"தலைவருக்கு" அழகா இது.. மத்தவங்க தலையில் கட்டிட்டு போகலாமா..சமகவை நோக்கிப் பாயும் கணைகள்!
சரத்குமார் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது தெரியவில்லை
சென்னை: கட்சியை ஆரம்பிச்சிட்டு தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதெல்லாம் தலைமை பதவிக்கு அழகா என்ற கேள்வி கணைகள் சமகவை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கின்றன..!
அதிமுக கூட்டணியில் இருந்த சிறு கட்சிகள் எல்லாம் சிதறி விட்டன.. கருணாஸ், தமீம் அன்சாரி போலதான் சமக சரத்குமாரும்.. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டாலும், குறிப்பிட்ட அளவிலான சீட்டுகளை வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே பிடிவாதம் காட்ட தொடங்கிவிட்டனர்.
எங்களை மதிச்சு வந்து, சீட் தந்தால் கூட்டணிக்கு ஓகே.. அதைவிட்டுட்டு ஒரு சீட், 2 சீட் தந்தால் ஏற்க மாட்டோம்.. எங்கள் பலத்தை அறிந்து சீட் தர வேண்டும்.. நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடவேதான் எங்கள் தனித்தன்மை வெளியே தெரியாமல் போய்விட்டது" என்றெல்லாம் சரத்குமார் பேச ஆரம்பித்தார்.

எடப்பாடி பழனிசாமி
ஆனால், இதை அதிமுக கொஞ்சமும் காதில் வாங்கவில்லை.. இதற்கு பிறகுதான் அதிமுகவுக்கு ஷாக் தந்தால், சீட் விஷயத்தில் தாராளம் காட்டப்படும் என்று கணக்கு போட்டு, திடீரென சசிகலாவை போய் சந்தித்தார்.. இதையும் அதிமுக கண்டுகொள்ளவே இல்லை. இதற்கு பிறகு வேறு வழியில்லாமல் கமலை போய் சந்தித்து கூட்டணி வைத்தார்.. 40 சீட் ஒதுக்கீடு என்றார்கள்.. பிறகு 37 சீட் ஓகே ஆகி உள்ளது..

அதிமுக
இப்போது விஷயம் என்னவென்றால், கூட்டணி மற்றும் சீட் விஷயத்தில் அதிமுகவில் இவ்வளவு கெடுபிடிகள், காட்டிய நிலையில், இந்த முறை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று சரத்குமார் சொல்லி உள்ளதுதான்.. இவரும் போட்டியிடவில்லையாம்.. ராதிகாவும் போட்டியிடவில்லையாம். இதற்கு இவர்கள் சொல்லும் காரணம், தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டி உள்ளது என்கிறார்கள்.

சரத்குமார்
இந்த முறை தேர்தலில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி முதல் சரத்குமார் சார்ந்துள்ள கமல் வரை எல்லாருமே தேர்தலில் நேரடியாக போட்டியிடுகிறார்கள்.. அவரவர்கள் தங்களுக்கு தாங்களே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. அதிலும் கமல், தன் கட்சி வேட்பாளர்களுக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார்.. கடந்த எம்பி தேர்தலின்போது கமல் போட்டியிடாதது பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் கிளப்பி வந்தது.

வேட்பாளர்கள்
ஒரு கட்சி தலைவரே தேர்தலில் போட்டியிடாதது, மற்ற வேட்பாளர்களுக்கு எப்படி நம்பிக்கை தரும்? முன்மாதிரியாக வந்து களத்தில் குதிக்க வேண்டாமா? என்ற கேள்விகளும் அன்றைய நாட்களில் எழவே செய்தன. இதற்கு முன்பு சரத்குமாரும் தேர்தலை சந்தித்துள்ளார்.. வெற்றி பெற்றுள்ளார்.. ஆனால், இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.. இதில் தோல்வி அடைந்தால் மீண்டும் அரசியலில் தலைதூக்குவது என்பது கடினமான சூழல் நிலவுகிறது..

தயக்கம்
கட்சி தலைவரே போட்டியிட தயக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்விகளும் எழுகின்றன. இவருக்கு வேறு ஏதாவது காரணம் இருந்தாலும் ராதிகா ஏன் போட்டியிடவில்லை? அரசியலில் ஈடுபடுவதற்காகத்தானே டிவி சீரியலுக்கு முழுக்கு போட்டார்? தேர்தலை சந்திக்காத நிலையில், டிவியை ஏன் விட்டுவிட்டு வந்தார்? என்ற சந்தேகங்களும் வருகின்றன.

தொகுதி
சின்னம் பிரச்சனை, வேட்பாளர்கள் தாங்கள் நிற்கின்ற தொகுதிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்க முடியாமல் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியாமல் உள்ள பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் சமகவை சூழ்ந்துள்ளன.. கூட்டணியில் இருக்கும்போதே இவ்வளவு பிரச்சனைகள் என்றால், தனித்து போட்டி என்ற முடிவை சொன்னதுபோலவே சமக எடுத்திருந்தால் என்னாகி இருக்கும்? ஒருவேளை அதிமுக கூட்டணியில் 2 சீட் ஒதுக்கியிருந்தாலும், சரத்குமாரும் ராதிகாவும் போட்டியிடாமல் இருந்திருப்பார்களா? அதுவும் தெரியவில்லை.. அந்த 37 பேரும் வெற்றி பெற்று வந்தால் சரி..!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications