சாரை சாரையாக வருகிறார்களே.. யாருங்க இவங்களாம்? கிடுகிடுத்த கிரிவலப்பாதை.. உளவில் இறங்கிய போலீஸ்
சென்னை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாமியார் வேடத்தில் தங்கி வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஆன்மீக சுற்றுலா தலம் ஆகும். கிரிவல காலத்தில் இங்கே ஆயிரக்கணக்கில் மக்கள் செல்வது உண்டு. பல மாநிலங்களில் இருந்து மக்கள் இங்கே வந்து கிரிவலம் செல்வது வழக்கம்.

இங்கே கிரிவலம் சென்றால் எல்லா கஷ்டங்களும் தீரும் என்பதுதான் ஐதீகம். இங்கே பெண்கள், வயதானவர்கள் என்று பல லட்சம் பேர் பயணம் மேற்கொள்வார்கள்.
இந்த நிலையில்தான், திருவண்ணாமலை கிரிவல பாதையில் தங்கியுள்ள சாமியார்கள் பலரும் போலீசார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பல ரவுடிகள், கொலையாளிகள் தலைமறைவு வாழ்க்கையை வாழ்வதற்காக இங்கே வருவதாக கூறப்படுகிறது.
பல குற்றங்களை துறந்துவிட்டு கடைசியில் சிறைக்கு செல்லாமல், போலீசிடம் சிக்காமல் நிம்மதியாக வாழ்க்கை வாழ இவர்கள் இங்கே வருவதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையில், அண்ணாமலையார் கோவில் அருகில் இவர்கள் வசித்து வருகின்றனர். இங்கே கிரிவல பாதை மற்றும் ஆசிரம பகுதிகளில் வெளிபுற இடங்களில் காவி கட்டி பலர் வசித்து வருகின்றனர்.
அங்கே குடில் அமைத்தும், வெளிப்புறத்திலும் சுகமாக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இங்கேயே பலருக்கும் கோவில் அன்னதானம் கிடைக்கிறது. அதேபோல் ஆன்மிக அமைப்புகள், ஆசிரமங்கள் இவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகின்றன. இதனால் செய்யாத குற்றங்களை எல்லாம் செய்துவிட்டு சிலர் சாமியார் வேடம் போட்டு இங்கே தங்கி வருவது தெரிந்துள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாமியார் வேடத்தில் தங்கி வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தற்போது இவர்களை கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.

இங்கே பல கிரிமினல்கள் சாமியார்கள் என்ற பெயரில் தங்கி உள்ளனர். இதனால் மக்கள் பாதுகாப்பிற்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. வேறு ஊர்களில் குற்றம் செய்கிறார்கள். அதன்பின் அங்கிருந்து எஸ்கேப் ஆகி திருவண்ணாமலை வருகிறார்கள்.
பின்னர் திருவண்ணாமலையில் தங்கி இங்கேயே அருள் வழங்க தொடங்கிவிடுகிறார்கள். இவர்களால் உண்மையான சாமியார்களின் மதிப்பும் போகிறது. அதனால்தான் இவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் போலீசார் இறங்கி உள்ளனர் . பல குற்றங்களை செய்துவிட்டு தலைமறைவான நபர்களின் போட்டோக்களை வைத்து போலீசார் இங்கே தீவிர தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications