புஸ்ஸூனு போச்சே.. அண்ணாமலையால் ஆடிப்போன பாஜக தலைகள்.. நொடியில் தகர்ந்த கனவு! இது என்னன்னு தெரியலயே
சென்னை: தமிழக பாஜகவின் விஸ்வரூபம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், முக்கிய தகவல் ஒன்று கசிந்து வருகிறது.
தேர்தல் பணியில் சரியாக ஈடுபடாதவர்கள், தொகுதியிர் பர்ஃபெர்மான்ஸ் செய்யாதவர்கள் மீதான புகார்கள் ஏற்கனவே அண்ணாமலைக்கு ரிப்போர்ட்டாக சென்றிருந்தது.

அதுமட்டுமல்ல, தொகுதிகளில் திட்டமிட்டபடி, பாஜகவின் கணக்குகள் அத்தனையும் நொறுங்கிவிட்டதாம். அதாவது, பெரிய அளவில் அந்தந்த தொகுதி நிர்வாகிகளுக்கு பணம் வழங்கபட்டதாக கூறப்படுகிறது.
வேட்பாளர்கள்: தொகுதி மற்றும் எதிர் வேட்பாளர்கள், தங்களுடைய கட்சி வேட்பாளர்களுக்கு ஏற்ற வகையில் மேலிடத்தில் இருந்து பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அடிமட்ட நிர்வாகிகளுக்கே முறையாக பணம் போய்ச்சேரவில்லையாம்..
சில இடங்களில் உட்கட்சி பூசலும், உள்குத்தும் வெடித்ததுடன், கையாடல்களும் நடந்துள்ளன. இந்த கையாடல்கள் குறித்து, சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சொந்த கட்சியினரே பல இடங்களில் பகிரங்கமாக போஸ்டர் அடித்தும் ஒட்டியிருந்தனர்..
புகார்கள்: அதுமட்டுமல்லாமல், பணம் வினியோக பிரச்சனை தொடர்பாக பாஜக தலைமைக்கும் தொடர்ந்து புகார்கள் சென்று கொண்டேயிருந்தது.. அடுத்தடுத்த புகார்களை கண்டு மேலிடமே அதிர்ச்சி அடைந்ததாம்.
இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்றைய தினம் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தை அண்ணாமலை கூட்டியிருந்தார். இதனால், எப்படியும், பல நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, எனவே, தேர்தல் செலவுகள், பணிகள் தொடர்பாக அண்ணாமலையிடம் புகார் செய்ய வேண்டும் என்பதற்காகவே நிர்வாகிகள், வேட்பாளர்கள் பலர் திட்டமிட்டிருந்தனர். பணத்தை சுருட்டிய நிர்வாகிகள் மீது புகார் செய்ய பலரும் ஆதாரத்துடனும் காத்திருந்தனர்.
ஆதாரங்கள்: நேற்று காலை கூட்டம் தொடங்கியதுமே, "பணம் சுருட்டல், கட்சி மோதல் குறித்து யாரும் பேசக் கூடாது, வாக்கு எண்ணிக்கை குறித்து மட்டுமே பேச வேண்டும்" என்று முன்கூட்டியே அண்ணாமலை கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.. இதனால் ஆதாரத்துடன் புகார் கொடுக்க வந்தவர்கள் அதிருப்தியும், விரக்தியும், ஏமாற்றமும் அடைந்துவிட்டார்களாம்..
கட்சி ஆபீசுக்கு போனாலும் புகாரை வாங்குவதில்லை... கூட்டம் நடத்தினாலும் புகார் சொல்ல விடுவதில்லையே என்று புலம்பி கொண்டே போனார்களாம். ஆனால், இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
எதிர்பார்ப்பு: ஆனால், சட்டசபை தேர்தலுக்கான களப்பணியில் பாஜக இப்போதே தீவிரம் காட்டி வருவதால், கடந்தகால புகார்கள் இனி வராமல் பார்த்து கொள்ளப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. அதனால், முறையாடல் செய்தவர்கள் உட்பட பலரது லிஸ்ட்டும் மாநில தலைவரிடம் உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, தொகுதி வாரியாக ரிசல்ட் வந்தபிறகு, புகார் வந்தவர்கள் மீது ஆக்ஷன் எடுக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.. அதற்குள் கூடுதல் ஆதாரங்களை திரட்ட நிர்வாகிகள் தயாராகி வருகிறார்களாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications