இதுக்கு எதுக்கு தேர்தல்? ஆளுங்கட்சியே வெற்றினு அறிவிச்சுட்டு போலாமே? சூடாக அறிக்கை விட்ட விஜயகாந்த்!
நியாயமான முறையில் தேர்தலை சந்திக்கும் கட்சிகளின் நிலை என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளார் விஜயகாந்த்.
சென்னை : "பணநாயகமே ஜனநாயகமாகிவிட்டதா? பணத்தை பிரதானப்படுத்தி மக்களை சந்திப்பது சரிதானா? ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் இங்கு தேர்தல் எதற்கு? தேர்தல் அதிகாரிகள் எதற்கு? நேரடியாக ஆளும்கட்சியே வென்று விட்டதாக அறிவிக்க வேண்டியது தானே." என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் விஜயகாந்த்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக, அதிமுக இரு கட்சிகளும் பணப் பட்டுவாடாவில் ஈடுபடுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி தேமுதிக சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் போட்டி போட்டு கொண்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பல்வேறு இலவச பொருட்களை வழங்கி வருகின்றனர் என விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பாக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற, திமுக, அதிமுக என அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஈரோடு கிழக்கில் குவிந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணப் பட்டுவாடா
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப் பட்டுவாடாவும் பரபரவென நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யவேண்டும் எனக் கோரி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் சமீபத்தில் தேமுதிக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. முறைகேடுகள் அதிகளவில் நடைபெறுவதால் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தன் புகார் அளித்தார்.

விஜயகாந்த் கண்டனம்
இந்தநிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் போட்டி போட்டு கொண்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பல்வேறு இலவச பொருட்களை வழங்கி வருகின்றனர். கும்பல் கும்பலாக மக்களை பட்டறையில் அடைத்து வைப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, பணப்பட்டுவாடா குறித்து கருத்து தெரிவிக்கும் மாற்று கட்சியினர் மீது ரவுடி கும்பலை வைத்து தாக்குதல் நடத்துவது போன்ற பல்வேறு அராஜக செயல்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்று வருகின்றன.

அதிகாரிகளும் வேடிக்கை பார்ப்பதா?
தேர்தல் விதிமீறல்களை தடுக்காமல் பறக்கும் படையினரும், தேர்தல் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்து வருகின்றனர். நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது எந்த வகையில் நியாயம்? பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக, வீடியோ ஆதாரத்துடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக மனு அளித்துள்ளது. அதேபோல் மேலும் பல்வேறு கட்சிகளும் புகார் அளித்திருக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் தேர்தல் விதிமீறல்களை தடுக்க அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தல் எதற்கு?
இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும் போது பணநாயகமே ஜனநாயகமாகிவிட்டதோ ? என்று தோன்றுகிறது. பணத்தை பிரதானப்படுத்தி மக்களை சந்திப்பது சரிதானா? ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் இங்கு தேர்தல் எதற்கு? தேர்தல் அதிகாரிகள் எதற்கு? நேரடியாக ஆளும்கட்சியே வென்று விட்டதாக அறிவிக்க வேண்டியது தானே. இங்கு நியாயமான முறையில் தேர்தலை சந்திக்கும் கட்சிகளின் நிலை என்ன? இனியாவது ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் பெறுவதை மக்களும் தவிர்க்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications