அதிகரிக்கும் பற்றாக்குறை.. புதிய செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்? சீமான் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், புதிதாகச் செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லை என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுவதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் நிலவி வரும் செவிலியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சீமான் அறிக்கை

சீமான் அறிக்கை

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான செவிலியர் பற்றாக்குறையினால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. புதிதாகச் செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

 மருத்துவமனைகள் விரிவாக்கம்

மருத்துவமனைகள் விரிவாக்கம்

தமிழ்நாட்டில் ஏற்கெனவே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளுடன் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளும் அதிக நோயாளிகளைப் பராமரிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு நோயாளிகளுக்கான படுக்கை இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பணியிடங்கள் நிரப்பப்படவில்லை

பணியிடங்கள் நிரப்பப்படவில்லை

ஆனால், அதற்கேற்றவாறு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்கள் அதிகரிக்கப்படாமலும், காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமலும் இருப்பதால் நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவம் கிடைக்கப்பெறாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், மிக அதிகமான பணிச்சுமையினால் செவிலியர்களும் உடல் மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாவதால் நோயாளிகளைச் சரிவரக் கவனிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தான சூழலும் ஏற்படுகிறது.

செவிலியர்களை நியமனம் செய்க

செவிலியர்களை நியமனம் செய்க

ஆகவே, நோயாளிகளை உரிய நேரத்தில் பராமரித்து மருத்துவம் அளிக்கவும், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையிலும் , அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை சரிசெய்ய தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+