Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உல்லாசம் விபச்சாரிகளுடன்.. கட்டாயப்படுத்துகிறார் கணவர்.. பிரபலத்தின் மீது புகாரை கிளப்பும் மனைவி.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனர் ஒருவர், விவாகரத்து பெற போராடி வரும் நிலையில், தனது மனைவியின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.. அதேபோல, தன்னுடைய கணவர் மீதும் மனைவி புகார்களை அடுக்கியிருக்கிறார்.. இந்த புகார்கள் ஒவ்வொன்றும் இணையவாசிகளை அதிர வைத்து வருகிறது.. இந்த தம்பதியரின் குழந்தை யாரிடம் வளரும்? யாரிடம் நீதிமன்றம் ஒப்படைக்கும் என்ற எதிர்பார்ப்பும், கவலையும் பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது?

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டம் பெற்றவரும், சிங்கப்பூரை மையமாக கொண்ட கிரிப்டோ சமூக வலைப்பின்னல் 0xPPL.com என்பதன் நிறுவனருமான சங்கர், மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டுள்ளார்..

Rippling Co-Founder divorce

காரணம், தன்னுடைய மனைவியின் கள்ளக்காதலை கண்டுபிடித்துவிட்டதால், மனைவியிடமிருந்து டைவர்ஸ் வாங்கிவிட முடிவு செய்துள்ளார்.. எனவே, கடந்த வாரம் இதுகுறித்து வெளிப்படையாகவே நீண்ட பதிவை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் போட்டிருந்தார்..

விவாகரத்து வழக்கு

அதில், "நான் டைவர்ஸ் செய்ய போகிறேன். எனக்கும் திவ்யாவிற்கும் கல்யாணமாகி 10 வருடங்கள் ஆகிறது.. எங்களுக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஆனால் என்னுடைய மனைவிக்கு அனூப் என்பவருடன் 6 மாதங்களுக்கும் மேலாக கள்ளக்காதல் இருப்பது தெரிந்துவிட்டது. என் மனைவி திவ்யா அனூப்பிற்கு அனுப்பிய மெசேஜ்களையும், அனூப்பிற்காக புக் செய்த ஹோட்டல் குறித்தான ஆதாரங்களையும், அனூப்பின் மனைவியே எனக்கு அனுப்பி வைத்தார். அப்போதுதான், விவாகரத்து பெற முடிவு எடுத்தேன்..

ஆனால், பணம் மூலம் ஆதாயத்தை தேட நினைத்த திவ்யா, அமெரிக்காவில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார்" என்றெல்லாம் பதிவிட்டு, குழந்தை தன்னுடன் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

இதனிடையே, தன்னுடைய 9 வயது மகனை கடத்தி வைத்துக்கொண்டு கணவர் மிரட்டுவதாகவும், பாலியல் குற்றவாளியான தனது கணவரிடம் இருந்து மகனை மீட்டுத் தரக் கோரியும் போலீசில் முறையிட்டுள்ளார் திவ்யா.. இது தொடர்பாக வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

மோசமான கணவன்

அந்த வீடியோவில், "என்னுடைய 3 வயது மகனை 3 வாரங்களாக காணவில்லை... எனக்கும் என் கணவருக்கும் குடும்ப விவகாரம் நடந்து கொண்டிருக்கிறது. கணவரின் உதவியாளர் என்று கோகுல கிருஷ்ணன் என்பவர், என் குழந்தையை என்னிடமிருந்து அழைத்து சென்றுவிட்டார். ஆனால், அவர் எங்கே அழைத்து சென்றார் என தெரியவில்லை.

என்னுடைய கணவர் சொத்துக்கள் அனைத்தையும் திருட்டுத்தனமாக இந்தியாவுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணி பல மில்லியன் டாலர்கள் மோசடி செய்துள்ளார்.. தாய்லாந்துக்கு வரியை கட்டாமல் அனைத்து சொத்துக்களையும் மாற்றிவிட்டார்.. இந்த வரி முறைகேடுகள் பற்றியெல்லாம் யுஎஸ் போலீசில் புகார் செய்யக்கூடாது என கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.


விபச்சாரிகளுடன் தொடர்பு

என்னுடைய கணவரை பொறுத்தவரை அவர் ஒரு செக்ஸ் பித்தர். விபச்சாரிகளுடன் பழகினார்.. பாத்ரூம், பெட்ரூம்களில் மறைமுகமாக கேமரா வைத்து பெண்களை அழைத்து வந்து வீடியோ எடுப்பது போன்ற வேலைகளை பார்த்தார். அந்த மாதிரி கொடுமைக்கு நானும் ஆளாகி இருக்கேன். என்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்து கொள்வார். உடல்நிலை சரியில்லை என்றாலும் தொந்தரவு செய்வார்.

நான் குளிப்பது உட்பட அன்றாட நடவடிக்கைகளின்போது தன்னை மறைமுகமாக வீடியோ எடுத்தார்.. நான் பிரசவ வலியால் அவதிப்பட்டபோதும், என்னை உடலுறவுக்கு வற்புறுத்தினார்.. அவருடைய ஆசைகளை நிறைவேற்றத் தவறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார்.. எவ்வளவு வலியில் இருந்தாலும், உடலுறவு முக்கியம் என்றார்..

கையில் அதிகமாக பணம் இருப்பதனால் என்னை என்னவேண்டுமென்றாலும் செய்துடலாம் என்று நினைக்கக்கூடாது.. எனக்கு நியாயம் வேண்டும்" என்று திவ்யா கேட்டுள்ளார்.

கணவன், மனைவி இருவருமே தந்திருக்கும் புகார்களும், குற்றச்சாட்டுகளும் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகின்றன.. அத்துடன், குழந்தை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இந்த வழக்கில் ஏற்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+