Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பறை அடித்தலை விசிக தடை செய்ய சொல்வது ஏன் தெரியுமா? ஜாதி ஒழிப்பில் அங்குலமாவது முன்னேற்றம் ஏற்படும்?

பறை அடித்தலையும் தடை செய்தல் என்ற விசிக கோரிக்கை விவாதித்தக் கூடியதாக உருவெடுத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தண்டோரா போடுதல், குறவன் குறத்தி ஆட்டம் ஆடுதல் ஆகியவற்றுக்கு தடை விதித்ததைப் போல தமிழ்நாடு அரசு பறை அடித்தலுக்கும் தடை விதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுத்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

பறை அடித்தல் என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதியினரால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது குலத் தொழிலாக இன்றளவும் தமிழ்நாட்டின் பெரும்பான்மை கிராமங்களில் இருந்து வருகிறது. திராவிடர் இயக்கம், 1990களின் தலித் இயக்கம் ஆகியவற்றின் எழுச்சியைத் தொடர்ந்து பறை அடித்தல் என்பது பொதுப் பண்பாட்டு அடையாளமாக உருமாற்றப்பட்டும் வருகிறது.

Why VCK demands to ban beating of Parai in Tamilnadu?

ஆனாலும் இத்தகைய உருமாற்ற முயற்சிகள் என்பது சொற்பமான ஒரு தாக்கத்தைத்தான் ஏற்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக பறை அடித்தல் தொழிலை செய்வோரை கீழான ஜாதியினர், ஒடுக்கப்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், தலித்துகள் என்கிற முத்திரையில் இருந்து விடுவிப்பதற்கு துளி பங்களிப்பையும் செய்துவிடப் போவது இல்லை. ஏனெனில் நமது கிராமங்களின் கட்டமைப்பும் ஜாதிய கட்டமைப்பும் அப்படி ஒரு திண்ணமாக, இறுதிய தன்மையுடன் கொடூரமானதாக இருக்கிறது.

குறிப்பிட்ட ஜாதியினர் பறை அடித்தே ஆக வேண்டுன் என வெறிகொண்ட ஜாதியினர் ஒடுக்குவதும் அதை எதிர்த்து கலகக் குரல் எழுப்பி உயிர் தியாகம் செய்வதுமான வரலாறுகளும் தமிழ்நாட்டில் உண்டு. ஜாதிய கட்டமைப்பு, பறை அடித்தல் ஜாதி, ஆதிக்க ஜாதி இந்த மூன்றுக்குமான ஒன்றோடு ஒன்றுடன் தொடர்புடைய கண்ணிகள் அறுத்தெறியப்படும் வரை ஜாதிய ஒடுக்குமுறை ஒழியப் போவதில்லை என்பது சமூக வரலாற்று பார்வையாளர்களின் கருத்து.

தமிழ்ச் சமூகத்தில் ஜாதிய ஒடுக்குமுறையில் முதன்மைப் பங்கு வகித்தது நிலம், அதிகாரம், பொருளாதாரம் என்பது மட்டுமல்ல.. இவை கண்ணுக்குப் புலப்படுகிற ஒடுக்குமுறை வடிவங்கள். கண்ணுக்கு தெரியாமல் புரையோடிக் கிடக்கிற ஒடுக்குமுறையின் அச்சாணிதான் "காணி' முறை. காணி முறை எப்போது முதல் நடைமுறையில் இருக்கிறது என்கிற ஆராய்ச்சிகளுக்கு அப்பால் காணி முறை என்ன செய்கிறது என்பதுதான் முக்கியம்.

