ராத்திரி ஆனா போதுமே.. சென்னையில் இரவு நேரங்களில் பாலங்களை மூடுவது ஏன் தெரியுமா? பகீர் காரணம்!
சென்னை: சென்னையில் இருக்கும் மேம்பாலங்களை இரவு நேரத்தில் மோதும் பழக்கம் உள்ளது. இதற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக போலீசார் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் முக்கியமான பல மேம்பாலங்கள் உள்ளன. கோடம்பாக்கம் மேம்பாலம், ஜெமினி பாலம், நேப்பியர் பாலம், அடையாறு பாலம், வடபழனி பாலம், தி நகரில் உள்ள பாலம், அசோக் நகர் பாலம், கத்திப்பாரா பாலம், கோயம்பேடு பாலம் என்று ஏகப்பட்ட பாலங்கள் நகரப்பகுதியில், புறநகர் பகுதியிலும் உள்ளன.

பெங்களூர் அளவிற்கு சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க இந்த பாலங்கள் காரணம், முறையாக திட்டமிட்டு கட்டப்பட்ட பாலங்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் சென்னையில் வெகுவாக குறைந்து உள்ளது.
உதாரணமாக முன்பெல்லாம் வடபழனி சிக்னலில் பல மணி நேரம் நிற்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் அங்கே பாலம் கட்டப்பட்ட பின் இந்த சிக்கல் இல்லை. மக்கள் எளிதாக பாலத்தில் பயணம் செய்ய முடிகிறது.
ஆனால் இந்த பாலங்கள் மக்கள் பயன்பாட்டில் இருந்தாலும் சென்னையில் இருக்கும் மேம்பாலங்களை இரவு நேரத்தில் மோதும் பழக்கம் உள்ளது. இதற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக போலீசார் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காரணங்கள்:
1. இரவு நேரங்களில் மேம்பாலங்களில் காரை நிறுத்திவிட்டு சிலர் தூங்கும் வழக்கம் உள்ளது. இதை தடுக்கவே இந்த ஏற்பாடு.
2. இரவு நேரங்களில் சில காதல் ஜோடிகள் உல்லாசமாக இருக்க மேம்பாலங்களை பயன்படுத்துகின்றனர்.
3. இரவு நேரங்களில் மேம்பாலங்களில் குற்றச்செயல்களை கண்காணிப்பது கடினம்.
4. மேம்பாலங்களில் இருந்து இரவு நேரங்களில் மக்கள் யாராவது தற்கொலை செய்ய சென்றால் தடுப்பது கடினம்.
5. வீடு இல்லாதவர்கள் இரவு நேரங்களில் மேம்பாலங்கள் மேல் உறங்குவதை தடுக்க ஏற்பாடு.
6. சில இளைஞர்கள் மேம்பாலங்களில் ஸ்டாண்ட் செய்யும் வழக்கம் இருந்தது. இதை தடுக்கவும் இந்த ஏற்பாடு.
7. அண்ணலையில் இருக்கும் ஜெமினி பாலம் உட்பட சில பாலங்கள் அருகே முக்கியமான சில இடங்கள் உள்ளன. உதாரணமாக ஜெமினி பாலம் அருகே அமெரிக்க துணை தூதரகம் உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கே பாலங்கள் இரவில் மூடப்படுகின்றன.
8. ஒரு காலத்தில் பாலத்தில் உடல்களை தொங்கவிடும் குற்றச்செயல்கள் நடந்து வந்தன. அவை தற்போது தடுக்கப்பட்டு உள்ளன.
இப்படி பாலங்களை மூடுவதில் சில விதி விலக்குகள் உள்ளன. பண்டிகை காலங்களில் இரவு நேரத்தில் பெரிய அளவில் போக்குவரத்து நேரில் ஏற்படும். உதாரணமாக தீபாவளி, பொங்கலுக்கு மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். அது போன்ற சமயங்களில் பாலங்களை திறந்து வைக்கும் வழக்கம் உண்டு. அதேபோல் முதல்வர் போன்ற பெரிய விவிஐபிக்கள் செல்கையில் சிக்கல் இன்றி செல்ல பாலங்கள் திறந்து வைக்கப்பட்டு இருக்கும்.

மற்ற நேரங்களில் பாலங்கள் மூடப்படுவது வழக்கம் ஆகி உள்ளது. அதேபோல் சென்னையில் பாலங்களை அதிகாலையில் திறந்துவிடுவார்கள். 4 மணிக்கு பிறகும் வரிசையாக ஒவ்வொரு பாலமாக பேரிகேட் நீக்கப்பட்டு திறக்கப்படும் வழக்கம் உள்ளது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications