நீதிபதி அதிரடி.. ஜீவனாம்சம், கவுன்சிலிங், வீடியோ சிஸ்டம்.. இனி டைவர்ஸ் கேஸ்களில் இதான் புது நடைமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தம்பதிகள் எதற்கெடுத்தாலும் விவாகரத்து கேட்டு, நீதிமன்றங்களை நாடுவது அதிகரித்து வருகிறது.. கணவன் - மனைவி பந்தம் எளிதில் முறிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், கவுன்சிலிங் முறைகள் கொண்டுவரப்பட்டு, அதன்மூலம் இணக்கமான முடிவு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவாகரத்து வழக்கு விசாரணையில் புதிய உத்தரவையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் சென்னை ஹைகோர்ட் வெளியிட்டிருக்கிறது. அவை என்ன?

சமீப காலமாகவே குடும்ப வன்முறைகள் பெருகி வருகின்றன.. அந்தவகையில், குடும்ப நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள், பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகின்றன..

alimony MHC divorce

நாளுக்கு நாள் உறவு சிக்கல்கள் குடும்பங்களில் அதிகரித்து வரும்நிலையில், தம்பதியினரின் ஒற்றுமை, அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவைகளில் குடும்ப உறவுகளில் நீதிமன்றங்கள் காட்டும் அக்கறையானது, மிகுந்த கவனத்தை செலுத்தி வருவதும் இங்கு பாராட்டத்தக்கது.

புதிய உத்தரவு - வழிகாட்டு நெறிமுறைகள்

இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் பாராட்டத்தக்க அறிவிப்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.. தம்பதிகளிடையே ஏற்படும் பல்வேறு குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கோரி குடும்ப நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்கிறார்கள்.. எனவே, இது போன்ற வழக்கில் குடும்பநல நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழி காட்டு நெறி முறைகள் குறித்து, சென்னை ஹைகோர்ட் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் உள்ளதாவது:
- குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு, வழக்கறிஞரின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட மனுவை குடும்ப நீதிமன்றத்தில் குடும்ப நீதிமன்ற விதி 5(2) படி, நேரடியாகவோ அல்லது மனுதாரர் அனுமதியளிக்கப்பட்ட முகவரால் தாக்கல் செய்யலாம். வழக்கு தாக்கல் செய்யப்பட்ட உடன், எதிர்மனுதாரருக்கு முன்னறிவிப்பு வழங்காமல், நீதிமன்றம் மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளலாம்.

கவுன்சிலிங் செல்ல தேவையில்லை

- குடும்ப நீதிமன்றம் வழக்கை பதிவு செய்து, அதற்கு எண் வழங்கப்பட்டு, வழக்கறிஞர் அல்லது அவரது உதவியாளர், முகவர் வாயிலாக சம்மன் அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணைக்கு முன்பு, இரு தரப்பினரை கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும். கவுன்சிலிங் முடிந்த பிறகு சமரசத்திற்கு அனுப்ப வேண்டும். ஆனால், இரு தரப்பினரும் நேரடியாக சமரச தீர்வுக்கு சம்மதித்தால், கவுன்சிலிங் செல்ல தேவையில்லை.

காணொலி மூலம் சமரச தீர்வு

- குடும்ப நீதிமன்றச் சட்டம் பிரிவு 9-ன் கீழ், இரு தரப்பினர், நேரிலோ அல்லது காணொளி வாயிலாகவோ சமரச தீர்வு விசாரணைக்கு ஆஜராகலாம். காணொளி வாயிலாக பங்கேற்போர், எதிர் தரப்புக்கும், சமரச மையத்திற்கும் முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும்.

இரு தரப்பினர் இடையே சமரச பேச்சுவார்த்தை வெற்றியடைந்து, தீர்வு காணப்படும் பட்சத்தில், நீதிமன்றம் அந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தி தீர்ப்பு அளிக்க வேண்டும். சமரசம் தோல்வியடைந்தால், வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு, திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டும். காணொளி வாயிலாக பங்கேற்கும் நபரை வழக்கறிஞர் அல்லது அனுமதிக்கப்பட்ட முகவர் சரியாக அடையாளம் காண வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் ஹைலைட்ஸ்

இந்த வழிகாட்டுதல்கள் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிது.. காரணம், தம்பதிகள் வாய்தாதோறும் கோர்ட்டில் ஆஜராக தேவையில்லை. தம்பதிகள் தேவைப்பட்டால் மட்டுமே ஆஜரானால் போதும்..

அதேபோல, கவுன்சிலிங் கட்டாயமில்லை என்பதால், உடனடியாக தீர்வு காணலாம். இதனால் வழக்குகளும் விரைவில் முடிவுக்கு வருவதுடன், வழக்குகளின் தேக்க நிலையும் நீதிமன்றங்களில் குறையும். தீர்ப்பு அளிக்கப்பட்டவுடன் இலவசமாக நகல் வழங்கப்பட்டும் என்பதால், மேல் முறையீடு செய்வதற்கு எளிதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+