சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்பாராத ட்விஸ்ட்.. சென்னை உட்பட 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு.. துணிச்சலான முடிவு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உட்பட 11 முக்கியமான மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கணிப்புகளை விஞ்சி இந்த முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகள் தரப்பிற்கு மட்டுமின்றி ஆளும் கட்சியான திமுகவிலும் கூட சிலருக்கு ஆச்சர்யம் அளித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. எப்போதும் இல்லாத வகையில் மொத்தமாக 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் இரண்டு மாநகராட்சிகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்னென்ன மாநகராட்சி யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்..

பத்தே நாள்ல.. நாட்டு சுதந்திர வரலாற்றையே மாத்திட்டீங்களே.. உதயநிதி ஸ்டாலின் வைத்த குட்டு!பத்தே நாள்ல.. நாட்டு சுதந்திர வரலாற்றையே மாத்திட்டீங்களே.. உதயநிதி ஸ்டாலின் வைத்த குட்டு!

 ஒதுக்கீடு விவரம்

ஒதுக்கீடு விவரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .

சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் பட்டியலின பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சி பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (ஆண் - பெண் போட்டியிடலாம்)

கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய மாநகராட்சிகள்

முக்கிய மாநகராட்சிகள்

பொதுவாக தமிழ்நாடு அரசியலில் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாவட்ட மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை பெற கடும் போட்டி நிலவும். அரசியல் கட்சிகள் சார்பாக பலர் இந்த பதவியை பெற போட்டி போடுவார்கள். அதிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளில் சென்னை மேயர் வேட்பாளராக முக்கியமான நபர்கள் களமிறக்கப்படுவார்கள். அப்படி இருக்கும் போது இந்த மேயர் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.. இது லைனில் காத்திருந்த பல ஆண் தலைகளுக்கு எதிர்பாராத அறிவிப்பாக வந்து சேர்ந்துள்ளது.

சென்னை

சென்னை

அதிலும் இந்த முறை சென்னை மேயர் பதவியை பெறுவதற்காக திமுக, அதிமுகவிற்குள் கடும் போட்டி நிலவி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதிலும் திமுகவில் அமைச்சர் ஒருவரின் மகனுக்கு அல்லது வேறு ஒரு முக்கிய வாரிசுக்கு மேயர் பதவிக்கு போட்டியிடலாம் என்றெல்லாம் தகவல்கள் வந்தன. அதிமுகவில் முக்கியமான வாரிசு ஒருவர் இந்த பதவிக்கு அடிபோடுவதாகவும் தகவல்கள் வந்தன. கோவையிலும் மேயர் பதவிக்கு கொங்கு மண்லடத்தின் வலுவான அதிமுக தலைவர் ஒருவரின் நெருக்கமான உறவினர் அடிபோடுவதாக கூறப்பட்டது.

 துணிச்சலான முடிவு

துணிச்சலான முடிவு

ஆனால் அதை எல்லாம் காலி செய்யும் வகையில் திடீரென இந்த மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண் அரசியல் தலைகள் பலருக்கு இந்த அறிவிப்பு ஜெர்க் கொடுத்திருக்கும். தமிழ்நாடு அரசின் இந்த முடிவை கண்டிப்பாக அதிமுக எதிர்பார்த்து இருக்காது. ஏன் திமுகவிலேயே மேயர் கனவில் இருந்த பல ஆண் அரசியல் தலைவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அரசியல் தாண்டி தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு மிகவும் முற்போக்கான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 2016ல் இருந்து இந்த போஸ்டிங் காலியாக இருக்கிறது.

பட்டியலின பெண்

பட்டியலின பெண்

இந்த முக்கியமான பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பது சாதி ரீதியாகவும் பாலின ரீதியாகவும் மிக முக்கியமான, துணிச்சலான முடிவாக பார்க்கப்படுகிறது. சென்னை, தாம்பரம் மேயர் பதவிகளை பட்டியலின பெண்கள் அலங்கரிப்பதும் கண்டிப்பாக தமிழ்நாடு வரலாற்றில் மிகவும் முற்போக்கான ஒரு அறிவிப்பாக இருக்கும். பெண்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலின சமத்துவம்

பாலின சமத்துவம்

தமிழ்நாட்டில் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக பெண் வேட்பாளர்களை அதிகம் களமிறக்கவில்லை என்ற குறை இருந்தது. 12 வேட்பாளர்களை திமுக சட்டசபை தேர்தலில் களமிறங்கியது. பெண்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை, பாலின விகிதாசாரம் குறைவாக உள்ளது என்று கூறப்பட்டது, இந்த நிலையில்தான் மாநகராட்சி மேயர் பதவிகளை பெண்களுக்கு அள்ளிக்கொடுத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

English summary
Why Tamilnadu Government's decision to reserve Chennai, other 10 Corporation mayors posting to Woman is important?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X