புயலுக்கு முன்னே.. சென்னையில் நிலவும் பலத்த அமைதி.. கவனிச்சீங்களா? இதுதான் பயத்தை கிளப்புதே!
சென்னை: சென்னைக்கு அருகே மிக்ஜாம் புயல் நெருங்கி வரும் நிலையில் புயலுக்கு முன் அமைதி என்பது போல சென்னையே அமைதியாக காணப்படுகிறது.
வங்கக்கடலில் இன்று மிக்ஜாம் புயல் உருவாகி உள்ளது. இந்த புயலை முன்னிட்டு 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- விழுப்புரம்
- ராணிப்பேட்டை
- வேலூர்
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
- மயிலாடுதுறை
நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 'மிக்ஜாம்' புயல் உருவாகியுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எங்கே?: தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த புயல் என்னதான் 5ம் தேதி கரையை கடக்கலாம். 4ம் தேதி இரவு அல்லது 5ம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திர பிரதேசத்திற்கு அருகே புயல் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் அதற்கு முன்பே.. இன்று.. அதாவது 3ம் தேதி பிற்பகல் சென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 3ம் தேதி பிற்பகல் மூலம் 4ம் தேதி பிற்பகல் வரை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த 24 மணி நேரம்தான் சென்னைக்கு ரொம்ப முக்கியம். ஏனென்றால் இந்த நேரத்தில்தான் புயலின் கண் சென்னைக்கும் மிக அருகே வரும். அல்லது தமிழ்நாடு கடலோர மாவட்டங்களுக்கு அருகே புயலின் கண் வரும் .
அப்போது புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். கண் சென்னைக்கு அருகே வரும் போது கடுமையான மழை சென்னையில் பெய்யும்.
எங்கே உள்ளது?: புதுச்சேரியில் இருந்து கிழக்கு, தென் கிழக்கு திசையில் சுமார் 280 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. 7 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடக்கத்தில் 33 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்தது என்று வானிலை ஆய்வும மையம் தெரிவித்துள்ளது.
அமைதி: சென்னைக்கு அருகே மிக்ஜாம் புயல் நெருங்கி வரும் நிலையில் புயலுக்கு முன் அமைதி என்பது போல சென்னையே அமைதியாக காணப்படுகிறது. சென்னையில் இன்று அதிகாலை 4-7 மணி வரை கனமழை பெய்தது. அதன்பின் மழை பெய்யவில்லை.

அவ்வப்போது 5 நிமிட சாரல் மழை பெய்கிறது. அதை தவிர சென்னையில் பெரிதாக மழை பெய்யவில்லை. சென்னையில் காலை முதல் பெரிதாக மழை இன்றி அமைதியாக காணப்படுகிறது. ஆனால் வானிலை மையமோ.. இந்த வானிலை நிரந்தரம் கிடையாது. பிற்பகலுக்கு பின் கண்டிப்பாக கனமழை பெய்யும். அதோடு பலத்த காற்றும் வீசும்.
இந்த வானிலை புயலுக்கு முன் அமைதி என்பதை போன்ற வானிலை. அதனால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications