Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவுரவம்! சுப்புலட்சுமி மொடக்குறிச்சி எம்எல்ஏவாகியிருந்தால் முதல் பெண் சபாநாயகராகியிருப்பார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக துணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்காதது ஏன்? திமுகவில் அவருக்கு ஏற்பட்ட அதிருப்தி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

எம்ஜிஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். அதிமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வைத்து அவரை கதர் துறை அமைச்சராக்கினார் எம்ஜிஆர்.

இதையடுத்து 1980 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால் நாஞ்சில் மனோகரனுடன் சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இணைந்தார். இதையடுத்து 1989 இல் மொடக்குறிச்சி எம்எல்ஏவாக சுப்புலட்சுமி தேர்வு செய்யப்பட்டு சமூக நலத் துறை அமைச்சராக இருந்தார்.

எம்பி

எம்பி

பல்வேறு முறை எம்எல்ஏவாகவும் எம்பியாகவும் இருந்தார். திமுகவில் கருணாநிதி குடும்பத்தினரால் பெரிதும் மதிக்கப்படுபவர். திமுகவின் மூத்த முன்னோடி. மேலும் 1996 ஆம் ஆண்டு மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில் சுப்புலட்சுமி போட்டியிட்டார். அப்போது அந்த தேர்தலில் 1306 பேர் போட்டியினர். இந்த தேர்தலில் அவர்கள் அனைவரையும் தோற்கடித்து சுப்புலட்சுமி வென்றது வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். 1996 ஆம் ஆண்டு திமுக துணை பொதுச் செயலாளராக இருந்த சற்குண பாண்டியன் மறைவுக்கு பிறகு அந்த பதவிக்கு வந்தவர் சுப்புலட்சுமி.

 துணை பொதுச் செயலாளர்

துணை பொதுச் செயலாளர்


திமுகவில் உள்ள ஒரே பெண் துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமிதான். நிறைய போராட்டங்களை நடத்தி மக்கள் பிரச்சினைகளுக்காக சிறை சென்றவர். கருணாநிதியின் நம்பிக்கைகுரிய விசுவாசி. ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். இத்தகைய பெருமைக்குரிய சுப்புலட்சுமி ஜெகதீசன், நேற்றைய தினம் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இது திமுக நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் அரசியலிலிருந்தே அவர் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். உடல்நல பிரச்சினையால் திமுகவிலிருந்து சுப்புலட்சுமி விலகுவதாக டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருந்தார். ஆனால் திமுக வட்டாரங்களிடம் விசாரித்தவரையில் சுப்புலட்சுமி ஜெகதீசனின் விலகலுக்கு திமுக தலைமை மீதான அதிருப்தியே காரணம் என சொல்கிறார்கள்.

அதிமுக டூ திமுக

அதிமுக டூ திமுக

இதற்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு வந்த அமைச்சர் முத்துசாமிதான் காரணம் என்று கூறப்படுகிறது. இவருக்கும் சுப்புலட்சுமிக்கும் இடையே பனிப்போர் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் துணை பொதுச் செயலாளர் என்ற முறையில் தன்னிடம் முத்துசாமி தரப்பு ஆலோசனை பெறுவதில்லை என்பது சுப்புலட்சுமியின் குற்றச்சாட்டு.

திமுக தலைமை

திமுக தலைமை

இதை பல முறை திமுக தலைமையிடம் புகாராக தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சுப்புலட்சுமியை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வைத்தார் ஸ்டாலின். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் வெறும் 280 வாக்குகளில் தோல்வியடைந்தார்.

 மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி

எத்தனையோ முறை மொடக்குறிச்சியில் வெற்றி வாகை சூடிய நிலையில் சொற்ப அளவிலான வாக்குகளில் தோல்வியடைந்ததற்கு அமைச்சர் முத்துசாமியும் அவரது ஆதரவாளர்களும்தான் காரணம் என்ற கருத்து சுப்புலட்சுமி ஆதரவாளர்களிடையே பரவியது. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பே சுப்புலட்சுமி இனி தேர்தலில் போட்டியிடுவதில்லை என கருதியிருந்த நிலையில் அவர் வெற்றி பெற்றால் அவருக்கு சபாநாயகர் பதவியை கொடுக்க ஸ்டாலின் கருதியிருந்தாராம்.

முதல் பெண் சட்டசபை தலைவர்

முதல் பெண் சட்டசபை தலைவர்

இதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் சட்டசபைத் தலைவர் என்ற அந்தஸ்தை சுப்புலட்சுமி கொடுக்கவிருந்ததாராம். இதை அறிந்துதான் அந்த அமைச்சர் முத்துசாமி சாமர்த்தியமாக காய் நகர்த்தி தனது ஆதரவாளர்கள் மூலம் உள்ளடி வேலைகளை பார்த்ததாக கூறப்படுகிறது. தன் கட்சியை சேர்ந்தவராலேயே தான் தோற்கடிக்கப்பட்டது சுப்புலட்சுமியை மனம் வருந்த செய்ததாக கூறப்படுகிறது.

 அமைச்சருக்கு இணையான பதவி

அமைச்சருக்கு இணையான பதவி

அமைச்சருக்கு இணையான பதவி என கருதப்படும் மாநிலங்களவை எம்பி பதவியாவது தனக்கு கிடைக்கும் என சுப்புலட்சுமி எதிர்பார்த்ததாகவும் அதுவும் அவருக்கு கிடைக்காமல் போய்விட்டதால் அவரது அதிருப்தி மேலும் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக நேற்றைய தினம் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டாராம் சுப்புலட்சுமி. கடந்த ஆகஸ்ட் மாதமே விலகல் கடிதத்தை கொடுத்துவிட்டதால்தான் திமுகவின் முப்பெரும் விழாவுக்கும் சுப்புலட்சுமி போகவில்லை என கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் சார்பில் மூத்த அமைச்சர்கள் சுப்புலட்சுமியை சமாதானப்படுத்த முயன்றும் 2021 சட்டசபைத் தேர்தலில் சொந்த கட்சியினரே முதுகில் குத்திய துரோகத்தால் அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. திமுகவில் மிகவும் சீனியர் என்பதால் அவரை தக்க வைத்துக் கொள்ளவில்லை என்ற அவப்பெயர் ஸ்டாலினுக்கு ஏற்படும் என்பதாலும் அந்த பதவியில் வேறு யாரையும் அமர்த்தாமல் ஸ்டாலினே சுப்புலட்சுமியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

சுப்புலட்சுமி ஆதரவாளர்கள்

சுப்புலட்சுமி ஆதரவாளர்கள்

சுப்புலட்சுமி ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் முத்துசாமியின் ஆதரவாளர்களிடையே ஒன் இந்தியா சார்பில் கேட்டதற்கு, சுப்புலட்சுமி அம்மா தோற்க வேண்டும் என யாரும் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்யவில்லை. அவரது கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்த போது சுப்புலட்சுமி கண்டனம் தெரிவிக்காமல் இருந்தார். இதுவும் திமுக தொண்டர்களுக்கு மன வருத்தத்தை அளித்திருக்கலாம். மற்றபடி நாங்கள் யாருமே வேண்டுமென்றே எந்த சதியையும் செய்யவில்லை. இது போல் சொற்ப வாக்குகளில் தோல்வியுறுவதெல்லாம் சாதாரண விஷயம். 100க்கும் குறைவான வாக்குகளில் தோல்வி அடைந்தவர்கள் எல்லாம் அனைத்து கட்சிகளிலும் உதாரணம் சொல்லக் கூடிய அளவிற்கு உள்ளனர் என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+