ரேஷன் அரிசி உண்மையில் நீரில் மிதப்பது ஏன்? இவ்வளவு பெரிய நல்ல விஷயமா.. வியக்க வைக்கும் காரணம்?
சென்னை: இணையத்தில் அவ்வப்போது பொய்யான செய்திகள் உண்மை போலவே டிரெண்டாவது வழக்கம். அப்படித்தான் தற்போது ரேஷன் அரிசி நீரில் மிதப்பதாக செய்தி ஒன்று டிரெண்டாகி வருகிறது.
சில ஊடகங்கள் கூட இதை அதிர்ச்சி அளிக்கும் விதமாக செய்தியாக வெளியிட்டு உள்ளன. பிளாஸ்டிக் அரிசி மிதக்கிறது என்று கூறி செய்தியாக வெளியிட்டு வருகின்றனர். அதாவது ரேஷனில் வாங்கும் அரிசி நீரில் மூழ்குவது இல்லை. அவை மிதக்கின்றன. அதேபோல் பிசு பிசு என ஆகிவிடுகிறது.

இதனால் ரேஷன் அரிசியை பிளாஸ்டிக் அரிசி என்று கூறி இவர்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் மக்கள் பலரும் ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி உள்ளதாக அச்சம் அடைந்துள்ளனர். முக்கியமாக திருவள்ளூர் மாவட்டத்தில்.. 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி போல இது பெரிய வதந்தியாக பரவிக்கொண்டு இருக்கிறது.
என்ன அரிசி: இது பிளாஸ்டிக் அரிசி எல்லாம் கிடையாது., இவை fortified அரிசி ஆகும். அதாவது மதிப்பு கூட்டப்பட்ட அரிசி ஆகும். உலக சுகாதார மையம் அனுமதி வழங்கிய முறைப்படி மதிப்பு கூட்டப்பட்ட fortified அரிசி ஆகும் இவை.
அரிசியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொடியைச் சேர்ப்பதுதான் மதிப்பு கூட்டப்பட்ட அல்லது போர்டிபைடு அரிசி ஆகும். சாதாரண அரிசி தானியங்களின் மேற்பரப்பில் பல அடுக்குகளில் வைட்டமின் மற்றும் தாதுக் கலவையை ஸ்ப்ரே உதவியுடன் அடிப்பதன் மூலமாக அரிசியை மேலும் சத்தான பொருளாக்க முடியும். .
இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் பிற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் போன்ற பல நுண்ணூட்டச்சத்துக்களால் அரிசியை வலிமைப்படுத்த முடியும். அரிசியில் கார்ப்ஸ் மட்டும் இருக்கும் நிலையில் கூடுதல் ஊட்டச்சத்துக்களை இப்படி சேர்ப்பதன் மூலம் அது மேலும் பயன் அளிக்கும். ஆனால் இதில் அடிக்கப்படும் ஊட்டச்சத்து பொருட்கள் காரணமாக அவை எளிதாக நீரில் மூழ்கிவிடாது.
ஊட்டச்சத்துக்கள் காரணமாக அவை நீரில் மிதக்கும். அதேபோல் நீரில் போட்டதும் பிசுபிசுப்பு என்று ஆகிவிடும். இதன் காரணம் அதில் இருக்கும் கூட்டப்பட்ட ஊட்டச்சத்துக்கள்தான். இதைத்தான் மக்கள் பார்த்து தற்போது பிளாஸ்டிக் அரிசி என்று பயந்து வருகின்றனர்.
அரிசி உற்பத்தி: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்திற்கும் அரசு சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆக்சன் மேல் ஆக்சன்; மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980-ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 01.10.2023 முதல் 31.10.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ21,97,070/- (ரூபாய் இருபத்தொரு லட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து எழுபது மட்டும்) மதிப்புள்ள 3474 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 289 எரிவாயு உருளைகள், 691 கிலோ கோதுமை, 230 கிலோ துவரம்பருப்பு, 660 லிட்டர் மண்ணெண்ணெய், 440 பாக்கெட் பாமாயில், சர்க்கரை 20 கிலோ ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 161 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.
குற்றச்செயலில் ஈடுபட்ட 842 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980- ன் கீழ் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications