ஊட்டியாக மாறிய சென்னை.. சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கொட்டிய கோடை மழை.. நெகிழ்ந்த மக்கள்
சென்னை: கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய நிலையில், இன்று திடீரென பலத்த காற்று வீச தொடங்கியுள்ளது. இதனால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்னரே பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியிருந்தது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக வெப்பநிலை அதிகரித்தது. திருவள்ளூர் தொடங்கி சேலம், ஈரோடு வரையிலான மேற்கு மாவட்டங்களும், சென்னை முதல் பாண்டிச்சேரி, ராமநாதபுரம் வரையிலும் வெயில் வெளுத்துக்கட்டியது.

இருப்பினும், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை மக்களை குளிர்வித்து வந்தது. இந்நிலையில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக கடுமையான வெப்பத்தால் சென்னைவாசிகள் செய்வதறியாது திகைத்து வந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் வீடுகளின் மொட்டை மாடிகளிலேயே இரவு நேரத்தில் உறங்கி வந்துள்ளனர். இப்படி இருக்கையில் வெப்பமும், சூடான அனல் காற்றும் மக்களை அல்லல்படுத்திவிட்டது.
இந்நிலையில் இன்று மாலை சென்னையில் வானிலை வெகுவாக மாறியுள்ளது. பலத்த காற்று வீசியதால் வெயிலில் காய்ந்த கிளைகள் உடைந்து விழுந்தன. பைக் ஓட்டுபவர்களால் சாலையில் சரியாக செல்ல முடியவில்லை. காற்றில் தூசியும், பிலாஸ்டிக் கவர்களும் வாகன ஓட்டிகள் மீது படிந்துள்ளதால் பைக்குகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காலையிலிருந்து பதிவான வெயில் தற்போது முற்றிலுமாக குறைந்திருக்கிறது.
மேலும் சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications