தி.நகரை சூழ்ந்துள்ள அதிக வெள்ளம்.. 4 நாட்களாக தனித்தீவானது ஏன்?.. முதல்வர் பரபரப்பு விளக்கம்
சென்னை: சென்னை தியாகராய நகருக்கு அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது ஏன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை இன்றைய தினம் 4ஆவது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.
அது போல் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாம்களிலும் அவர் ஆய்வு மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்து அங்கு மழை புகார் குறித்து வந்த தொலைபேசி அழைப்பையும் எடுத்து பேசினார்.

நிவாரண பணிகள்
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை தருவோம். வாக்களித்த மக்களுக்கு எந்த நோக்கத்துக்கு வாக்களித்தார்களோ அதை செய்வோம். நிவாரணப் பணிகளை தொடர்ந்து செய்வோம். கொட்டும் மழையில் ஆய்வு செய்வது எனக்கு புதிதல்ல. மேயராக, எம்எல்ஏவாக, துணை முதல்வராக இருந்த போதும் இது போல் ஆய்வு நடத்தியுள்ளேன். எங்கு மழை பெய்தால் எங்கு அடைப்பு ஏற்படும் என எங்களுக்கு தெரியும். அதை சீரமைத்து வருகிறோம்.

மழைக்காலம்
50 சதவீத பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். மழைக்காலம் முடிந்த பின்னர் மீதமுள்ள 50 சதவீதத்தையும் நிரந்தரமாக செய்து சேதாரமில்லாத சென்னையாக மாற்றுவோம். சென்னையில் நோய் பாதிக்காத வண்ணம் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளும் நடக்கின்றன.

லஞ்சம்
10 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் லஞ்சம் வாங்கி ஊழலில் திளைத்ததால் தான் இப்ப இவ்வளவு பிரச்சினை என்றார். தி நகருக்கு அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் லஞ்சம், ஊழல் நடந்ததால் தி நகருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரைகுறையாக நடந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளால்தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
Recommended Video

மத்திய அரசு
இன்னும் இரு தினங்களுக்கு மழை இருக்கும் என சொல்லியுள்ளார்கள். இது முடிந்த பிறகு மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்போம் என்றார். முந்தைய அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து பல கோடி ரூபாய் நிதி பெற்றும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியதாகவும் முதல்வர் குற்றம்சாட்டினார். கடந்த ஆட்சியாளர்கள் மீதும் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
அண்ணா சாலை மேம்பாலப் பணி 68% நிறைவு.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் சவாலான கட்டுமானம் விறுவிறுப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications