விஜய் என்னங்க இது? சட்டென அந்த மேட்டரை பற்றி பேசாமல்.. அப்படியே சைலண்ட் ஆகிட்டாரே.. போச்சு
சென்னை: கடந்த சில நாட்களாக தீவிரமாக அரசியல் கருத்துக்களை பேசி வந்த விஜய் தற்போது திடீரென சைலன்ட் ஆகி உள்ளார். மிக முக்கியமான ஒரு விஷயத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் சட்டென சைலன்ட் அகி உள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் திமுக - பாஜக இரண்டையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. விஜய் எங்கே திமுக - பாஜக இல்லாத மைய அரசியலை எடுக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த மாணவர்கள் மீட்டிங்கில் திமுகவை சாடி பேசிய விஜய் இரண்டாவது நாள் பாஜகவை கடுமையாக எதிர்த்து பேசி உள்ளார். விஜய் திமுகவை எதிர்ப்பது உறுதியாகிவிட்டது. அவர் திமுகவைத்தான் நேரடியாக, மறைமுகமாக சீண்டி வருகிறார். தேர்தல் வெற்றிகளில் வாழ்த்து சொல்வதில் திமுகவை தவிர்ப்பது தொடங்கி நீட்டிற்கு எதிராக பொங்காமல் கள்ளச்சாராய விவகாரத்தில் மட்டும் கருத்து சொல்வது என்று விஜய் "selective" ஆக அரசியல் செய்ய தொடங்கிவிட்டார்.
நல்ல தலைவர்கள் இல்லை என்றெல்லாம் விமர்சனம் வைக்கும் விதமாக திமுகவை தாக்கி விஜய் பேசி உள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்து இருந்தார். முதல்முறையாக வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு.. கோபமாக விஜய் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
பாஜக எதிர்ப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் இரண்டாவது நாள் நேரடியாக பாஜகவின் அடிப்படை கொள்கையையே எதிர்த்து பேசினார். பாஜக உறுதியாக இருக்கும் நீட் விவகாரத்தில் கடுமையான கருத்துக்களை விஜய் பேசினார்.
தொடர்ந்து நடந்துவரும் குளறுபடிகளால் நீட் தேர்வு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இனி நாடு முழுவதும் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வு.
சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தைத் மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும் கல்வி, சுகாதாரத்தில் மாநில அரசுகளுக்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும். மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு NCERT முறையில் தேர்வு வைத்தால் எப்படிச் சரியாக இருக்கும்?, என்று கூறியுள்ளார்.
இடத்தையும் எதிர்த்து.. இப்போது வலத்தையும் எதிர்த்து.. இந்தியாவில் தேசிய அரசியலை உலுக்கிய ஒரு ஆம் ஆத்மி ஸ்டைல் அரசியல் கொள்கையை விஜய் கையில் எடுத்து உள்ளாரோ என்று எண்ண தோன்றுகிறது.
மிஸ் பண்ணிட்டாரே: கடந்த சில நாட்களாக தீவிரமாக அரசியல் கருத்துக்களை பேசி வந்த விஜய் தற்போது திடீரென சைலன்ட் ஆகி உள்ளார். மிக முக்கியமான ஒரு விஷயத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் சட்டென சைலன்ட் அகி உள்ளார்.
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்வு பற்றி ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை. இந்த விஷயத்தில் அப்படியே விஜய் கப் சிப் என்று விஜய் அமைதியாகிவிட்டார். தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த 2011-12 ஆம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, கடந்த 10 ஆண்டுகளில், ரூ.94,312 கோடி மேலும் அதிகரித்து. 31.03.2021 வரை ரூ.1,13,266 கோடியாக உயர்ந்தது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை. 2021-22 ஆம் ஆண்டிலிருந்து 100% முழுமையாக அரசே ஏற்று கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல, முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால். மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில். 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை.
1. அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
2. வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதிஎண்.222-ன்படி, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயன் அடைவர்.
3. தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி வழிப்பாட்டுதலங்கள். மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
4. இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.5/- வரை மட்டுமே உயரும்.
5. இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 35 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.15/- வரை மட்டுமே உயரும்.
6. இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.25/- வரை மட்டுமே உயரும்.
7. இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 13 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.40/- வரை மட்டுமே உயரும்.
8. 2.19 இலட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு. குறைந்த
அளவாக யூனிட் ஒன்றிற்கு 20 காசுகள் மட்டுமே உயரும்.
9. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். 1001 முதல் 1500 யூனிட் வரை யூனிட் ஒன்றிற்கு 20 பைசா. 1501 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட் ஒன்றிற்கு மட்டுமே உயரும். 25 காசுகள்
10. தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒன்றிற்கு 35 பைசா மட்டுமே உயரும். மிக குறைந்த அளவில் யூனிட்
ஆனால் இதை பற்றி எதுவும் பேசாமல்.. விமர்சனங்களை வைக்காமல் விஜய் சட்டென சைலன்ட் ஆகி உள்ளார்.












Click it and Unblock the Notifications