1918ல் உலகையே உலுக்கிய வைரஸ்.. தமிழ்நாட்டில் இன்புளுயன்சா பரவுவது எப்படி? பாதுகாப்பது எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் காய்ச்சல் பரவி வருகிறது. புதுச்சேரியிலும் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இப்போ தானே கொரோனா பாதிப்பு போனது.. அதற்குள் எப்படி அடுத்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது என்று கேட்கிறீர்களா? இது எண்டமிக் ஆக மாறிய ஃப்ளு காய்ச்சல் எனப்படும் இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாக ஏற்படுவதாகும். 1918ல் உலகப்போர் சமயத்தில் பரவிய இன்புளுயன்சா அப்போது பலரின் உயிரை எடுத்து.
கொரோனவை போலவே இது உலகம் முழுக்க பாதிப்பை ஏற்படுத்தியது. இன்புளுயன்சா முதல் அலையை விட இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. முதல் அலையில் பாதிக்கப்பட்டவர்களை விட இரண்டாம் அலையில் அதிக பேர் பாதிக்கப்பட்டனர், அதிக பேர் பலியானார்கள்.

இன்புளுயன்சா
அதன்பின் இதற்கு ஃப்ளு தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக நோய் வீரியம் குறைந்து அதன்பின் அது சீசன் காய்ச்சல் போல மாறியது. அதாவது உலகம் முழுக்க பரவி, இனி அழிக்கவே முடியாது, அதே சமயம் பெரிய அளவில் பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்று சொல்லும் அளவிற்கு இன்புளுயன்சா உருமாற்றம் அடைந்தது. இதைத்தான் எண்டமிக் என்று கூறுவார்கள். இது உலகம் முழுக்க காய்ச்சல் இயல்பாக, சீசனுக்கு சீசன் பரவும் நோய் ஆக மாறியது.

இன்புளுயன்சா என்றால் என்ன?
இந்தியாவில் தட்பவெப்பநிலை காரணமாக ஜூன் மாதம் இந்த காய்ச்சல் தொடங்கும். அக்டோபர் மாதம் வரை கூட இன்புளுயன்சா காய்ச்சல் பரவும். அமெரிக்கா போன்ற நாடுகளில் செப்டம்பர் இறுதியில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவ தொடங்கும். தற்போது தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர் இடையே இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. முக்கியமாக 1-5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் இந்த காய்ச்சல் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எப்படி ஏற்படுகிறது?
இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் குணம் கொண்டது. இன்புளுயன்சா ஏற்பட்ட நபருடன் நெருக்கமாக இருந்தால் அவருக்கு இந்த காய்ச்சல் ஏற்படும். சுற்றுசூழல் சுத்தமாக இல்லாமல் இருப்பது, குளிர் பானங்கள் சாப்பிடுவது ஆகியவை காய்ச்சலுக்கு வழிவகுத்து பின்னர் இன்புளுயன்சா காய்ச்சல் ஏற்படவும் காரணமாக இருக்கும். இன்புளுயன்சா உள்ளவர்கள் அருகில் இருந்தால் அவர்களுக்கும் இன்புளுயன்சா பரவ வாய்ப்புகள் உள்ளது.பருவநிலைதான் இன்புளுயன்சா பரவ முக்கிய காரணம்.

அறிகுறிகள் என்ன?
- சளி
- தொண்டை வலி
- உடல் வலி
- லேசான இருமல்
- லேசான தலைவலி
விட்டு விட்டு காய்ச்சல் ஆகியவை இதன் காரணமாக ஏற்படும். இதுதான் பொதுவான இன்புளுயன்சா அறிகுறிகள். கொஞ்சம் வீக்காக இருக்கும் நபர்களுக்கு தீவிர அறிகுறிகள் வரலாம்.

குழந்தைகள் மட்டுமா?
இது குழந்தைகளை மட்டும் தாக்காது, வயதானவர்களையும் தாக்கும். ஆனால் இதனால் பெரிய பாதிப்புகள் இருக்காது. இரண்டு, மூன்று நாட்களுக்கு காய்ச்சல் தீவிரமாக இருந்து பின்னர் குணமடையும். இந்த காய்ச்சல் வந்ததும் மருத்துவரை அணுகுவது சரியானது. குழந்தைகளுக்கு 4 நாட்கள் கூட இந்த காய்ச்சல் இருக்கும். இன்புளுயன்சா காரணமாக உயிரிழப்புகள் இப்போது ஏற்படுவது இல்லை என்பதால் பதற்றம் அடைய வேண்டியது இல்லை. அதேபோல் இதற்கு தடுப்பூசியும் உள்ளது, எளிமையான சிகிச்சை முறைகளும் உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications