நடிகை ரியாமிக்கா தற்கொலை வழக்கில் திருப்பம்.. முந்தைய நாள் இரவு தங்கியிருந்தது எங்கே?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நடிகை ரியாமிகாவின் காதலன் கொடுத்த தகவலால் வழக்கில் திருப்பம்-வீடியோ

    சென்னை: தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் இரவு நடிகை ரியாமிகா எங்கு தங்கியிருந்தார் என்பது மர்மமாக இருந்ததாக, அவரது காதலர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ், அகோரி போன்ற படங்களில் நடித்தவர், நடிகை ரியாமிகா (26). சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் 28ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலர் புது தகவல்

    காதலர் புது தகவல்

    ரியாமிகாவின் தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்டவற்றை போலீசார் பரிசீலித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது காதலர் என்று கூறிக்கொள்ளும் தினேஷ் என்ற வாலிபர் தெரிவித்துள்ள தகவல் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரியாமிகா செல்போனுக்கு அவர் தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் தொடர்பு கொண்டதாகவும், அவர் அப்போது வீட்டில் இல்லை என்று தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார் தினேஷ்.

    போனில் பேச்சு

    போனில் பேச்சு

    அவர் அன்று இரவு முழுக்க எங்கே தங்கி இருந்தார் என்பதே தனது தெரியவில்லை என்று கூறும் தினேஷ், வீட்டுக்கு திரும்பிவிடுமாறு, தான் தொலைபேசியில் கூறிய போது, எல்லாம் எனக்கு தெரியும் என்று ரியாமிகா தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

    மர்மம்

    மர்மம்

    ஒரு நாள் இரவு முழுக்க ரியாமிகா எங்கே தங்கியிருந்தார் என்பது மர்மமாக உள்ளதாகவும், அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் தினேஷ் போலீசிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை நிருபர்களிடம் கூறினார்.

    திருப்பம்

    திருப்பம்

    பட வாய்ப்பு கிடைக்காததால் ரியாமிகா தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியான நிலையில், காதலர் தினேஷ் கொடுத்துள்ள இந்த தகவல் வழக்கில் புது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+