சிக்ஸர்.. ஸ்டாலின் சொன்ன வாக்குறுதி.. அப்படியே நிறைவேற்றும் செந்தில் பாலாஜி.. மக்களுக்கு குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் திமுக கொடுத்த பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முக்கியமான ஒரு தேர்தல் வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று மகளிர் உதவித்தொகை தொடர்பானது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்து இருந்தது.

இதற்கான லிஸ்ட் எடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதம் அண்ணாவின் பிறந்த நாளில் இருந்து இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. பெண்கள் இடையே இந்த திட்டம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இன்னொரு வாக்குறுதி:
அதே போல் தேர்தல் சமயத்தில் திமுக கொடுத்த இன்னொரு வாக்குறுதியையும் நிறைவேற்ற உள்ளது. தமிழ்நாட்டில் மதுபான கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தது.
அதன்படியே அமைச்சர் செந்தில் பாலாஜியும் தமிழ்நாட்டில் மதுபான கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று சட்டசபையில் கூறி இருந்தார். முதல் கட்டமாக 500 மதுபான கடைகளை குறைப்போம் என்று அவர் அறிவித்து இருந்தார்.
அதன்படி மாநிலத்தில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக விற்பனையாகும் கடைகளைக் மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கடைகளை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதைக் கண்டறிய மாவட்ட அளவில் டாஸ்மாக் நிர்வாகம் குழுக்களையும் கண்டறிந்துள்ளது. மேலும், பொதுமக்களிடம் இருந்து அதிக புகார்கள் வரும் டாஸ்மாக் கடைகளையும் கண்டறிந்து வருகின்றனர். அவர்கள் இந்த கடைகளை லிஸ்ட் போடுவார்கள்.
அதன்பின் லிஸ்ட் முதல்வருக்கு அனுப்பப்படும். அதன்பின் இந்த கடைகளை மூடும் அறிவிப்பு ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாளன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
முக்கிய அறிவிப்பு
பெரிய நிகழ்வாக இந்த அறிவிப்பு வெளியாகும். தமிழ்நாட்டில் மதுபான கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தது. அதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகும்.
தமிழ்நாடு முழுக்க 5,329 கடைகள் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 1.3 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் சராசரியாக 2, 3 லட்சத்திற்குத் தினசரி விற்பனை இருக்கிறது. இந்தச் சூழலில் தான் டாஸ்மாக் கடைகள் கண்டறிந்து மூடும் நடவடிக்கையில் அந்த நிர்வாகம் இறங்கியுள்ளது.
அதிக புகார்கள் வரும் கடைகளுக்கும், வருவாய் குறைவான கடைகளுக்கும், தவறான இடங்களில் உள்ள கடைகளுக்கும், வீடுகள், கோவிலக்கிலூக் அருகே உள்ள கடைகளுக்கும் முன்னுரிமை அளித்து பட்டியலைத் தயார் செய்வதாகவும் அரசு உரிய அறிவிப்பை வெளியிட்ட உடன் டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications