இதெல்லாம் அஸ்வினி வேலையாத்தான் இருக்கும்.. மொத்தம் 3 பேர்.. ரயிலிலிருந்து விழுந்த கணவர்.. பரபர தகவல்
ரயிலில் இருந்து கணவனை கீழே தள்ளிவிட்ட மனைவி கைதானார்
சென்னை: "இது அஸ்வினி வேலையாகதான் இருக்கும்.. ரயிலில் நான் போகும்போது, ஒரு பெண் உட்பட 3 பேரும் சேர்ந்து என்னை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.. அவங்க எல்லாருமே முகத்தில் கர்சீப் கட்டி இருந்தனர்" என்று மனைவி மீது கணவன் பகீர் வாக்குமூலம் தந்துள்ளார்.
சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.. 30 வயதாகிறது.. இவர் ஒரு மெக்கானிக்.. போன 29-ம் தேதி சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் எலக்ட்ரிக் ரெயிலில் இவர் பயணம் செய்தார்.. அப்போது, அரக்கோணம் அருகே தவறி விழுந்து விட்டதாக கூறி அரக்கோணம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர்.

இவ்வளவு நாள் தீவிர சிகிச்சை நடந்து வந்த நிலையில், அவரிடம் அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.. அப்போதுதான் மொத்த விஷயத்தையும் கேட்டு ஆடிப்போய்விட்டனர். ராஜேந்திரன் சொன்னதாவது:
"நான் 29-ம் தேதி மதியம், திருத்தணி முருகன் கோயிலுக்கு போகலாம்னு சென்னையில் இருந்து திருத்தணி போகும் எலக்ட்ரிக் ரயிலில் ஆவடி அருகே ஏறினேன். அரக்கோணத்திற்கும், திருத்தணிக்கும் நடுவில் ரயில் சென்று கொண்டிருந்தது.. காட்டு ரயில்வே பிரிட்ஜ் அருகே வந்தபோது, ஒரு பெண்ணும் 3 பேரும் சேர்ந்து என்னை திடீரென என்னை கொலை செய்வதற்காக ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.
அந்த பெண் உட்பட எல்லாருமே முகத்தை கர்சீப்பால் கட்டி இருந்தனர்.. அதற்குள் நான் மயங்கி விழுந்துவிட்டேன்.. ஆனால் எனக்கும், என் மனைவி அஸ்வினிக்கும் நிறைய தகராறு இருக்கிறது.. எப்பவுமே எங்களுக்குள் சண்டை வந்து கொண்டே இருக்கும்.. ஒருவேளை அஸ்வினிதான் இப்படி கூலிப்படையை ரெடி பண்ணி என்னை கொலை செய்ய பிளான் பண்ணி இருப்பாள் என்று சந்தேகமாக இருக்கிறது" என்றார். கணவனை கூலிப்படை வைத்து மனைவி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications