அந்த ஒரு விவகாரத்தில் நெருக்கடி... பா.ம.க.வை தனித்துப் போட்டியிட வைத்த திமுகவின் அடடே வியூகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடும் என அறிவித்ததே திமுகவின் வியூகத்தால்தான் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள். ஒரே ஒரு விவகாரத்தை முன்வைத்துதான் பா.ம.க.வை தனித்துப் போட்டியிட வைத்ததாம் திமுக என்றும் கூறப்படுகிறது.

Recommended Video

    PMK VS AIADMK | உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி | Oneindia Tamil

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகியா தேதிகளில் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இதுவரை வெளிப்படையான சலசலப்பு எதுவும் இல்லை.

    அதிமுக கூட்டணியில் இருந்த பா.ம.க, திடீரென தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்தது. அதேநேரத்தில் கால அவகாசம் இல்லாததால் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை; இருப்பினும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம் என்றது பா.ம.க. அதாவது அங்கிட்டும் இங்கிட்டுமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறது பா.ம.க.

    தேமுதிக, மநீம, நாம் தமிழர் தனித்தே போட்டி

    தேமுதிக, மநீம, நாம் தமிழர் தனித்தே போட்டி

    அமமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவும் திடீரென தனித்துப் போட்டி என அறிவித்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் தனித்தே போட்டியிடுகின்றன. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கிவிட்டது.

    ஒத்திவைக்க முயற்சி

    ஒத்திவைக்க முயற்சி

    இதனிடையே உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது எப்படி என திமுகவில் அண்மையில் நடந்த விவாதம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்பட்டவைகளில் மிக முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது திமுகவுக்கு பின்னடைவைத் தரும்; அதனால் அடுத்த ஆண்டுக்கு தேர்தலைத் தள்ளிப்போடலாம் என்று 9 மாவட்ட நிர்வாகிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வலியுறுத்தியிருந்தனர். இது தொடர்பாக பல கடிதங்களும் அவருக்குச் சென்றன. திமுக மூத்த நிர்வாகிகளின் கருத்தை பிரதிபலிக்கிற மாதிரி, உளவுத்துறையும் அறிக்கை தந்தது. அதனால் உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்கலாம் என்றுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டிருந்தாராம்.

    உள்ளாட்சி தேர்தலுக்காக நகை கடன் தள்ளுபடி

    உள்ளாட்சி தேர்தலுக்காக நகை கடன் தள்ளுபடி

    ஆனால், உச்சநீதிமன்றம் இதனை ஏற்கவில்லை. இப்படி நீதிமன்ற நெருக்கடிகளால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில், தேர்தல் வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கட்சியின் மூத்தவர்களான துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி ஆகியோரிடம் விவாதித்தார் முதல்வர் ஸ்டாலின். நகை கடன் தள்ளுபடி செய்கிறோம் என சட்டசபையில் அறிவித்தால் பெண்களின் நம்பிக்கையை பெற்றுவிடலாம் என சொல்லப்பட்ட யோசனை ஏற்று அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

    பாமக தனித்து போட்டி- பின்னணியில் திமுக

    பாமக தனித்து போட்டி- பின்னணியில் திமுக

    மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வட தமிழகத்தில் வருகிறது. அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக, அதிமுகவுக்கு ஒரு பலம் தான். ஏனெனில், நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது அந்த பலம் அதிமுகவுக்கு கைக்கொடுக்காமல் போயிருக்கலாம். ஆனால், இப்போது நாம் ஆளும் கட்சி. நிதி நெருக்கடிகளால் சில முக்கிய விசயங்களை நம்மால் செய்ய முடியவில்லை. மக்களுக்கு அந்த அதிருப்தி இருக்கத்தான் செய்யும். அதனால், அதிமுகவுக்கு பலம் கொடுக்கும் பாமகவை கூட்டணியிலிருந்து விலக்க வைத்து தனித்துப் போட்டியிட வைத்தால் போதும். வாக்குகள் பிரிகிற போது திமுக எளிதாகவே ஜெயிக்கும் என சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த பொறுப்பு மூத்த அமைச்சர் துரைமுருகனிடம் கொடுக்கப்பட்டது. துரைமுருகன் எடுத்த ரகசிய முயற்சியில் குறிப்பாக அந்த ஒரு அறக்கட்டளை விஷயத்தை வைத்தே பா.ம.க.வை தனித்துப் போட்டியிடும் அறிவிப்பை வெளியிட வைத்துவிட்டதாம் திமுக.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+