400 இலக்கு.. "சார்சோ பார்" கோஷத்தை அப்படியே நிறுத்திய பாஜக.. மோடியும் பேசலையே.. என்ன காரணம்?
சென்னை: லோக்சபா தேர்தலில் கடந்த கட்ட தேர்தல் மற்றும் நடக்க உள்ள 4ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக 400 இலக்கு தொடர்பான கோஷத்தை எழுப்புவதை நிறுத்தி உள்ளது.
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. மொத்தத்தில், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் 969 மில்லியன் மக்கள் வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனர்.

மே 13ம் தேதி 96 தொகுதிகளில் நாடு முழுக்க நடத்தப்பட உள்ளது.
ஆந்திரப் பிரதேசம்: அனைத்து 25 தொகுதிகளில் தேர்தல்
தெலுங்கானா: 17 தொகுதிகளில் தேர்தல்
ஜார்கண்ட்: மாநிலத்தின் 14 தொகுதிகளில் 4 தொகுதிகளில் தேர்தல்
ஒடிசா: மாநிலத்தின் 21 தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் தேர்தல்
உத்தரபிரதேசம்: மாநிலத்தின் 80 தொகுதிகளில் 13 தொகுதிகளில் தேர்தல்
மத்தியப் பிரதேசம்: மாநிலத்தின் 29 தொகுதிகளில் 8 தொகுதிகளில் தேர்தல்
பீகார்: 40 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தேர்தல்
மகாராஷ்டிரா: மாநிலத்தின் 48 தொகுதிகளில் 11 தொகுதிகளில் தேர்தல்
மேற்கு வங்கம்: மாநிலத்தின் 42 தொகுதிகளில் 8 தொகுதிகளில் தேர்தல்
ஜம்மு காஷ்மீர்: ஐந்து தொகுதிகளில் 1 தொகுதிகளில் தேர்தல்
பாஜக கோஷம்: 2024 லோக்சபா தேர்தல் தொடக்கத்தில் 400 இடங்களை பெறுவோம் என்று பாஜக முழக்கம் வைக்க தொடங்கியது. ஆப் கி பார்.. சார்சோ பார் என்று கோஷம் போட்டது. அதாவது இந்த முறை 400 இடங்களில் வெல்வோம் என்று கோஷம் போட்டது.
பாஜக கோஷம்: ஆனால் பாஜக இப்படி கோஷமிட்டது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. 400 இடங்களை வெல்வோம் என்று அந்த கட்சியின் முழக்கம் முதல் கட்ட தேர்தலில் மிக பலமாக ஒலித்தது. ஆனால் இரண்டாம் கட்ட பிரச்சாரம் எதிலும்.. மூன்றாம் கட்ட பிரச்சாரத்திலும் அந்த சத்தம் கேட்கவே இல்லை.
உதாரணமாக மோடி கடைசியாக ராஜஸ்தானில் செய்த மூன்று பிரச்சாரத்திலும் 400 என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதை மட்டுமே கூறினார். மாறாக இலக்கு 400 என்பதை அவர் எங்குமே குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கவில்லை.
கோஷம் இல்லை: லோக்சபா தேர்தலில் கடந்த கட்ட தேர்தல் மற்றும் நடக்க உள்ள 4ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக 400 இலக்கு என்பது தொடர்பான சார்சோ பார் கோஷத்தை எழுப்புவதை நிறுத்தி உள்ளது.
பாஜகவின் 400 இலக்கு அந்த கட்சிக்கே எதிராக திரும்பியது. இடஒதுக்கீட்டை பாஜக நீக்கும், இறையாண்மைக்கு எதிராக அரசியல் சாசனத்தை பாஜக மாற்றும் என்றெல்லாம் மக்கள் இடையே எதிர்ப்பு வந்தது. அதோடு இல்லாமல் எதிர்கட்சிகளுக்கு பலம் இல்லை என்றால் பாஜக நினைத்ததை எல்லாம் செய்யும். அது மக்களுக்கே எதிராக செல்லும் என்று மக்கள் இடையே அச்சம் எழுந்தது.
அதோடு பாஜக 400 இடங்களை வெல்ல வாய்ப்பே இல்லை என்றும் கணிப்புகள் வர தொடங்கின. இதன் காரணமாக தற்போது பாஜக 400 இலக்கு என்பதற்கான சார்சோ பார் கோஷத்தை எழுப்புவதை நிறுத்தி உள்ளது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications