கருப்பா அசிங்கமா இருக்கியே.. அப்படியா.. இந்தா பிடி.. சுடுநீரை ஊற்றி அதிர வைத்த மனைவி
கணவன் மீது வெந்நீரை மனைவி ஊற்றினார்.
Recommended Video

சென்னை: 'இவ்ளோ கருப்பா அசிங்கமா இருக்கியே " என்று சொன்ன கணவன் முகத்தில் சுடு தண்ணீரை தூக்கி ஊற்றி விட்டார் மனைவி!!
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் சியாம்வெஸ்லி. இவரது மனைவி கிறிஸ்டி. கிறிஸ்டிக்கு வயது 34. சியாமுக்கு வயது 36.
கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆச்சு. சியாமுக்கு எப்பவுமே குடிபழக்கம் இருக்கு. இதை எத்தனையோ முறை கிறிஸ்டி சொல்லியும், தடுத்தும், கெஞ்சியும், அழுதும் பார்த்துவிட்டார். எதுவுமே சியாம் காதில் ஏறவில்லை.

குறை சொன்னார்
இதனால் எப்பவுமே ரெண்டு பேருக்கும் சண்டைதான். குடிக்காமல் வீட்டுக்கு வருவதே கிடையாது. ஆரம்பத்தில் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தவுடன், குடி விஷயமாகதான் ரெண்டு பேருக்கும் சண்டை எழுந்தது. ஆனால் நாளாக நாளாக, சியாம், மனைவியின் தோற்றத்தை பற்றி குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

கருப்பா இருக்கே
"நீ கருப்பா இருக்கே... அசிங்கமா இருக்கே... வேற கல்யாணம் பண்ணிக்க போறேன்" என்று போதையில் சொல்ல ஆரம்பித்துள்ளார். தன்னை பற்றி இப்படி மட்டமாக பேச வேண்டாம் என்று பலமுறை கிறிஸ்டி சொல்லியும், சியாம் தொடர்ந்து வம்பிழுத்து அழகு பற்றியே பேசி வந்துள்ளார்.

வேண்டுமென்றே சொன்னார்
நேற்றும் வழக்கம்போல் தண்ணி அடித்துவிட்டு, வீட்டுக்கு வந்ததும் கிறிஸ்டியிடம், கருப்பு, அழகில்லாதது குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார். இதை பற்றி பேசினாலே கிறிஸ்டிக்கு பிடிக்காது என்று தெரிந்தும் அதையேதான் வேண்டுமென்றே சியாம் சொல்லி இருக்கிறார்.

அலறி துடித்தார்
பொறுத்து பொறுத்து பார்த்து கடுப்பான கிறிஸ்டி, டீ போட அடுப்பில் வைத்திருந்த சுடுநீரை கொதிக்க கொதிக்க எடுத்து சியாம் முகத்திலேயே ஊற்றினார். போதையில் உளறியபடியே இருந்த சியாம், சுடுநீர் பட்டதும் அலறி துடித்தார். கொஞ்ச நேரத்தில் முகமே வெந்துவிட்டது.

அழகாக இல்லை
சியாமின் அலறல் கேட்டு பக்கத்து வீட்டுக்கார்கள் ஓடிவந்து மீட்டு, 108 ஆம்புலன்சில் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தார்கள். இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்யாணம் ஆகி 15 வருஷம் கழித்து மனைவி அழகாக இல்லை என்று கூறிய கணவனுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது!!
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications