விரட்டி துரத்திய சந்தேக புத்தி.. மனைவி தலையில் கல்லை போட்டு கொலை.. கணவரும் தற்கொலை
மனைவியை கொன்று கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: சந்தேகம்.. சந்தேகம்.. விரட்டி துரத்திய சந்தேக புத்தியால் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார் ஒருவர்!!
புளியந்தோப்பு திருவிக நகரை சேர்ந்த தம்பதி துக்காராம்-தாராபாய். துக்காராம் ஒரு செருப்பு கடையிலும், தாராபாய் ஒரு காய்கறி கடையிலும் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

நல்லாதான் வாழ்க்கை போய்ட்டு இருந்தது.. திடீரென்று 43 வயதான துக்காராமுக்கு 33 வயதான மனைவியின் நடத்தை மீது சந்தேகம் வந்துவிட்டது. அதனால் வீட்டில் எப்ப பார்த்தாலும் சண்டை, தகராறு, கூச்சல், அடி-தடிதான்!! ரொம்ப சண்டை அதிகமாகிவிட்டால் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து சமாதானப்படுத்தி விட்டு செல்வார்கள்.
நேற்று ராத்திரியும் வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு தூங்கபோகிற நேரத்தில் மறுபடியும் தகராறு ஆரம்பமானது. சண்டை போட்டு முடிந்து நீண்டநேரம் கழித்து தாராபாய் தூங்க போய்விட்டார். ஆனால் துக்காராமுக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. அதனால் நேராக கிச்சனுக்குபோய் அம்மிக்கல்லை எடுத்து வந்து தூங்கி கொண்டிருந்த தாராபாய் தலையில் தூக்கி போட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தாராபாய் துடிதுடித்து இறந்தார். தன் கண்முன்னாலேயே மனைவி இறப்பதை பார்த்ததும், துக்காராம் நடுங்கி போன துக்கராம் அங்கேயே தூக்கு போட்டு தற்கொலையும் செய்துகொண்டார்.
இன்று காலை 3 பிள்ளைகளும் எழுந்து பார்த்தபோதுதான், தாயும், தந்தையும் பிணமாக கிடப்பதை கண்டு அலறி கதறி அழுதார்கள். தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் அளித்ததின்பேரில் உடல்கள் கைப்பற்றப்பட்டு, இந்த கொலை, தற்கொலை சம்பந்தமான விசாரணையில் இறங்கி உள்ளனர்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications