எமோஷன் ஆகாத விஜய்.. நேற்று விஜயகாந்தை பார்த்ததும் வெளிப்படையாக உடைந்து நின்றது ஏன்? காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக பொது இடங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத நடிகர் விஜய் நேற்று தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்திற்கு மரியாதையை செலுத்திய போது மிகவும் இறுக்கமாக காணப்பட்டார். அதோடு வெளிப்படையாக அவர் உணர்ச்சிகளை காட்டியது கவனம் பெற்றது.

பொதுவாக விஜய் பொது இடங்களில் மிகவும் அமைதியாக இருக்க கூடியவர். பொதுவாக அதிகம் சிரிக்க கூட மாட்டார். அமைதியாக தன்னை கட்டிக்கொள்ள கூடியவர். அதேபோல் மற்ற எந்த உணர்ச்சிகளையும் அவர் வெளிப்படுத்தியதே இல்லை.

Why Vijay felt down and visibly sad after seeing DMDK Founder Vijayakanth in ice box?

ஆனால் நடிகர் விஜய் நேற்று தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்திற்கு மரியாதையை செலுத்திய போது மிகவும் இறுக்கமாக காணப்பட்டார். அதோடு வெளிப்படையாக அவர் உணர்ச்சிகளை காட்டியது கவனம் பெற்றது. விஜயகாந்த் இருந்த பாக்ஸ் மீது தலையை வைத்து அங்கேயே அவர் கண்ணீர்விட்டார்.

அப்படியே உடைந்து போய் விஜயகாந்த் முகத்தை பார்த்துக்கொண்டே.. உறைந்து போய் நின்றார். மிகவும் உணர்ச்சிகரமாக அவரின் முகம் காணப்பட்டது. ஐஸ் பாக்ஸ் மீது அப்படியே முகத்தை வைத்தப்படி சோகத்தின் உருவாகவே இருந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஏன் இந்த சோகம்: விஜயகாந்திற்கு மரியாதையை செலுத்திய போது மிகவும் இறுக்கமாக காணப்பட்டார். அதோடு வெளிப்படையாக அவர் உணர்ச்சிகளை காட்டியது கவனம் பெற்றது. விஜய் இப்படி உணர்ச்சிவசப்பட காரணம் உள்ளது.

ஒரு காலத்தில் சினிமா உலகில் விஜய்க்கு எல்லாமுமாக இருந்தார் விஜயகாந்த். விஜயகாந்த் நடித்த வெற்றி என்ற திரைப்படத்தின்தான் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். இதையடுத்து குழந்தை நட்சத்திரமாக வரிசையாக விஜய்க்கு குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் வாய்ப்பு கொடுத்தார்.

எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய செந்தூரபாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் விஜய் சேர்ந்து நடித்தார். விஜயின் தொடக்க காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தது என்னவோ விஜயகாந்த்தான். அந்த காலங்களை மறக்காத விஜய், விஜயகாந்த்திற்கு மரியாதை செய்யும் போது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்துள்ளார்.

நேற்று மரணம்: தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை காலமானார். கடந்த சில வாரங்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போதே அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன.

அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடலநிலை மோசமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அவரின் உடல்நிலை அதன்பின் சரியாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கூட விஜயகாந்த் கலந்து கொண்டார்.

இப்போது மரணத்திற்கு என்ன காரணம்?: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலைக்கு என்ன ஆனது? அவரின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் இருந்துள்ளன.

அதை தொடர்ந்து கொரோனா ஏற்பட்டு உள்ளது. ஆனால் மரணத்தின் பின் அது பாசிட்டிவ் ஆக இல்லை. இதனால் அவரின் மரணத்திற்கு கொரோனா காரணம் என்று கூற முடியாது. மரணத்திற்கு பின் செய்யப்பட்ட சோதனையில் அவர் கொரோனா பாசிட்டிவ் இல்லை.

விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாகவே மரணம் அடைந்து உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாலையில் நுரையீரல் அழற்சி தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். அவருக்கு சுத்தமாக மூச்சு விடும் திறன் இல்லாமல் போய் உள்ளது. கொரோனா + நாட்பட்ட நுரையீரல் பாதிப்பு + நுரையீரல் அழற்சி மூன்றும் சேர்ந்துதான் அவரின் உடல்நிலையை மோசமாக்கி உள்ளது. இதுவே அவரின் மரணத்திற்கும் காரணம் ஆகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+