ரொம்ப பவர் புல்லாமே! கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளே என்ன அது? சின்னதா கட்டிட்டு இருக்காங்களே
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளே சிறியதாக கட்டப்படும் அறை ஒன்று கவனம் பெற்றுள்ளது. பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் இது கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானத்திற்கு பின் முக்கிய காரணம் ஒன்றும் உள்ளது.
கடந்த சில வாரங்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.

ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.
இதனால் அங்கே மழைநீர் தேங்கும் அபாயம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்து இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் 25 சதவிகிதம் கூடுதலாக செலவு செய்து இந்த முறை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை.
சென்னையில் இருந்து 30 கிமீ தூரத்தில் பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கே மெட்ரோ இல்லை. புறநகர் ரயில் இல்லை. இதனால் மக்கள் இங்கிருந்து சென்னைக்கு உள்ளே வருவது கடினமான வேலையாக இருக்கிறது. இங்கே பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்ட போதே அதை முறையாக திட்டமிடாமல் விட்டுவிட்டனர். அதன் காரணமாகவே தற்போது இங்கே மாற்றங்களை செய்து வருகின்றனர்.
இங்கே கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை சரி செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக விஷயங்களை மாற்றி வருவதாக ஆளும் திமுக அரசும் தெரிவித்து உள்ளது. உள்ளே இரண்டு மாடி.. மக்கள் செல்ல நவீன நகரும் தரைத்தளம், அதுபோக எக்ஸ்லேட்டர் என்று பல சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.

இங்கே மழை நீர் வடிகால் அமைப்பு கட்டி வருகின்றனர். அதனால் 3 கட்டம்: இதனால் இந்த பேருந்து நிலையத்தை திறப்பதற்கு மேலும் 3 மாதங்கள் தாமதம் ஆகலாம் என்கிறார்கள். அதாவது அடுத்த மாதம் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் நவம்பர் இறுதியில் திறக்கப்படலாம். அல்லது தீபாவளிக்கு முன் திறக்க முயற்சிக்கலாம் என்கிறார்கள்.
இந்நிலையில்தான் இந்த பிரம்மாண்ட பேருந்து நிலையத்தில் உள்ளே சிறியதாக கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இது சிறிய விநாயகர் கோவில் ஆகும். ராஜ செல்வ கணபதி என்ற விநாயகர் கோவில் கட்டப்படுகிறது. அதிக சக்தி வாய்ந்த கோவில் இது என்றும், பேருந்து நிலையத்தின் நுழைவு பகுதியில் இது கட்டப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. விரைவில் இந்த கோவிலுக்கும் பூஜைகள் நடக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இன்னொரு பக்கம் 99 சதவிகித பணிகள் கிளாம்பாக்கத்தில் முடிந்துவிட்டன. அடுத்த 1 மாதங்களுக்குள் பேருந்து நிலையம் கண்டிப்பாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன் இந்த மாதமே சோதனை ஓட்டமாக 2-3 மாவட்டங்களுக்கு மட்டும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த மாதம் 10 - 15 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் அங்கே ஒரு பேருந்து கூட இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.,
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications