தகவல்கள் பரபரத்தன.

 கோபாலபுரம்

கோபாலபுரம்

எதிர்பார்த்தபடியே அன்றைய தினம் சென்னைக்கு வந்துவிட்டார் அழகிரி.. கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிலும் திருவுருவ படத்திற்கு மலர் தூவி ஸ்டாலின் அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அழகிரியும் அங்கு வந்தார்.. இதையடுத்து இவர்களின் சந்திப்புகள் நடக்கும், கட்சியில் இணைப்புகள் நடக்கும்.. பதவி ஒதுக்குவது நடக்கும் என்றெல்லாம் கணக்கு போடப்பட்டது.

 ஏமாற்றம்

ஏமாற்றம்

ஆனால் எல்லாமே கனவாகி விட்டது.. அப்பா போட்டோவுக்கு அஞ்சலி செலுத்திய அழகிரி, தன் அம்மாவிடம் சென்று பேசினார்.. பிறகு டக்கெனகிளம்பி சென்றுவிட்டார்... இதனால் நிர்வாகிகள் சற்று ஏமாந்துவிட்டனர்.. ஏன் இருவரும் சந்திக்கவில்லை? ஸ்டாலின்தான் அழகிரியை சந்திப்பதை தவிர்க்கிறாரா? இன்னும் அவர் மீது ஸ்டாலினுக்கு வருத்தம் உள்ளதா? என்ற அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்தன.

 ஊடகங்கள்

ஊடகங்கள்

இந்த கேள்விகளையே முன்வைத்து சிலர் தேவையில்லாததை கொளுத்தி போடவும் முயன்றனர்.. ஆனால், உண்மையிலேயே ஸ்டாலின் அழகிரி சந்திப்பை தவிர்க்கவில்லைலையாம்.. இப்போதைக்கு கொரோனா அதிகமாக இருக்கவும், அதன் தடுப்பு பணிகளில் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார்.. இந்த நேரத்தில் அழகிரியை சந்தித்து பேசி கொண்டிருந்தால், ஊடகங்கள் இந்த சந்திப்பில்தான் கவனம் செலுத்தும்..

 சிக்கல்

சிக்கல்

இதற்கு முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கும். இது ஒரு விவாதமாக கிளம்பி கொண்டிருக்கும்.. இதுபோன்ற நெருக்கடி நேரத்தில், இந்த சந்திப்பானது தேவையில்லாத சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கும் என்பதை தவிர்ப்பதற்காகவே ஸ்டாலின், அழகிரியை சந்திப்பதை தவிர்த்து வருகிறாராம்.

 மதுரை

மதுரை


மதுரைக்கு சென்றபோதுகூட, அரசுமுறை பயணம், குடும்ப விஷயமாக மாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் அழகிரியை சந்திக்காமல் சென்னை திரும்பினார் ஸ்டாலின்.. இப்போதும் இதே அரசு காரணம்தான் முன்வைக்கப்பட்டு வருகிறது.. மற்றபடி இவர்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை... இந்த சந்திப்பு தள்ளி போகும்.. ஆனால் கண்டிப்பாக விரைவில் நடக்கும் என்கிறார்கள்.. அரசு நலனில் தொடர்ந்து இப்படி கண்ணும் கருத்துமாக இருந்து வரும் ஸ்டாலினின் செயல்பாடுகளை அக்கட்சியினரை வியக்க வைத்தும் வருகிறது..!

English summary
Why MK Stalin didnt meet MK Azhagiri in Gopalapuram house
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X