பொங்கலுக்கு கரும்பு முக்கியத்துவம் பெறுவது ஏன்? ஏன் நாம் சாப்பிட வேண்டும்? பின்னணியில் சுவாரசியம்
சென்னை: பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் பொங்கல் பண்டிகையில் கரும்பு என்பது முக்கிய இடத்தை பிடிக்கிறது. பிற பண்டிகைகள் இன்றி கரும்பு பொங்கலில் மட்டும் முக்கியத்துவம் பெறுவது ஏன்? அதனை நாம் ஏன் சாப்பிட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதன் பின்னணியில் சுவாரசிய தகவல் ஒன்று உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏராளமான பண்டிகைகளை நாம் கொண்டாடி வருகிறோம். இதில் மிகவும் முக்கியமானது பொங்கல். புத்தாண்டு பிறந்த உடன் வரும் முதல் பண்டிகையாக இருக்கும் பொங்கல் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது.

பொங்கல் பண்டிகையை பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி என கொண்டாடுகின்றனர். இருப்பினும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அதோடு நமது கலாசாரம், பாரம்பரியத்துடன் பிண்ணிப்பிணைந்த விழாவாக பொங்கல் இருக்கிறது. இதனால் தான் பொங்கல் பண்டிகையை நாம் தமிழர் திருநாள் என அழைக்கிறோம்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டியை நாளை (ஜனவரி 15)ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதன்பிறகு ஜனவரி 16ல் மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 ல் காணும்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக இன்று போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. பொங்கலை பொறுத்தமட்டில் அது விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கு உதவும் கால்நடைகள், சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையாக இருக்கிறது. மேலும் அறுவடை திருநாள் எனவும் பொங்கல் அழைக்கப்படுகிறது.
புதிதாய் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள், கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றை வாழை இலையில் வைத்து சூரிய உதயத்தின்போது வீட்டு முன்பு மண்பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மாட்டு பொங்கலின்போது ஆண்டு முழுவதும் ஓயாமல் உழைத்த மாடுகளை குளிப்பாட்டி திலகமிட்டு பொங்கலிட்டு உணவு வழங்குகிறோம். இப்படி பொங்கல் என்பது விவசாயத்தை சார்ந்தே முழுக்க முழுக்க உள்ளது.
சரி இது இருக்கட்டும். பொங்கல் பண்டிகையின்போது கரும்பு ஏன் முக்கியத்துவம் பெறுவது என்பது உங்களுக்கு தெரியுமா?. இதன் பின்னணியில் 2 விஷயம் சொல்லப்படுகிறது. கரும்பு என்பது ஓராண்டு காலம் வளரக்கூடியது. இந்த காலத்தில் கரும்பு என்பது நல்ல திடக்காத்திரமாக இருக்கும். அதோடு சாப்பிட இனிமையாகவும் இருக்கிறது.
இதன்மூலம் கரும்பு என்பது உழைப்பை கற்றுத்தரும் வகையில் உதாரணம் காட்டப்படுகிறது. அதாவது முதலில் கரும்பு பொறுமையாக வளர்ந்து இறுதியில் மக்களுக்கு தித்திப்பை வழங்குகிறது. அதன்படி இளமையில் கஷ்டப்பட்டு மக்கள் உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் முதுமையில் இனிமையான வாழ்வு கிடைக்கும் என்பதை இந்த கரும்பு உணர்த்துவதாக கூறப்படுகிறது.
இது முதல் விஷயம் என்றால் சிவனை வைத்தும் ஒரு விஷயம் சொல்லப்படுகிறது. அதாவது பொங்கல் நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருக்கும் யானையின் கல் உருவத்திற்கு சிவன் கரும்பு ஊட்டியதாக கூறப்படுகிறது. அதன் நினைவாகவும் பொங்கல் பண்டிகையின்போது கரும்பு முக்கியத்துவம் பெறுவதாக சொல்லப்படுகிறது.
மேலும் கரும்பு கடித்து உண்பது என்பது பற்கலுக்கு வலு சேர்க்கும். ஆலும், வேலும் மட்டுமின்றி கரும்பும் பல்லுக்கு உறுதி என்பதால் அதனை கட்டாயம் மக்கள் அனைவருமு் பொங்கல் பண்டிகையில் கடித்து தின்ன வேண்டும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications