"பிடிக்கல..ம்மா.. வேணாம்".. கதறிய இளம்பெண்.. சொல்ல சொல்ல கேட்காமல் தாய் செய்த காரியம்.. சென்னையில்
சென்னையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: திருமணத்தில் விருப்பம் இல்லாத பெண்ணை கட்டாயப்படுத்தியதால், இன்று ஒரு உயிரே பறிபோகும்நிலைமை வந்துவிட்டது.
சென்னை அம்பத்தூரை அடுத்த வடக்கு கொரட்டூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் கவிதா... இவரது மகள் சந்தியா.. 22 வயதாகிறது.. பி.காம் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
இவருக்கு நல்ல உத்தியோகத்திற்கு செல்ல ஆசை.. அதனால் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்காக, கோசிங் சென்டரில் படித்து வந்தார்...

கோச்சிங் சென்டர்
இவரது வீட்டில் உறவினரான சேலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்... இவரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத விரும்பி, சந்தியாவின் கோச்சிங் சென்டரிலேயே வந்து சேர்ந்தார்..
இப்படிடப்பட்ட சூழலில்தான், சந்தியாவை ராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க கவிதா முடிவு செய்தார்.. இதனை அடுத்து, கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 7ந்தேதி வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சந்தியா- ராஜா இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது...

காதல்
ஆனால், சந்தியாவோ, ஆவடியை சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்... இந்த காதல் விவகாரத்தை தன்னுடைய அம்மா கவிதாவிடம் சொன்னார்.. ஆனால், அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை திருமணத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டார் சந்தியா.. கடந்த 4ந்தேதி சந்தியா- ராஜா திருமணம் முறைப்படி சேலத்தில் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்றது... திருமணத்திற்கு பிறகு, ராஜா- சந்தியா ஆகியோர் கொரட்டூருக்கு திரும்பினர்...

தற்கொலை
ஆனால், 6-ம் தேதியே, அதாவது 7ந்தேதி சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்... இதனை கணவர் ராஜாவும், அம்மா கவிதாவும் நேரடியாகவே பார்த்துவிட்டு, மகளை மீட்டனர்.. உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்துவிட்டார்..

சோகம்
இந்த புகாரின் அடிப்படையில் கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சந்தியாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.. மேலும், சந்தியாவிற்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகிறதால் ஆர்டிஒ விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த தற்கொலை சம்பவம் கொரட்டூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications