Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் வழக்கில் முஷ்டியை முறுக்கிய சிபிஐ.. வேண்டாமுங்க.. திடீரென கோர்ட்டுக்கு போன தமிழக அரசு.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் தவெக கூட்டத்தில் மக்கள் பலியானது தொடர்பான வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரிக்கும் நேரத்தில், இந்த விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கிட்டத்தட்ட 1 மாதமாக சிபிஐ விசாரணை நடக்கும் நிலையில் தமிழக அரசு தாமதமாக இப்படி ஒரு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

சிபிஐ விசாரணை நேர்மையாக நடக்காது. முக்கியமாக விஜய் தரப்பு அஜய் ரஸ்தோகி தரப்பை பார்க்க திட்டமிட்டுள்ளது. இது விசாரணையை பாதிக்கும் என்றும் தமிழக அரசு வாதம் வைக்க உள்ளதாம். உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு இந்த மேல்முறையீடு விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசு மேல்முறையீடு

கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாங்கள் மனுத் தாக்கல் செய்யவே இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வாதம் வைத்து உள்ளனர்.

குடும்பத்தைப் பிரிந்துச் சென்ற, தங்களுக்கு தொடர்பில்லாத பன்னீர்செல்வம் என்ற நபர் பணத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாக உயிரிழந்த சிறுவனின் தாயார் சர்மிளா என்பவரும், தன்னை ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டதாக செல்வராஜ் என்பவரும் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் காணொளியில் செல்வராஜ் ஆஜராகி விளக்கம் அளித்தார். தன்னை ஏமாற்றி கையொப்பம் பெற்றுவிட்டதாக செல்வராஜ் அந்த காணொளியில் குறிப்பிட்டார்.

Why Tamil Nadu Wants the CBI Transfer Revoked and Its Own Inquiry Restored

இப்படிப்பட்ட நிலையில்தான் கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்து உள்ளது. இந்த வழக்கில் முறைகேடு நடந்துள்ளதால்.. இதை பெரிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

சிபிஐ தீவிரம்

ஏற்கனவே 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணையை தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த முதல் கட்ட விசாரணையின் அறிக்கையை சிபிஐ குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சீல் வைக்கப்பட்ட பைல் ஒன்றில் இந்த ரிப்போர்ட்டை சிபிஐ கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளது. விரைவில் இந்த சீல் இடைப்பட்ட ரிப்போர்ட் முன்னாள் நீதிபதி ரஸ்தோகி மூலம் ஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. சிபிஐ அதிகாரிகள் தவெகவின் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் கடுமையான கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.

முக்கியமாக கடந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்டோரிடம் இரண்டு நாட்கள் சுமார் 18 மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் நடத்தினர்.

சிபிஐ விசாரணையில் பின்வரும் கேள்விகள் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, கரூர் கூட்டத்தில் பங்கேற்க தொண்டர்கள் எந்தெந்த மாவட்டங்களிலிருந்து வந்தனர்? சென்னையிலிருந்து நாமக்கல் வழியாக கரூர் வந்த விஜயின் பயணத்திட்டத்தை வகுத்தது யார்? செப்டம்பர் 27 அன்று மதியம் 3 மணிக்கு கூட்டம் நடக்க திட்டமிடப்பட்டிருந்தும், நண்பகல் 12 மணிக்கு பேசுவதாக அறிவிக்கச் சொன்னது யார்? என்று கடுமையான பல கேள்விகளை எழுப்பினர்.

தமிழக அரசு மேல்முறையீடு

இப்படிப்பட்ட கரூர் தவெக வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்ய கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்த நடவடிக்கைகள், வழக்கின் விசாரணையை மீண்டும் மாநிலக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர விரும்புவதைக் காட்டுகிறது. முதலில், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய அக்டோபர் 13, 2025 தேதியிட்ட உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவை ரத்து செய்ய தமிழக அரசு கோரியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் அமைந்த சிறப்பு புலனாய்வுக் குழுவே (எஸ்ஐடி) மீண்டும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அடுத்து, செப்டம்பர் 28, 2025 அன்று அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஒரு நபர் ஆணையத்தின் இடைநீக்கத்தை நீக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே சம்பவத்தை விசாரித்து வந்த இவ்வாணையம், தனது பணிகளைத் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே மாநில அரசின் விருப்பம். மூன்றாவதாக, முதல் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், முந்தைய உத்தரவின் பத்தி 33-ல் உள்ள "சொந்த மாநிலத்தைச் சேராதவர்" என்ற சொல்லை நீக்கக் கோரப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவிலும் மாற்றங்கள் செய்ய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கடைசியாக, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்திடம், சிறப்பு அனுமதி மனுவை (SLP) தள்ளுபடி செய்யக் கோரியுள்ளது. அது விசாரணைக்கு உகந்ததல்ல, தவறான காரணங்களின் அடிப்படையிலானது எனக் குறிப்பிட்டது. ஆரம்ப எஸ்ஐடி விசாரணையும் ஜெகதீசன் விசாரணை ஆணையமும் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே மாநிலத்தின் நிலைப்பாடு என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+