வெறும் 67 லட்சம் பேர்தான்.. தமிழ்நாட்டில் 2 டோஸ் போட்டவர்கள் எண்ணிக்கை மிக குறைவு.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பாக பல இடங்களில் முகாம்கள் அமைந்து இருந்தாலும் பலர் இரண்டாம் டோஸ் வேக்சின் போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வமாக முன்வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி கொரோனா கேஸ்கள் தமிழ்நாட்டில் 1500 என்ற அளவிலேயே பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 26,17,943 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளனர். இதில் 16,478 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
இதுவரை தமிழ்நாட்டில் 25,66,504 பேர் குணமடைந்து உள்ளனர். 34,961 பேர் இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

வேக்சின்
தமிழ்நாட்டில் தற்போது வரை மொத்தம் 3,36,99,438 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் 4 லட்சம் முதல் 5.2 லட்சம் வரை மக்கள் வேக்சின் போட்டுக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் வேக்சின் போடும் வேகம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் தினமும் 6 லட்சம் வேக்சின் போடப்படும் வாய்ப்புகளும் உள்ளன.

முகாம்கள்
பெரிய அளவில் முகாம்கள் நடத்துவதால் தமிழ்நாட்டில் வேக்சின் போடும் வேகம் அதிகரித்துள்ளது. சிறப்பு முகாம்கள் உயர்த்தப்பட்டதால் வேக்சின் போடப்படும் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 2,69,88,145 பேர் ஒரு டோஸ் வேக்சின் போட்டுகொண்டுள்ளனர். ஆனால் 67,11,293 பேர் மட்டுமே இரண்டு டோஸ் வேக்சின் போட்டுள்ளனர். இது மிகவும் குறைவான எண்ணிக்கை ஆகும்.

குறைவு
அதாவது தமிழ்நாட்டில் வேக்சின் போட தகுதியானவர்களின் மக்கள் தொகையில் 11% பேர் மட்டுமே 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். பலர் முதல் டோஸ் வேக்சின் போட்டுவிட்டு இரண்டாம் டோஸ் போடாமல் இருப்பதும், இரண்டாம் டோஸ் போடுவதை தவிர்ப்பதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இன்னும் பல கிராமங்களில் இரண்டாம் டோஸ் குறித்த போதிய விழுப்புணர்வு இல்லாமல் இருப்பதும் கூட இந்த குறைவான எண்ணிக்கைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

விழிப்புணர்வு
முதல் டோஸ் போட்ட பலர்.. ஒரு டோஸ் போதும்.. நமக்கு எல்லாம் கொரோனா வராது என்று நினைத்துக்கொண்டு இரண்டாவது டோஸ் போடாமல் தவிர்ப்பதும். சிலர் கொரோனா மீதான அச்சம் இல்லாமல், இரண்டாம் டோஸ் போடாமல் இருப்பதும் இந்த குறைவான எண்ணிக்கைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுக்க பல கேம்ப்கள் இருந்தாலும் மிக மிக குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் இரண்டாம் டோஸ் போட முன்வருகிறார்கள். அரசும் முதல் டோஸ் போடுவதில் கொஞ்சம் அதிக முக்கியத்துவம் தருகிறது.

கஷ்டம்
இரண்டு டோஸ்கள் போட்டால் மட்டுமே கொரோனாவிற்கு எதிராக முறையான எதிர்ப்பு சக்தியை பெற முடியும். முதல் டோஸ் மட்டும் பெற்ற பலர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இரண்டு டோஸ் பெற்றால் மட்டுமே பாதிப்பை தவிர்க்க முடியும். ஆனால் தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட கொஞ்சம் குறைவாகவே இரண்டாம் டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

கட்டாயம்
மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் 7,58,42,780 பேருக்கு வேக்சின் போடப்பட்டள்ளது. இதில் 1,21,32,119 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. கேரளாவில் 2,94,26,369 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. 79,35,364 பேருக்கு இரண்டு டோஸ் போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 6,07,93,500 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. 1,65,04,745 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications