என்னப்பா இவர் நம்ம ஆட்களையே பழி வாங்குகிறார்! எடப்பாடி செயலால் கொதித்த முக்குலத்தோர்.. நடந்தது என்ன?
சென்னை: எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோர் பிரிவினரை சேர்ந்த தலைவர்களை முதுகில் குத்திவிட்டார். 2011க்கு முன் எடப்பாடி யாரும் இல்லை. அவர் எம்எல்ஏவாக இருந்தாலும் பெரிய ஆள் இல்லை, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

நேற்று தேவர் குருபூஜையில், எடப்பாடி மரியாதை செலுத்தும் போதே.. அவருக்கு எதிராக கடுமையான கோஷம் எழுப்பப்பட்டது. எடப்பாடி ஒழிக.. இபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது .
கட்சி தொண்டர்கள் வேனை சூழ்ந்து பலத்த பாதுகாப்பு கொடுத்தும் கூட அங்கே பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தொண்டர்கள் ஒரு பக்கம் உற்சாக வரவேற்பு அளித்தாலும் கூட எடப்பாடி ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சிரித்தபடி எடப்பாடி சென்றார். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய?அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கார் அபிராமத்தில் மறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரின் கார் மீது கற்களும் வீசியதாக தகவல்கள் வருகின்றன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி; இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோர் பிரிவினரை சேர்ந்த தலைவர்களை முதுகில் குத்திவிட்டார். 2011க்கு முன் எடப்பாடி யாரும் இல்லை. அவர் எம்எல்ஏவாக இருந்தாலும் பெரிய ஆள் இல்லை. 2011ல் அமைச்சர் ஆன பின்தான் அவர் கட்சியில் முன்னிலைக்கு வருகிறார். அதன்பின் சசிகலா சிறைக்கு செல்லும் போது எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆகிறார். அவர் அப்போதும் பாப்புலர் லீடர் இல்லை. அதன்பின் தினகரன் மூலம் ஆட்சி நடத்தினார்.
அதன்பின் பாஜக , ஓ பன்னீர்செல்வம் உதவியோடு ஆட்சி செய்தார். அவர் தனக்கு உதவி செய்த சசிகலாவை கவிழ்த்தார். அதன்பின் தினகரனை ஏமாற்றினார். அதன்பின் ஓ பன்னீர்செல்வத்தை ஏமாற்றினார். இப்போது பாஜகவுடன் கூட்டணியை முறித்துவிட்டார். இப்படி முக்குலத்தோர் பிரிவை சேர்ந்தவர்களை எடப்பாடி ஏமாற்றி விட்டார் . என்னடா இவர் நம்ப ஆட்களையே பழி வாங்குகிறார்.. நாம் கட்சிக்காக உழைத்தோம். நம்ம ஆட்கள் கட்சிக்காக உழைத்தனர்.
ஆனால் இவர் என்ன இப்படி நம்ம ஆட்களையே போட்டு தாக்குகிறார். நம்ம ஆட்களையே பழிவாங்குகிறார். இவர் ஏன் இப்படி செய்கிறார். சரியில்லையே. முக்குலத்தோரை பார்த்து பார்த்து ஏமாற்றுகிறார். நம்ம இந்த கட்சிக்காக உழைத்தோம். அப்படி இருக்க நம்ம ஆட்களை ஏன் பழி வாங்குகிறார். வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை கூட அவர் கொடுத்து முக்குலத்தோர் ஒதுக்கீட்டை கூட குறைத்துவிட்டாரே.
கொடுமையிலும் கொடுமை: என்ன கொடுமை இது. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இவர் ஏன் கட்சிக்கு தலைவராக இருக்கிறார். ஒரு தலைவராக வரும் நபர் இதை எல்லாம் யோசிக்க வேண்டாமா? ஆரியம் திராவிடம் என்றால் என்ன என்று கூட தெரியவில்லையே. அவர் கட்சியில் திராவிடம் என்ற பெயர் உள்ளது. அப்போது கூட அதை பற்றி தெரியாது என்றால் என்ன அர்த்தம். ஆளுநரை எதிர்க்க தைரியம் இல்லை. அதனால் இப்படி எல்லாம் பேசுகிறார். கூட்டணியை விட்டு பிரிந்தும் கூட அவருக்கு தைரியம் இல்லை.

உண்மையிலேயே அவருக்கு திராவிடம் பற்றி தெரியாது என்றால் அவர் அதிமுகவில் இருக்கவேகூடாது . அதிமுகவின் மேல் பொறுப்பில் இருக்க கூடாது . ஆரியம் திராவிடம் பற்றி எல்லாம் அவர் இனிதான் படித்துவிட்டு பேச போகிறாரா? அது எல்லாம் படித்துவிட்டு பேச வேண்டிய விஷயமா என்ன? இதுவரை தெரியாதவருக்கு இனிதான் தெரிய போகிறதா? அவருக்கு ஆளுநரை எதிர்க்க தைரியம் இல்லை. அதனால் இப்படி எல்லாம் பேசுகிறார். கூட்டணியை விட்டு பிரிந்தும் கூட அவருக்கு தைரியம் இல்லை, என்று பிரியன் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
தவெகவில் இணையப் போகிறீர்களா?.. 25 எம்.எல்.ஏக்களில் இப்போது 17 பேர் தான்.. டென்ஷனாகிய சி.வி.சண்முகம் -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்..பொய்க்கால் குதிரை அரசு! விஜய்யை வெளுத்த எடப்பாடி பழனிசாமி -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications