மலர்விழி ஐஏஎஸ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்? பின்னணியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்? ஒரே மோதலாமே
சென்னை: தமிழக ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் மலர்விழி மீதான வழக்குப்பதிவு மற்றும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு பின்னணியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தான் காரணம் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் மலர்விழி. குரூப் 1 தேர்வின் மூலம் பணிக்கு சேர்ந்த இவர் ஐஏஎஸ் அந்தஸ்தை பெற்று பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் பணியாற்றி உள்ளார்.

சிவகங்கை, தர்மபுரி கலெக்டர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு வந்த இவர் தற்போது சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார். இந்நிலையில் தான் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். ஐஏஎஸ் அதிகாரியாக உள்ள மலர்விழி வீட்டில் இந்த சோதனை நடந்தது பெரியளவில் பரபரப்பை கிளப்பியது.
இந்த சோதனைக்கு பின்னணியில் 2020ல் மலர்விழி தர்மபுரி கலெக்டராக இருந்தார். அது கொரோனா பரவிய காலம். இந்த சந்தர்ப்பத்தில் கிருமி நாசினி கொள்முதலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதோடு ரூ.40 மதிப்புள்ள சொத்து வரி, குடிநீர் கட்டணம் வசூல் உள்ளிட்டவற்றுக்கான சில ரசீது புத்தகங்களை 135 ரூபாய்க்கு வாங்கியதாகவும், இதில் ரூ.1.32 கோடி முறைகேடு செய்ததாகவும் மலர்விழி உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் டெண்டர் கோரப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கின் அடிப்படையில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2 நாளுக்கு முன்பு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தாய்சா குடியிருப்பில் மலர்வழி வீட்டில் சோதனை நடத்தினர். அன்றைய தினம் மட்டும் மொத்தம் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட்டனர். சென்னையில் 5 இடங்களிலும், புதுக்கோட்டையில் 3 இடங்களிலும் விழுப்புரம், தர்மபுரியில் தலா ஒரு இடங்களிலும் சோதனைகள் நடந்தன.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஐஏஎஸ் அதிகாரி மலர்விழிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு மற்றும் வழக்கு பதிவின் பின்னணியில் உள்ள விவகாரம் தனி ரகம் என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். மலர்விழி மீது சுமர்த்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மைதான். ஆனால், அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு ஊழல்கள் முறைகேடுகள் மட்டுமே காரணம் இல்லை எனவும், இதன் பின்னணியில் ஐஏஎஸ் அதிகாரிகளின் ஆக்டோபஸ்கரங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, தமிழக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சென்னை நெற்குன்றத்தில் குறைந்த விலையில் வீடுகள் ஒதுக்கியது தமிழக அரசு. அந்த குடியிருப்பில் ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் வீடுகளை வாங்கியுள்ளனர். மலர்விழியும் வாங்கியிருக்கிறார். ஆனால் இதற்கான தொகை ஃபிக்ஸ் பண்ணப்பட்டபோது மற்ற அதிகாரிகளை விட டெவலப்மெண்ட் தொகை இவருக்கு அதிக அளவில் இருந்துள்ளது.
இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் உதயச்சந்திரன் மற்றும் ஜெகன்னாதனிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் மலர்விழி. முறையான பதில் கிடைக்கவில்லை. அப்படியானால் வீடு வாங்கிய எல்லா அதிகாரிகளுக்கும் எனக்கு சொல்லப்படுகிற டெவலப்மெண்ட் தொகையையே வாங்க வேண்டும் என பிரச்சனை செய்திருக்கிறார். அது ஏற்கப்படாததால், நீதிமன்றத்துக்கு போவேன் என ஆர்கியூமென்ட் பண்ணியிருக்கிறார் மலர்விழி.
இதற்கிடையே தான் நீதிமன்றத்துக்கு போவேன் என அவர் சொன்னதை தங்களை மிரட்டுவதாக சீனியர்கள் கோபப்பட்டுள்ளனர். இதனால் ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். சீனியர் அதிகாரிகளுக்கு எதிராக மலர்விழி நீதிமன்றத்துக்கு போவதாக சொன்னதுதான், மலர்விழியை பழி வாங்க லஞ்ச ஒழிப்புத் துறையை பயன்படுத்தியுள்ளனர்.
பொதுவாக ஒரு அதிகாரி மீது புகார் வந்தால் அது குறித்து ரகசியமாக விசாரித்து ஆதாரங்கள் இருந்தால் தான் வழக்குப்பதிவு செய்யப்படும். ஆனால், மலர்விழி விஷயத்தில் புகார்தாரர் என்று ஒருவரும் இல்லை. இருப்பினும் சூமோட்டோ (தாமாக முன்வந்து வழக்குப்பதிவு)வழக்குப்பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. அதை வைத்து பார்க்கும் போது, விஜிலென்ஸை சீனியர் ஐஏஎஸ்கள் தூண்டியிருப்பது புலனாகியிருக்கிறது. ஏனென்றால் இன்ஃப்ளூயன்ஸ் இல்லையெனில் லஞ்ச ஒழிப்புத்துறை சூமோட்டோவாக வழக்கு பதிவு செய்யாது.
விருப்பு வெறுப்பின் அடிப்படையிலேயே அரசு நிர்வாகம் சில ஐஏஎஸ் அதிகாரிகளால் இயக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பலருக்கு எதிராகவும் மாறப்போகிறது மலர்விழியின் மீதான இந்த ஊழல் வழக்கு என்று பின்னணிகளை விவரிக்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள் சிலர்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications