காரணமே வேற.. எடப்பாடி,ஓபிஎஸை மோடி சந்திக்காதது ஏன்? அமித்ஷா மீட்டிங் - அண்ணாமலை ரைட் ஹேண்ட் விளக்கம்
சென்னை: நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சிகளிலும், விமான நிலையத்தில் அவரை வரவேற்கும் நிகழ்விலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இல்லாததை சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில் இது குறித்து பாஜக மாநில நிர்வாகி செல்வகுமார் ட்விட்டரில் விளக்கம் கொடுத்து உள்ளார்.
நேற்று 2 நாள் சுற்றுப்பயணமாக தென்மாநிலங்களுக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்றார். ஆனால், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பிரதமரை முறைப்பட வரவேற்க வருகை தராமல் புறக்கணித்தார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருகை தந்தார்.

சென்னையில் மோடி: சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி, அமைச்சர்கள் ஆகியோர் அரசு முறை வரவேற்பு கொடுத்தனர். ஆனால், அப்போது தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லை. அதன் பின்னர் சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளிலும் அண்ணாமலையை காண முடியவில்லை.
அதை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அமைந்து இருக்கும் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் மோடி பங்கேற்றபோதும், அதை தொடர்ந்து சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வுகளிலும் அண்ணாமலையை காண முடியவில்லை. பெரும்பாலான நிகழ்வுகளில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் போன்றோரே உடன் இருந்தார்கள்.
அண்ணாமலை எங்கே?: இந்த நிலையில் அதிமுகவுடனான கூட்டணி மோதல், தமிழ்நாடு பாஜகவிற்குள் வெடித்து இருக்கும் உட்கட்சி பூசல், முக்கிய நிர்வாகிகளின் விலகல், மாநில தலைமை மீது தேசிய தலைமைக்கு செல்லும் அடுக்கடுக்கான புகார்கள் போன்றவற்றால் அண்ணாமலை மீது டெல்லி தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும், இதனாலேயே அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை என்று விமர்சனங்கள் வந்தன.

அதேபோல், கூட்டணி கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரை தனித்தனியாக சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கும் பல்வேறு காரணங்களை பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். குறிப்பாக அதிமுக உட்கட்சி பூசலில் நேரடியாக தான் தலையிடுவதைபோல் இருக்கும் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி இந்த சந்திப்பை தவிர்த்ததாக கூறப்பட்டது.
காரணமே வேற: இந்த நிலையில் இது குறித்து பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவரும், அண்ணாமலைக்கு நெருக்கமானவருமான செல்வகுமார் ட்விட்டரில் விளக்கமளித்து உள்ளார். அதில், "கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை முடிவு செய்யும் பணியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள், மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுடன் டெல்லியில் அண்ணாமலையார் இருப்பதால், இன்று சென்னை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பாஜக சார்பில் வழிநடத்த வேண்டிய மாநில தலைவர் இங்கு இல்லாததால் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பை ரத்து செய்துள்ளார் பாரத பிரதமர்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications