அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன?
சென்னை: தன்னுடைய அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என குடும்பத்தில் அனைவருமே தன்னிடம் கடன் வாங்கி உள்ள கடனாளிகள் என்று விஜய் தனது பிரமாணபத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆனால் இது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. விஜய் இப்படி குறிப்பிடுவதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
தவெக இந்த முறை மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
விஜய் தனது பிரமாண பத்திரத்தில் , தன்னுடைய மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடி, அப்பா சந்திரசேகருக்கு ரூ.3 கோடி, அம்மா ஷோபாவுக்கு ரூ.87 லட்சம், மகன் ஜேசனுக்கு ரூ.8 லட்சம், மகள் ஷாஷாவுக்கு ரூ.4 லட்சம் கடன் வழங்கியுள்ளார் என்று கணக்கு கூறப்பட்டு உள்ளது.

திருமணமாகி 25 ஆண்டுகளில் மனைவி, மகன், மகள் பெயர்களில் ஒரு சொத்து கூட வாங்கவில்லை என்று விஜய் கணக்கு காட்டி உள்ளார். சொத்துகள் அனைத்தையும் தன்னுடைய பெயரில் மட்டுமே வாங்கிக் குவித்துள்ளதாக தனது வேட்புமனுவில் தகவல் தெரிவித்துள்ளார்.
தனது பெயரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான 883 கிராம் தங்கம் இருப்பதாக விஜய் தகவல் தெரிவித்துள்ளார். மனைவி சங்கீதா பெயரில் 3 கிலோ தங்க நகைகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ரூ.1 கோடி மதிப்பிலான 135 காரட் வைர நகைகள் சங்கீதா பெயரில் இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
விஜய் தனது வருமானமாக பின்வரும் தொகையை கணக்கு காட்டி உள்ளார்,
2024-25 - ரூ. 184.53 கோடி
2023-24 - ரூ. 105.69 கோடி
2022-23 - ரூ. 198.75 கோடி
2021-22 - ரூ. 237.46 கோடி
2020-21 - ரூ. 8 கோடி
கடன் வாங்கியது உண்மையா?
தன்னுடைய அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என குடும்பத்தில் அனைவருமே தன்னிடம் கடன் வாங்கி உள்ள கடனாளிகள் என்று விஜய் தனது பிரமாணபத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆனால் இது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. விஜய் இப்படி குறிப்பிடுவதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
பெரும்பாலான நேரங்களில் இப்படி கடன் என்று கூறப்படுவது உண்மையில் கடன் இல்லை. வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்ததை கடன் என்று கூறலாம். ஆனால் இது சட்டவிரோதமான செயல் அல்ல. பல வேட்பாளர்கள் (குறிப்பாகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்) தங்கள் பெற்றோர், வாழ்க்கைத் துணை அல்லது குழந்தைகளுக்குப் பணம் கொடுப்பது வழக்கம். இது குடும்ப உதவி, முதலீடு, சொத்து வாங்குதல் அல்லது தனிப்பட்ட செலவுகளுக்காகச் செய்யப்பட்டிருக்கலாம்.
இருப்பினும், வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது (Affidavit), இந்தப் பணப் பரிமாற்றத்தைக் "கடன்" என்று குறிப்பிடுவது மட்டுமே சரியான சட்ட முறையாகும். ஏனென்றால் செலவு என்பதை அப்படித்தான் கணக்கு காட்ட முடியும். அவ்வாறு குறிப்பிடத் தவறினால்: சொத்து விவரங்களை மறைத்ததாகக் குற்றச்சாட்டு எழக்கூடும். தேர்தல் ஆணையம் வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்புள்ளது அல்லது பிற்காலத்தில் இது பெரிய சட்ட சிக்கலாக மாறக்கூடும் என்பதால் விஜய் இப்படி கணக்கு காட்டி இருக்கலாம்.
-
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய்











Click it and Unblock the Notifications