ஒரு கிராம. இதன் பெயர் ******* பட்டி என வைத்துக் கொள்ளுங்கள். இந்த ******* பட்டி கிராமத்தில் ஆதிக்க ஜாதியினர் அல்லது பெரும்பான்மை ஜாதியினர் பெரும்பான்மையினராக இருப்பவர். இதனை ஒட்டிய சேரி அல்லது காலனி அல்லது எம்ஜிஆர்/அண்ணா நகர்களில் ஒடுக்கப்படுகிற சமூகத்தினர் வாழ்வர். ஆதிக்க அல்லது பெரும்பான்மை ஜாதியினரில் நல்லது- கட்டது அதாவாது திருமணம்/ சடங்கு/ இழவு இவற்றில் அவர்களது சொந்த பந்தம் பங்கேற்கிறார்களோ இல்லையோ/ ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சிலவற்றை செய்வதற்காக கட்டாயம் வருவர். இருந்தாக வேண்டும். உதாரணமாக இழவு வீடு எனில் இங்கே பறை அடிப்பதற்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் சில குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக வந்து அடித்துவிட்டு செல்வர். அவர்களுக்கு சொற்ப கூலி ஒன்று வழங்கப்படும். இவர்களே பிணத்தை அடக்கம்/ எரிப்பவர்களாகவும் இருப்பவர். பறை அடிப்பவர்/ உறுமி அடிப்பவர்/ வண்ணார்/நாவிதர் ஆகியோர் ஒரு இழவு வீட்டின் இருக்க வேண்டிய ஒடுக்கப்பட்ட ஜாதியினர். இப்படி செய்யும் பணிக்கு ஒரு பெயர்தான் காணிகாரார் என்பது பெயர். அதாவது இழவு வீடு எனில் எப்படி சொந்த பந்தங்களுக்கு ஜாதி சனத்துக்கு சொல்லி அனுப்புகிறார்களோ அதேபோல மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு காணிக்காரர்களுக்கு சொல்லி அனுப்புவது வழக்கம். காணிக்காரர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட மேலே குறிப்பிட்ட பணிகளை செய்து முடித்தாக வேண்டிய கட்டாயம் அல்லது கடமை இருக்கிறது. இல்லை எனில் காணிக்காரர் உரிமை காவு வாங்கப்பட்டுவிடும் என்பது ஆதிக்க ஜாதியினரின் மிரட்டல்.

காணிக்காரர் முறையின் மையமே குறிப்பிட்ட சில ஜாதியினர் குறிப்பிட்ட சில தொழில்களை செய்வது என்பதுதான். அதில் பறை அடித்தலும் ஒன்றாக இருக்கிறது.

அண்மைக்காலமாக மின்மயானங்களை கிராமப்புறங்களில் பயன்படுத்துகிற போக்கு தொடங்கி இருக்கிறது. மின்மயானங்களை பயன்படுத்துகிற இடங்களில் இத்தகைய காணிக்காரர்கள் கண்டுகொள்ளப்படாத சூழ்நிலையும் இருக்கிறது.

இதுதான் இன்றைய தமிழ்ச் சமூகத்தின் யதார்த்த நிலைமை. பறை அடித்தலை குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே செய்தாக வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு தடை செய்வதன் மூலம் காணி முறை எனும் ஜாதிய மனுவாத அடிமைத்தனத்துக்கு ஆகப் பெரும் கண்ணிவெடி வைக்க முடியும். அதனைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இந்த தமிழர் நிலத்தின் மூத்த குடிகளை தொழிலின் அடிப்படையில் இழிவுபடுத்துகிற மனுவாதப் போக்கு மரணித்துப் போக வேண்டும் எனில் காணி முறையின் கண்ணியாக இருக்கும் பறை அடித்தல் சாகடிக்கப்பட வேண்டும் என்ற வாதம் சரியானது என்பது சமூக வரலாற்று பார்வையாளர்கள் கருத்து.

அதே தருணத்தில் ஒவ்வொரு பேரூராட்சியிலும் மின்மாயனங்களை கட்டயாப்படுத்துதல்; சுடுகாடு- இடுகாடு முறைகளுக்கு முடிவுகட்டி அனைத்து மரணங்களுமே மின்மயானத்தில் எரியூட்டப்பட்டு ஆவணப்படுத்துதல் என அடுத்த கட்டங்களை நோக்கி பயணித்தாக வேண்டியதுதான் சமூக நீதியை பேசுகிற திராவிட மாடல் அரசாங்கத்தின் முன் உள்ள கடமை என்கின்றனர் சமூகவியல் பேராசிரியர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+