பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி சந்தித்தது ஏன்? விளக்கத்தில் உருக்கம்
சென்னை: குடும்ப நண்பரான நயினார் நாகேந்திரனை சந்திப்பதில் கூட அரசியல் சாயம் பூசுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்பி வேலுமணி தனது எக்ஸ்வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கழகக் கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினேன்.

அதன்பிறகு எனது குடும்ப நண்பர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினேன். அப்பொழுது, முன்னாள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வை, இன்றைய நாளிதழ் அரசியல் சாயம் பூசி செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் கழகத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இந்நிலையில் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களுக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதிலிருந்தே எஸ்.பி.வேலுமணி அதிமுகவுக்கு எதிராக செயல்படுகிறார், பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தது. மகாராஷ்டிரா அரசியலில் ஏக்நாத் ஷிண்டேவை போல் இவர் செயல்படுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
ஆனால் எஸ்.பி.வேலுமணி அதிமுகவுக்காகத்தான் உழைத்து வருகிறார் என்பது அவர் செயல்பாடுகள் மூலம் அறியப்பட்டது. வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க இப்போதே அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 10 முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய குழுவை மாவட்ட வாரியாக களஆய்வு மேற்கொள்ள நியமித்துள்ளார். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கான அதிமுக கள ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, வரகூர் அருணாச்சலம் ஆகியோர் பங்கேற்று இருந்தனர். இந்த கூட்டத்தில் அதிமுகவினர் இருகுழுவாக பிரிந்து மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான எஸ்.பி.வேலுமணி திடீரென பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இருவரும் ஒரு சோஃபாவில் அருகருகே அமர்ந்து கொண்டு பேசிய புகைப்படங்கள் வைரலானது. அதிமுக - பாஜக இடையே வார்த்தை போர் நீடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் விரைவில் கட்சி மாறுவார் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இவர்களது சந்திப்பு சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு எஸ்பி. வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். அதில் நண்பரான நயினார் நாகேந்திரனை சந்தித்ததை எப்படி அரசியல் சாயம் பூசி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications