தவெக தந்த புகார்.. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்ட பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தலைமை செயலாளர், டிஜிபி, லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் போன்ற முக்கிய அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியிருப்பது மிகப்பெரிய அரசியல் மற்றும் நிர்வாக அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் காலங்களில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு படி அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம் என்றாலும், முதல்வர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டின் டாப் அதிகாரிகள் தவெக தந்த புகாரல் ஒரே நேரத்தில் மாற்றப்படடிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறப்போவதகா கடந்த மாதம், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததது. ஏனெனில் பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.

Chennai Police Commissioner

தேர்தல் ஆணையம் அரசு இயந்திரம் ஒரு சார்பாகச் செயல்படுவதாகக் கருதினாலோ அல்லது புகார்கள் வந்தாலோ, தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக அதிகாரிகளை மாற்றும். யாரை வேண்டுமானாலும் எந்த பதவிக்கும் மாற்றலாம். எந்த பொறுப்பும் கொடுக்காமல் அவர்களை உட்கார வைக்கவும் முடியும். புதிய அரசு வந்த பின்னரே அவர்கள் வழக்கமான வேலைகளில் ஈடுபட முடியும். இதுதான் இயல்பான ஒன்று.

அந்த வகையில், தமிழ்நாட்டில் தலைமை செயலாளர், டிஜிபி, லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி, சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் என அடுத்தடுத்து அதிரடியாக மாற்றப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகார்கள் இந்த அதிரடியான மேஜர் மாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

தவெக தலைவர் விஜய் தரப்பு, பெரம்பூர், வில்லிவாக்கம் உள்பட சில இடங்களில் அவரது பிரசாரத்திற்கு போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து அனுமதியை தடுப்பதாகவும், இது திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதன் வெளிப்பாடு எனவும் புகார் கொடுத்தது. குறிப்பாக, தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை தேர்தல் விதிகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

தவெகவின் சுற்றுப்பயணம் மற்றும் பிரசாரங்களுக்கு போதிய அனுமதி, பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், சில நேரங்களில் அதிரடியான போலீஸ் நடவடிக்கைகள் மூலம் அவரது பிரசாரம் தடுக்கப்படுகிறது என்றும் தவெக கூறியது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம், மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேரில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

பொதுவாக தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்ய, ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்படும் அல்லது நீண்ட காலம் ஒரே பதவியில் இருக்கும் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றுவது வழக்கம் ஆகும். அந்த வகையில், தமிழகத்தின் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் எம். சாய் குமார் நியமிக்கப்பட்டார. அதேபோல் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜி. வெங்கட்ராமனுக்குப் பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அருணுக்கு பதில் புதிய சென்னை போலீஸ் கமிஷனராக அபின் தினேஷ் மோதக்கை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மாற்றங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக-வின் அழுத்தத்தின் பேரிலேயே தேர்தல் ஆணையம் இந்த அதிரடி மாற்றங்களைச் செய்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அஸ்ஸாம், பீகார் போன்ற மாநிலங்களில் இல்லாத நடைமுறை ஏன் தமிழ்நாட்டில் மட்டும் என்று தலைமை செயலாளர் மாற்றத்தின் போது முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+