Vijay: மேட்டிமைத்தனத்தின் உச்சம்.. விஜய் சொன்ன அந்த விஷயம்.. ரொம்ப ஆபத்தானது.. ஏன் தெரியுமா?
சென்னை: இன்று மாணவர்கள் முன்னிலையில் நீட் குறித்து விஜய் பேசிய வார்த்தைகள் ஆபத்தானது. அதற்கு பின் சில காரணங்கள் உள்ளன.
ஆண்டாண்டு காலமாக இந்திய சமூகங்களில்.. குறிப்பிட்ட சமூகங்கள் தவிர மற்றவை பெரிய அளவில் கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. கல்வி என்பது அவர்களுக்கு வழங்கப்படாமலே இருந்தது. பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் செய்த பல்வேறு முன்னெடுப்புகள்தான் இவர்கள் கல்வி பெற சூழ்நிலையை ஏற்படுத்தின.
ஆனால் அப்படிப்பட்ட கல்வியையும் கூட பல தேர்வுகள், கடுமையான முறைகள் வைத்து கடுமையாகும் வழக்கங்கள் உள்ளன. உதாரணமாக நீட் தேர்வை எடுத்துக்கொள்வோம். இது கிராம மாணவர்களுக்கு எதிரானது. அதற்கு காரணங்கள் உள்ளன. சிட்டியில் இருக்கும் ஒரு பொருளாதாரம் கொண்ட மாணவன் 10-12ம் வகுப்பு வரை நீட் தேர்விற்கு பல லட்சம் பணம் கொடுத்து பயிற்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர முடியும்.
ஆனால் இன்னொரு பக்கம் கிராமத்தில் உள்ள மாணவனிடம் பணம் இருக்காது. அவனால் பெரிய கோச்சிங் செல்லவும் முடியாது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி வைத்து அதில் ஒருவரை தேர்வு செய்யும் தேர்வு எப்படி சமத்துவமான தேர்வாக இருக்க முடியும். நீட்டை தீர்க்கமாக எதிர்க்கும் திமுக போன்ற கட்சிகள் வைக்கும் வலுவான வாதங்கள் இவை. அதில் உண்மை இல்லாமல் இல்லை .

விஜய் ஆபத்தான பேச்சு
இப்படிப்பட்ட நேரத்தில்தான் இன்று மாணவர்கள் முன்னிலையில் நீட் குறித்து விஜய் பேசிய வார்த்தைகள் ஆபத்தானது. அதற்கு பின் சில காரணங்கள் உள்ளன.
நீட்டை ஆதரிக்கும் மேட்டிமைத்தனம் கொண்ட பலர் சொல்லும் முக்கிய வாதம்.. ஏன் நீட்தான் படிக்கணுமா? உங்க புள்ளை டாக்டர்தான் ஆகணுமா? என்ற கேள்வி. அதாவது நன்றாக இருந்த மருத்துவ சிஸ்டத்தை உடைத்து நொறுக்கிவிட்டு.. இப்போது நீங்க நீட்தான் படிக்கணுமா? பாஸ் ஆக கஷ்டமா இருந்தா நீங்க எல்லாம் நீட் படிக்க லாயக்கா? என்று கேள்வி எழுப்ப வாதம் வைப்பார்கள்.
அதாவது மேட்டிமை திமிரில் வைக்கப்படும் வாதம். அதற்கு சற்றும் சளைக்காத ஒரு பேச்சைத்தான் இன்று விஜய் பேசி இருக்கிறார். இன்று மாணவர்கள் முன் பேசிய விஜய், நீட் தேர்வு மட்டும் தான் உலகமா? நீட்டை தாண்டி உலகில் சாதிக்க பல உண்டு.. எல்லாவற்றையும் படிக்கலாம். ஒரேயொரு தேர்வில் சாதிக்க வேண்டும் என்பது சாதனை அல்ல. ஒரு தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று அழுத்தத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். ஏனென்றால், நீட் தேர்வு மட்டும்தான் உலகமா? நீட் தேர்வை தாண்டி இந்த உலகம் மிகவும் பெரியது. அதில் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. , என்று கூறினார்.
அதே மேட்டிமை குரலில்.. விஜய் பேசினார். அதிலும் அம்பேத்கர், பெரியாரை தங்களின் கொள்கை தலைவர் என்று கூறிக்கொள்ளும் விஜய் உதிர்த்த முத்துக்கள் இவை . இதைத்தான் ப்ளூ சட்டை மாறனும், விஸ்வகர்மா மூலம் குலத்தொழில் ஊக்குவிக்கப்படுகிறது - பாஜக. ஆடு, மாடு மேய்ப்பதை அரசுத்தொழில் ஆக்குவேன் - ஶ்ரீமான். சாதாரண குடும்பத்தை சேர்ந்த உங்களுக்கு மருத்துவராகும் கனவு எதற்கு? வேறு படிப்பை படியுங்கள் என்பதன polite versionதான் விஜய் பேச்சு என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
யாரோ எழுதியதை படத்தில் பேசும் விஜய் அரசியலிலும் அப்படி செய்யலாம்.. தான் பேசுவது சரியா என்று உணர்ந்து பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். குறைந்தது மாணவர்கள் முன் பேசும் போதாவது விஜய்க்கு கொஞ்சம் தெளிவு தேவைப்படுகிறது! நீட்தான் எல்லாமே என்று கேட்கும் விஜயிடம் ஒரு நீட் படிக்கும் மாணவர்.. உங்களுக்கு முதல்வர் பதவி மட்டும்தான் முக்கியமா ? கவுன்சிலர் ஆகலாமே என்று கேட்டால் எப்படி இருக்கும் என்பதை அவர் உணர வேண்டும்!












Click it and Unblock the Notifications