தமிழ்நாடு டூ டெல்லி! மூத்த புள்ளியை தட்டி தூக்கிய அமித் ஷா.. அதுவும் தன்னோட டீமிற்கே! அப்போ அதுதானா?
சென்னை: தமிழ்நாடு அரசு பணியில் பல காலமாக இருந்த முக்கிய ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தேசிய பணிக்கு மாற்றல் ஆகி இருக்கிறார். இவரின் நியமனம் அதிகாரிகள் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15-20 ஐஏஎஸ் அதிகாரிகள் துறை ரீதியாக மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து துறை ரீதியாக இந்த மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதெல்லாம் இருக்க தமிழ்நாட்டில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மத்திய பணிக்கு சென்றுள்ளார்.

ஐஏஎஸ்
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய பல பொறுப்புகளை வகித்து வந்தவர் பங்கஜ் குமார் பன்சால். அதிமுக ஆட்சியில் ஏதாவது ஒரு துறைக்கு ஆள் தேவை என்றால் உடனே பங்கஜ் குமார் பன்சால்தான் கூடுதல் அதிகாரியாக அந்த பொறுப்பில் நியமிக்கப்படுவார். அதிமுக ஆட்சியில் முக்கியமாக 2020ல் இவருக்கு முக்கிய பல பொறுப்புகள் கொடுக்கப்பட்டன.

அதிகாரிகள் மாற்றம்
1997 தமிழ்நாடு கேடர் ஆவார் பங்கஜ் குமார் பன்சால். இவர் தமிழ்நாட்டில் கடந்த 2020 மின்சாரத்துறை மற்றும் TANGEDCOவின் மொத்த இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதே சமயத்தில் அவருக்கு கூடுதலாக நில நிர்வாக ஆணையர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இரண்டும் முக்கியமான பொறுப்பு என்றாலும், அந்த பொறுப்புகள் இவரிடம் வழங்கப்பட்டன. அதற்கு முன் சென்னை மெட்ரோ ரயில் இயக்குனராகவும் இருந்தார்.

பங்கஜ் குமார் பன்சால்
இது இப்படி இருக்கும் கொரோனா வந்ததால் 2020ல் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பும் வழங்கப்பட்டது. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துதல், கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்தல், கொரோனாவை தடுத்தல் உள்ளிட்ட கூடுதல் பொறுப்புகள் இவருக்கு வழங்கப்பட்டது. மின்சார துறையை கவனித்துக்கொண்டு இந்த துறையையும் இவர் கூடுதலாக கவனித்தார்.

பங்கஜ் குமார் பன்சால் யார்?
இந்த நிலையில்தான் 2021ல் ஆட்சி மாறிய பின் இவருக்கு பெரிதாக பொறுப்புகள் வழங்கப்படவில்லை. கடந்த 1 வருடம் பெரிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் இருந்தார். இந்த நிலையில்தான் டெல்லியில் இருந்து இவர் முக்கியமான அதிகாரி என்பதால் அப்படியே தட்டி தூக்கி உள்ளனர். தமிழ்நாடு பணியில் இருந்து மத்திய பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார். அமித் ஷாவின் அமைச்சகமான கூட்டுறவுத்துறைக்கு கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா நேரடியாக இவரை தமிழ்நாட்டில் இருந்து தன்னுடைய டீமிற்கு எடுத்துள்ளார். அதோடு இவரை தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு கொடுத்து நியமித்து உள்ளனர். இந்த தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்ட பின் அதில் பல மாற்றங்களை செய்தவர் சந்தீப் நாயக். இதன் மூலம் நாடு முழுக்க மருத்துவம், ஏற்றுமதி, இளைஞர்கள் துறையில் கூட்டுறவு ரீதியான பல புதுமைகளை புகுத்தினார். அவரையே மாற்றிவிட்டு பங்கஜை அந்த இடத்தில் நியமித்து உள்ளனர்.

தமிழ்நாடு ஆளும் தரப்பு
தமிழ்நாட்டில் ஆளும் தரப்புடன் நெருக்கமாக இல்லாத அதிகாரிகளை டெல்லி தங்கள் பக்கம் இழுக்கும் என்று சில நாட்களுக்கு முன் செய்திகள் வந்தன. அமுதா ஐஏஎஸ் மாநில அரசுக்கு நெருக்கமாக இருந்ததால் டெல்லி போனவர் மீண்டும் தமிழ்நாடு பணிக்கு அனுப்பப்பட்டார். இந்த நிலையில் மத்திய அரசுடன் சுமுகமாக இல்லாத அதிகாரிகளை டெல்லிக்கு மத்திய அரசு அழைக்கும் என்று கூறப்பட்டது. அதன்படியே தற்போது பங்கஜ் மத்திய பணிக்கு திரும்பி உள்ளார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications