க்ளூவே இல்லையாமே.. யாருக்குமே புரியலையே... குழம்பும் சிஎஸ்கே அணி நிர்வாகம்.. ஆ அப்போ தோனி?
சென்னை: சிஎஸ்கே அணியில் தோனியால் முக்கியமான ஒரு குழப்பம் நிலவி வருவதாக அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023 ஐபிஎல் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கும்? அந்த அணி ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது நிலவரப்படி சிஎஸ்கே அணி மீதம் உள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் இன்று கொல்கத்தாவை சென்னையில் சிஎஸ்கே அணி எதிர்கொள்ள உள்ளது. சிஎஸ்கே கேப்டன் தோனி காரணமாக 2023 ஐபிஎல் சீசன் அதிக கவனம் பெற்றுள்ளது. எங்கே சென்றாலும்.. எல்லா மைதானங்களிலும் தோனிக்கு என்று ஸ்பெஷல் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அவரை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வர தொடங்கி உள்ளனர்.
தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதால் அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சிஎஸ்கே ஆடும் போட்டிகளில் எல்லாம் மைதானமே மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
சிஎஸ்கே அணியில் இனிமேல் தோனி ஆடுகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. அவர் தனது ஓய்வு பற்றி சரியாக எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால் அணியில் நிர்வாகிகள் குழப்பத்தில் இருக்கிறார்களாம். அதாவது சிஎஸ்கே அணிக்கு தோனி சென்ற பின் மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல் அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் கேப்டனாக யாரை தேர்வு செய்வது என்று தெரியாமல் சிஎஸ்கே அணி குழப்பத்தில் இருக்கிறதாம். அணியில் கேப்டன் மெட்டீரியலாக இருப்பவர் பென் ஸ்டோக்ஸ்.
ஆனால் அவர் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. அவர் காயம் காரணமாக களமிறங்கவில்லை. வாய்ப்பு கிடைத்த போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை.
அடுத்த சீசன் அவர் இருப்பாரா என்பதே சந்தேகம். அதனால் அவரை கேப்டனாக போடுவது ரிஸ்க். அடுத்ததாக சிஎஸ்கே அணியில் ஜடேஜா இருக்கிறார். ஆனால் அவர் அணி மீது ஆர்வம் இன்றி இருக்கிறார். அதனால் அவரை கேப்டனாக போடுவது சரியா என்று தெரியவில்லை.
ஏற்கனவே போன சீசனில் சில போட்டிகளில் அவர் கேப்டனாக ஆடி சொதப்பி இருந்தார். இன்னொரு பக்கம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணிக்கு நீண்ட கால கேப்டன் இருக்கும் விதமாக இளம் வீரரை கேப்டனாக கொண்டு வர திட்டங்கள் இருக்கிறதாம்.
முதலில் சிஎஸ்கே அணிக்குள் பென் ஸ்டோக்ஸ் கேப்டன் என்ற திட்டத்தின் கீழ்தான் கொண்டு வரப்பட்டார். அவரை எதிர்கால கேப்டனாக்கும் திட்டங்கள் இருந்தன. ஆனால் அவருக்கு அடிக்கடி காயங்கள் ஏற்படுகின்றன.
இந்த சீசனில் கூட 2 போட்டிகளில்தான் ஆடினார். அவர் பார்மிலும் இல்லை. இன்னும் சிஎஸ்கே செட்டப்பில் முழுமையாக அவர் பொருந்தவில்லை. அதோடு அவருக்கு வயதும் இல்லை.
சிஎஸ்கே கேப்டன் ஆனாலும் கூட அவர் நீண்ட காலம் கேப்டன்சி செய்ய முடியாது. அதோடு அவர் ஐபிஎல்லை விட இங்கிலாந்து கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தும் நபர் என்பதால்.. அடுத்த சீசன்களில் உறுதியாக ஆடுவார் என்பதெல்லாம் சந்தேகம்தான்.
இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி ருத்துராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமிக்க பயிற்சி வழங்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த வருடம் தோனி அணியில் இருப்பார். கேப்டனாக இல்லாமல் ஆலோசகராக ருத்துராஜுக்கு ஆலோசனை வழங்குவார் என்று கூறப்படுகிறது.
ஆனால் ருத்து இளைஞராக இருப்பதால்.. அவர் அணியின் கேப்டன்சிக்கு சரியாக இருப்பாரா என்ற கேள்வி, அவருக்கு அனுபவம் இருக்குமா என்ற குழப்பம் அணி நிர்வாகிகள் இடையே இருக்கிறதாம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications