Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பித்து வைத்த அறப்போர் இயக்கம்.. திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை கையில் எடுத்த புது விஷயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கேபிபார்க் குடியிருப்பை கட்டிய பிஎஸ்டி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதிநுட்ப நகரம் கட்டுமான ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தின் மீதான ஐஐடி ஆய்வறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

சென்னை புளியந்தோப்பில் கேபி பார்க் குடியிருப்புகளை தரமற்றதாக கட்டிய பிஎஸ்டி நிறுவனத்திற்கு இனி அரசு பணிகள் டெண்டர் வழங்கப்படாது என்று தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு முன்பு கூறியிருந்தாக தெரிவித்துள்ள அறப்போர் இயக்கம், தரமற்ற கட்டிடங்கள் கட்டும் நிறுவனத்திற்கு கட்டுமான டெண்டர் கொடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் அதிமுக ஆட்சியில் கேபி பார்க் கட்டிடத்தை கட்டி ஊழல் செய்த பிஎஸ்டி எம்பைர் நிறுவனம் தான் தற்பொழுது திமுக ஆட்சியில் பல கோடி மதிப்பில் பின்டெக் சிட்டி கட்டிடத்தை கட்ட இருக்கிறார்கள் என்றும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது.

why MK Stalin govt given Pintech City tender to PST empire ? TN bjp leader annamalai question

அண்ணாமலை கேள்வி: இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழக பாஜக திமுகவிற்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2009 ஆம் ஆண்டு, கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட நிதிநுட்ப நகரம், தற்போது, பிஎஸ்டி என்ற கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த 14 ஆண்டுகளாக ஒரு செங்கல் கூட வைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, திறனற்ற திமுக அரசு தேர்ந்தெடுத்துள்ள பிஎஸ்டி நிறுவனம், தரக்குறைவான கட்டிடங்களைக் கட்டியதாக இதே திமுக ஆட்சியால் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் என்பதுதான் விந்தை.

தரக்குறைவான கட்டிடங்களைக் கட்டியதாக பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் மீது புகார் வந்ததை அடுத்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைத்த IIT ஆய்வுக்குழு அறிக்கையில், இந்த நிறுவனம் கட்டிய ஏழை மக்களுக்கான குடியிருப்புகளில் செய்யப்பட்டுள்ள பூச்சுவேலை, 90% தரமற்றது என்றும், இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்றும் சட்டசபையில் திமுக அமைச்சர் தாமோ அன்பரசன் கூறினார்.

இனிமேல் அரசுப் பணிகள் பிஎஸ்டி நிறுவனத்திற்கு வழங்கப்படாது என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

why MK Stalin govt given Pintech City tender to PST empire ? TN bjp leader annamalai question

ஆனால் தற்போது, சென்னை நந்தம்பாக்கத்தில் 250 கோடி மதிப்பில் அமையவுள்ள நிதிநுட்ப நகரத்திற்கான கட்டுமானப் பணிக்கு, இதே பிஎஸ்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது திமுக அரசு. இனிமேல் அரசுப் பணிகளில் பங்கேற்க முடியாது என்று கூறப்பட்ட நிறுவனத்திற்கு, மீண்டும் அரசுப் பணி ஒப்பந்தம் வழங்கி அழகு பார்க்கிறது திமுக அரசு.

ஐஐடி ஆய்வறிக்கை என்ன ஆயிற்று? அதன் மேல் திறனற்ற திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? பொதுமக்கள் வரிப்பணத்தை, மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடாமல், இடையில் யாரோ சம்பாதிக்க, ஏற்கனவே தடை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிறுவனத்திற்கு வழங்குவதா?

உடனடியாக, பிஎஸ்டி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதிநுட்ப நகரம் கட்டுமான ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தின் மீதான ஆய்வறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

why MK Stalin govt given Pintech City tender to PST empire ? TN bjp leader annamalai question

நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு: பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில், "கடந்த 2021ம் ஆண்டு சென்னை புளியந்தோப்பில் கே.பி. பார்க் என்ற இடத்தில் 251 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டியதில் ஒரு மூட்டை சிமெண்டுக்கு 15 மூட்டை மணல் என்ற விகிதத்தில் கலந்து மிக பெரும் ஊழலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்ததோடு, கையாலேயே வீடுகளை உடைத்துவிடும் அளவிற்கு தரக்குறைவான கட்டுமானத்தை உருவாக்கி, மக்களின் வாழ்வுகளை கேள்விக்குறியாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் நாமக்கல், திருவள்ளூரில் கட்டிய அரசு மருத்துவமனைகள் தரமில்லாமல் கட்டப்பட்டதாக சொல்லப்படுவதோடு, விழுப்புரம், தளவானூரில் கட்டிய தடுப்பணை சில நாட்களிலேயே உடைந்து போனதயோ, அந்த நேரத்தில் இன்றைய அமைச்சர் பொன்முடி அவர்கள் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியதையோ யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

தரக்குறைவான கட்டுமானத்திற்கு அந்த நிறுவனமே காரணம் என்று குற்றம் சாட்டியதோடு, இனி எந்த காரணத்தை முன்னிட்டும் PST கட்டுமான நிறுவனத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாது என்று தமிழக தி மு க அரசு உறுதியளித்திருந்த நிலையில், தற்போது சென்னை நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை அதே PST நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறு என்று தி மு க அரசு ஏற்று கொள்கிறதா? நடந்த சம்பவங்களுக்கு PST நிறுவனம் பொறுப்பல்ல என்று தி மு க அரசு கூறுமேயானால், பின் அதற்கு யார் பொறுப்பு என்று குறிப்பிட வேண்டிய கடமையும் தி மு க அரசுக்கு உண்டு என்பதை உணர வேண்டும். எதன் அடிப்படையில் ஊழல் புரிந்த, தரக்குறைவான பணிகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு தி மு க அரசு ஒப்பந்தத்தை மீண்டும் அளித்தது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விளக்க வேண்டும்" இவ்வாறு நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+