பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி
சென்னை: 2014ல் இருந்து அம்பானியின் சொத்து மதிப்பு 500% மும், அதானியின் சொத்து 1000%க்கு மேலும் அதிகரித்துள்ளது என்று கூறப்படும் நிலையில், உலக பசி குறியீட்டில் இந்தியா 52வது இடத்தில் இருந்து 102வது இடத்திற்கு சரிந்துள்ளது. வருமான சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கும் நிதி மசோதா என்ன செய்கிறது? பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிக்குமா? செல்வ வரியை அறிமுகப்படுத்துகிறதா? பரம்பரை வரி விதிக்கிறதா? இது மறுபகிர்வு செய்ய முயற்சிக்கிறதா? என்றால் எதுவுமே இல்லை. ஆனால் பல்வேறு வரிகளில் நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்குவருகிறது என்று திமுக எம்பி வில்சன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதத்தின் முதல்கட்டம் பிப்ரவரி 11ஆம் தேதி முடிந்த நிலையில், மார்ச் 9ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ராஜ்யசபாவில் இன்று நிதி மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம். பி. பி.வில்சன் உரையாற்றினார்.

அப்போது வில்சன் எம்பி கூறுகையில், "எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுப்போம் என்று சொல்ல ஆட்சிக்கு வந்த ஒன்றிய அரசு, பலருக்கு சுமைகலையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு நன்மைகளையும் வழங்கும் ஒரே மாதிரியான முழக்கங்களுடனும், பட்ஜெட்டுடனும் செயல்படும் அரசாக உள்ளது. யுவசக்தி பட்ஜெட் என வடிவமைக்கப்பட நிலையில், வேலையில்லாத் திண்டாட்டம் மலிந்து, இந்தியா நாடே வேலையில்லா நெருக்கடியை சந்தித்து வருகிறது. சர்வதேச தரவுகளின்படி வேலைவாய்ப்பற்ற 83% இளைஞர்கள் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. 29 வயது வரை உள்ள பட்டதாரிகளின் வேலையின்மை அதிகமாக உள்ளது. "யுவசக்தி" போன்ற முழக்கங்கள்வேலைகளை உருவாக்காது. வேலைவாய்ப்பற்றவர்களுக்கு இந்த நிதி மசோதா என்ன செய்துள்ளது? இந்தியாவின் 90% க்கும் அதிகமான தொழிலாளர்களை பணியமர்த்தும் அமைப்புசாரா துறையினருக்கு நியாயமான பாதுகாப்பு இல்லை.
2014ல் இருந்து அம்பானியின் சொத்து மதிப்பு 500% மும், அதானியின் சொத்து 1000%க்கு மேலும் அதிகரித்துள்ளது என்று கூறப்படும் நிலையில், உலக பசி குறியீட்டில் இந்தியா 52வது இடத்தில் இருந்து 102வது இடத்திற்கு சரிந்துள்ளது. வருமான சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கும் நிதி மசோதா என்ன செய்கிறது? பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிக்குமா? செல்வ வரியை அறிமுகப்படுத்துகிறதா? பரம்பரை வரி விதிக்கிறதா? இது மறுபகிர்வு செய்ய முயற்சிக்கிறதா? என்றால் எதுவுமே இல்லை. ஆனால் பல்வேறு வரிகளில் நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்குவருகிறது.
கடந்த ஆண்டை விட நலத்திட்ட செலவுகள் ரூ. 59,456 கோடி குறைக்கப்பட்டுள்ளது. ஏழைகளை ஆதரிக்கும் திட்டங்களான MGNREGA, PMAY, PMJAY, PM POSHAN, பயிர் காப்பீடு ஆகிய அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன. உர மானியம் குறைந்துள்ளது. உணவு மானியம் குறைக்கப்படுகிறது. எரிபொருள் ஆதரவு சுருங்கி வருகிறது. கோடீஸ்வரர்களின் இருப்பை பலப்படுத்துவதற்காக ஏழைகளின் உயிர்நாடியை ஒன்றிய அரசு பறிக்கிறது.
