கோவில்பட்டியில் டிடிவி தினகரன்.. செம ஸ்கெட்ச்.. ஈஸி டார்கெட் கடம்பூர் ராஜு.. "கொத்தாக" ஓட்டுக்கள்
சென்னை: கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். சரியாக கிரவுண்ட் ஒர்க் செய்து கோவில்பட்டியை தேர்ந்தெடுத்துள்ளார் தினகரன் என்கிறார்கள்.
இதோ தினகரன் ஏன், கோவில்பட்டியை தேர்ந்தெடுத்தார் என்று அக்கட்சி வட்டாரத்தில் கூறிய தகவல்கள்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒன்றிய சேர்மன் மாணிக்கராஜ் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் . ஏரியாவில் செல்வாக்கு உள்ளவர். அந்த வாக்கு வங்கி கோவில்பட்டி தொகுதிக்குத்தான் வரும்.

கோவில்பட்டி தொகுதி
இதுதவிர அதிமுகவில் உட்கட்சி பூசல் நிறைவுறுகிறது. தற்போது கோவில்பட்டியில், சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு வுக்கு எதிராக அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் வெறும் 400 வாக்குகளில்தான் கடம்பூர் ராஜு வெற்றி பெற்றார். இந்த நிலையில்தான் கோவில்பட்டி தொகுதியை தினகரன் தேர்ந்தெடுத்துள்ளதை பார்க்க முடிகிறது.

பெரும் ஆய்வு
ஆர் .கே.நகரில் மறுபடி போட்டியிடுவதை விடவும் பின் தங்கியுள்ள, கோவில்பட்டி சிறந்தது என்பதை களத்தில் ஒரு மினி சர்வே நடத்தி தினகரன் முடிவெடுத்து இருக்கிறார் என்கிறார்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி வட்டாரத்தில். அப்படி என்ன சர்வே என்கிறீர்களா?

தென் மாவட்டத்தின் மையப்பகுதி
பொதுவாக ,தென்மாவட்டம் என்று அழைக்கப்படுவது மதுரை மற்றும் அதற்கு தெற்கே உள்ள மாவட்டங்கள்தான். நிலவியல் அமைப்புபடிப் பார்த்தால் இந்த தென்மாவட்டங்களில் நடுநாயகமாக மையப் பகுதியில் இருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்பட்டிதான். திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள நகரம் கோவில்பட்டி.

அதிமுகவுக்கு எதிராக வியூகம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தென்மாவட்டங்களில் அதிமுக வாக்குகளை பிரிக்க வேண்டும், அதன் மூலம் தங்கள் வெற்றியை சாத்தியப்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடிய கட்சியாக இருக்கிறது. எனவே தென் மாவட்டத்தின் மைய பகுதியில் அதன் பொதுச்செயலாளர் தினகரன் போட்டியிடும் போது அதன் அதிர்வுகள் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்திலும் எதிரொலிக்கும் என்று தினகரன் எதிர்பார்க்கிறார் . அதாவது தென் மாவட்டத்தில் மையப் புள்ளியிலிருந்து இயங்க வேண்டும் என்பது தினகரன் திட்டம்.

மோடி திட்டம்
லோக்சபா தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கு இப்படித்தான் காரணம் கூறப்பட்டது. நாட்டின் மையப்பகுதியில் இருந்து மோடி போட்டியிடும் போது அது அனைத்து பிராந்தியங்களிலும் பாஜகவுக்கு ஆதரவு அலைகளை உருவாக்கும் என்பது ஒரு அரசியல் கணக்காக இருந்தது. இப்போது தினகரன் அதே கணக்கை கையில் எடுத்துள்ளார்.

முக்குலத்தோர் ஓட்டு
மதுரைக்கு மேற்கே தேனி மாவட்டம் உள்ளது. அங்கு முக்குலத்தோர் அதிகம். ஆனால் தெற்கே, கோவில்பட்டி தொகுதியில் சிறப்பம்சம் என்னவென்றால் முக்குலத்தோர் அதிகமாக இருக்க கூடிய தொகுதி. அனைத்து சமூகத்தினரும் கணிசமாக கலந்து இருக்கக்கூடிய ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

ஜாதி கணக்கு
கோவில்பட்டியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள். இதில் முக்குலத்தோர் வாக்குகள் 23 சதவீதம் உள்ளது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த அளவுக்கு ஒரே இடத்தில் முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் இருப்பது இந்த தொகுதியில்தான் என்று கூறுகிறார்கள். அடுத்தபடியாக நாயுடு ஜாதியினர் சுமார் 20 சதவீதம் பேர் இருக்கிறார்கள். நாடார்கள், 19%. இதர ஜாதியினர் 11 சதவீதம் பேர் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தினகரன் வியூகம்
இவை அனைத்தையும் பரிசீலனை செய்து டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுவதற்கு முடிவு செய்திருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் அடித்துக் கூறுகின்றன. சாத்தூர் தொகுதியில் அதிமுக சிட்டிங் எம்எல்ஏ ராஜவர்மனுக்கு போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வாய்ப்பு வழங்கி உள்ளது . அதிமுகவில் அவர் சீட்டிங் எம்எல்ஏ ஆகும். ஆனால் அவருக்கு சீட் தரவில்லை என்பதால் இன்றுதான் அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் சேர்ந்து இருந்தார். 5 மணி நேரத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications