என்னதான் தேமுதிக தேய்ந்து போனாலும்.. அரசியல்வாதிகளுக்கு "விஜி" மீதான அன்பு மாறவே மாறாது!
சென்னை: எப்படியிருந்த கட்சி இன்று இப்படி இருக்கிறதே என சாதாரண மக்களும் கவலைப்படுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதர்தான்.
Recommended Video
2005 ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கி 2006 தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தை வென்றது. அதன் பின்னர் அதிமுகவுடன் 2011-ஆம் ஆண்டு கூட்டணி அமைத்து எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் தேர்வானார்.
இதற்கடுத்து தேமுதிக சந்தித்த தேர்தல்கள் எல்லாமே தோல்வியில் முடிந்தது. காரணம் கூட்டணி முடிவுகளில் அவசரம் காட்டியது. 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் டெபாசிட்டை இழக்கும் அளவுக்கு தோல்வியுற்றது.

அமமுக
கடந்த தேர்தலில் கள்ளக்குறிச்சியில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிரேமலதாவே டெபாசிட் இழந்தார். கடந்த சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேரத்திற்கு முன்னர் தேமுதிகவின் வாக்கு சதவீதத்தை அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேசியிருந்தன.

விஜய பிரபாகரன்
இவையெல்லாம் பிரேமலதா, சுதீஷ், வயது வித்தியாசமின்றி எல்லாரையும் கண்டபடி பேசிய விஜய பிரபாகரன் ஆகியோருக்குத்தானே தவிர விஜயகாந்திற்கு அல்ல. காரணம் அவர் அரசியல் மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் ஏராளமானோருக்கு உதவியவர் கேப்டன்.

சினிமா
சினிமா துறையில் விஜி என அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் படம் எடுத்து தோற்ற தயாரிப்பாளர்கள் கடனை அடைக்க தேவையான உதவிகளை செய்திருக்கிறார். இன்றும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கரைபடியாத கைக்கு சொந்தக்காரர். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் ஸ்டாலின் தேமுதிக கரையக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

உத்தரவு
தேமுதிக தோல்வி அடைந்ததால் திமுக மாவட்டச் செயலாளர்களை அணுகி பலர் கட்சியில் இணைய விரும்புவதாக கிடைத்த தகவல் ஸ்டாலினுக்கு சென்றது. அதற்கு ஸ்டாலின் தேமுதிகவினரை திமுகவில் சேர்த்து நண்பன் மனம் நோகும்படி நடந்துக் கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டுள்ளாராம்.

பாசம்
விஜயகாந்த் மீது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மிகுந்த பாசமும் மரியாதையும் உண்டு. ஆனால் அவர்கள் முன்வைத்த விமர்சனங்கள் யாரால் வைக்கப்பட்டது என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததே. விஜயகாந்தின் உடல்நலன் மட்டும் நன்றாக இருந்திருந்தால்.. இன்றைய அரசியல் களம் வேறு மாதிரியாக இருந்திருக்கும். கள்ளம் கபடமற்ற பாசத்தால் அனைவரையும் கட்டி போட்டுள்ளார் விஜயகாந்த்.

தேர்தல்
தேமுதிக ஒரு தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் அவரை வீடு தேடி ஸ்டாலின் போய் சந்தித்தது கட்சியை தாண்டி நட்பே பெரிது என்பதை உணர்த்திவிட்டது. அது போல் தன் வீடு தேடி முதல்வர் வந்து நலம் விசாரித்ததை பார்க்கும் போது கேப்டன் சம்பாதித்து வைத்துள்ளது அன்பும் நட்பும்தான்.












Click it and Unblock the Notifications