ஆஹா! 2 பேருக்கும் கல்தா தரும் மோடி? எடப்பாடி, ஓபிஎஸ்ஸுக்கு "ரெட் சிக்னல்".. 7.30க்கு என்ன நடக்கும்?
சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடி இன்று மாலை 7.30 மணிக்கு பின் யாரை எல்லாம் சந்திக்க போகிறார், யாருடன் ஆலோசனை செய்ய போகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இன்று தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் தமிழ்நாட்டில் நடக்க உள்ளது. இதற்காக சென்னை முழுக்க மாஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை 10 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் இந்த தொடர் தொடங்கி உள்ளது.

என்ன செய்வார்?
பிரதமர் மோடியின் இந்த சென்னை பயணத்தில் மாலை 7.30 மணி வரை மட்டுமே அவர் நிகழ்ச்சி நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கில் இருப்பார். பின்னர் 7.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார். அங்குதான் இரவு பிரதமர் மோடி ஓய்வு எடுப்பார். அதன்பின் நாளை காலை அண்ணா பல்கலையில் நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். இன்று இரவு மோடி யாரை சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்ணா பல்கலை
இன்று இரவு 7.30 மணிக்கு பின் மோடி ஓய்வு எடுப்பதாகவே திட்டம். ஆனாலும் இரவு வரை அவர் பலரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. மாலை ஆளுநருடன் அவர் ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனை முடிந்ததும் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சிலருடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது. நாளை காலையும் இவர்களுடன் மோடி சந்திப்பு நடத்த உள்ளார்.

இரண்டாம் கட்ட தலைகள்
இது போக பாஜகவின் இரண்டாம் கட்ட இளம் தலைவர்கள் சிலரையும் மோடி சந்திக்க இருக்கிறார். அதாவது பாஜகவில் வேகமாக வளர்ந்து வரும் இளம் தலைவர்களை சந்தித்து அவர்களை பாராட்டும் விதமாக மோடி இன்று பேசுவார் என்று கூறப்படுகிறது. வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ஆளும் திமுக தரப்பு நிர்வாகிகளை நிர்வாக ரீதியாக மோடி சந்திக்க வாய்ப்பு உள்ளது. இதில் திமுக அரசு சார்பாக சில
கோரிக்கைகள் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Recommended Video

வாய்ப்பு இல்லை
இதனால் இன்று இரவு 7.30 மணிக்கு பின் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் என்ன நடந்தாலும் இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இரண்டு பேரையும் பிரதமர் மோடி சந்திக்க போவது இல்லை என்று கூறப்படுகிறது. நேரு அரங்கில் இவர்கள் இடம்பெற்று இருந்தாலும், பிரதமர் மோடிக்கு இவர்கள் கை கொடுத்தாலும் தனியாக சந்திப்பு நடத்த வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

நேரம் இல்லை
இவர்கள் இருவருக்கும் நேரம் கொடுக்கப்படவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்ற போது அவர் சில பாஜக தலைவர்களை சந்தித்தார். ஆனால் அவர் மோடியை சந்திக்கவில்லை. அதேபோல் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற போதும் அவரால் பிரதமர் மோடியை தனியாக சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் சென்னை பயணத்திலும் இந்த சந்திப்பு நடக்க போவதில்லை என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications