எல்லாம் சரி.. மக்கள் மன்றத்தை எதற்காக கலைத்தார் ரஜினி?.. காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி அரசியலுக்கு வரவில்லை சரி, ரஜினி மக்கள் மன்றம் ஏன் கலைக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் தனது அரசியல் வருகைக்கு எப்போதோ முற்றுப்புள்ளி வைத்துவிட்டாலும் கூட விடாமல் ரசிகர்கள் அவரது வருகையை எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர். காலம் நிச்சயம் மாறும் , தலைவரின் மனமும் மாறும் என கூறிவந்தனர்.

அதற்கேற்றாற்போல திடீரென மக்கள் மன்ற நிர்வாகிகளின் மாவட்டச் செயலாளர்களை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

ரஜினி கோடம்பாக்கம்

ரஜினி கோடம்பாக்கம்


இதையடுத்து போயஸ் தோட்டத்திலிருந்து ரஜினி கோடம்பாக்கம் கிளம்புவதற்கு முன்னர் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன் என தெரிவித்திருந்தார். இதனால் இன்று தலைவர் மாஸ் அறிவிப்பை அறிவிக்க போகிறார் என்றார்கள்.

சாத்தியம்

சாத்தியம்

ஆனால் அவரோ அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. கால சூழல் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை என சொல்லிவிட்டார். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு அதை பழையபடி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்றும் அறிவித்தார்.

வரவில்லை

வரவில்லை

அரசியலுக்கு வரவில்லை எல்லாம் சரி, ஆனால் மக்கள் மன்றத்தை ஏன் கலைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில் மன்றம் கலைப்பு என்ற ரஜினியின் முடிவு சரியானது. அரசியலே இல்லை என்கிற போது அதற்கான அமைப்பு மட்டும் ஏன் உயிர்ப்புடன் இருக்க வேண்டும்?

மக்கள் மன்றம்

மக்கள் மன்றம்

ரஜினி மக்கள் மன்றத்தை அப்படியே விட்டுவிட்டால் அதை வைத்து யாரேனும் தவறாக பயன்படுத்தக் கூடும் என நினைத்ததால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டார். ஆனால் எப்போதும் போல தனது பிறந்தநாள்களின் போதும் இயற்கை இடர்களின் போதும் ரசிகர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்ய ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+