ஆண்டுக்கு சுமார் 31 மில்லியன் டன்கள் நுகர்வு உள்ள எல்பிஜி பற்றாக்குறையை போக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? இந்த மேற்கு ஆசிய உலகளாவிய பதட்டங்களுக்கு தீர்வு காண பட்ஜெட்டில் ஏதேனும் ஏற்பாடு உள்ளதா? எரிசக்தி ஆதாரங்களை திறமையாக பல்வகைப்படுத்துவதில் அரசாங்கம் தவறியதே காரணம். குழாய் வழி எரிவாயு அணுகல் உள்ளவர்கள் LPG இல் இருந்து துண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் அரசாங்கம் அறிவித்தது. முழுமையாக மாறாததற்கு அதிக செலவுகள் மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் உட்பட காரணங்கள் ஆன மாற்றங்களை உடனடியாக கட்டாயப்படுத்தாமல் மெதுவாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் ஊக்குவிக்கவும் அனுமதிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை
நடுத்தர வர்க்கத்தினருக்கு, கட்டமைப்பான வரி விலக்கு இல்லை, சேமிப்பு அல்லது வருமானத்தை வெளிப்படையாக வெளிப்படுத்துவதற்கு எந்த ஊக்கமும் இல்லை. மாறாக, எந்த வரம்பும் இல்லாமல் வரி அதிகாரிகள் முடிக்கப்பட்ட மதிப்பீடுகளை கூட மீண்டு மீண்டும் திறக்க முடியும் என்பது வரி பயங்கரவாதம் ஆகும். இன்னும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் இல்லை, கடன், காலநிலை அபாயங்கள், விவசாய சீர்திருத்தம் இல்லாததால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர், தற்கொலைகள் தொடர்கின்றன என்பதை எல்லாம் இந்த ஒன்றிய அரசு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
பாதுகாப்பு, எரிசக்தி, துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற முக்கிய துறைகளில் ஏகபோகங்களின் வளர்ந்து வரும் போக்கு தேசிய நலனுக்கு எதிரானது. டிஸ்காம்கள் வாங்கும் மின்சாரத்தின் விலை உயர்ந்து, வாடிக்கையாளர்களின் மேல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
4.3% நிதிப்பற்றாக்குறை என்ற இலக்குடன் ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஆனால் மானியங்களை குறைப்பதன் மூலமும், சுமையை ஏழைகளின் மீது சுமத்துவதன் மூலமும் இலக்கை அடைய முடியாது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கடன் 55.6% ஆக உள்ளது, வட்டி செலுத்தும் மொத்த செலவினங்களுக்காக 20% செலவழிக்கிறது. மொத்த வரி வருவாய் வளர்ச்சி 8% மட்டுமே உள்ளது, 3.2% பணவீக்கம் பற்றி ஒன்றிய அரசு பேசலாம், ஆனால் இந்த அவையை விட்டு வெளியில் என்ன நடக்கிறது என்பதை நிதியமைச்சர் பார்க்க வேண்டும்.
சிறு வணிகம்
ஒரு பொறியியல் பட்டதாரி வண்டி ஓட்டுகிறார், ஒரு விவசாயி விதைக்காக கடன் வாங்குகிறார், ஒரு சிறு வணிகம் அமைதியாக மூடப்படுகிறது, ஒரு குடும்பம் அதன் உணவில் இருந்து புரத சத்தை குறைக்கிறது, பட்டதாரிகள் வேலையின்றி உள்ளனர் என்பதையெல்லாம் அவர் பார்க்க வேண்டும். வளர்ச்சி அறிவிக்கப்படுகிறது ஆனால் அவற்றின் முடிவுகள் எங்கே? ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்களே? தற்போது 12 ஆண்டுகள் ஆகின்றன அப்படியென்றால் 24 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே உருவாக்கப்பட்டுள்ளன? விவசாயிகளை இரட்டிப்பாக்குவதாக வாக்குறுதி அளித்தீர்களே அவர்களுக்கான வருமானம் எங்கே?
மறைமுக வரிகள்
உணவு பொருட்களின் விலை, எரிபொருள் செலவுகள், பள்ளி கட்டணம், போக்குவரத்து செலவுகள் பற்றிய உண்மையான விலையை ஒரு குடும்பத்திடம் கேட்டுப்பாருங்கள், வாழ்க்கையை நடத்த முடியாமல் தவிக்கின்றனர். இந்த நாட்டு மக்களின் கைகளில் உண்மையான பணவீக்கம் 10-15% ஆகவுள்ளது. வரிச் சுமைக்கு வந்தால், நேரடி வரி 11.4% அதிகரித்துள்ளது, மறைமுக வரிகள் 3% அதிகரித்துள்ளது. மளிகைப் பொருட்கள், சோப்பு, துணிகள், மொபைல் ரீசார்ஜ், பள்ளி குறிப்பேடுகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை சாமானியர்கள் வாங்கும் போது மறைமுக வரிகள் செலுத்தப்படுகின்றன. ஒரு ஏழையால் செலுத்த முடிகிறதா இல்லையான என்பதை எல்லாம் உணராமல்தான் மறைமுக வரிவிதிப்பு அமைகிறது என சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கோடீஸ்வரர் மற்றும் கட்டுமானத் தொழிலாளி என இருவரும் ஜிஎஸ்டி செலுத்துகின்றனர், ஆனால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வலி வெவ்வேறானது. பணக்காரர்கள் ஆவணங்களிலும் , ஏழைகள் அன்றாடம் பயன்படுத்தக்கூடியா பொருட்களிலும் வரி விதிப்பை எதிர்கொள்கிறார்கள். ஏழைகளை கடுமையாக பாதிக்கும் வரி முறையை சரிசெய்ய ஒன்றிய அரசு தவறிவிட்டதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது.
உயர் நீதிமன்றங்கள்
சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திற்கு அற்பத் தொகை ஒதுக்கப்பட்டதையும் முன்னிலைப்படுத்துகிறேன்.வழக்கறிஞர் தொழிலில் செயற்கை நுண்ணறிவு புரட்சியின் உச்சத்தில் இருக்கும் கட்டத்தில், நீதிமன்றங்களை நவீனமயமாக்குவது மற்றும் நீதிபதிகளின் சுமையை குறைக்க மற்றும் முடிவெடுப்பதை மேம்படுத்துவதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தை அணுகுவதைப் பற்றி பேச வேண்டும். ஆனால் நாடு முழுவதும், மாவட்ட நீதித்துறை மற்றும் சில மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள் கூட கணினிகள், கழிவறைகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக போராடி வருகின்றன என்பதுதான் அப்பட்டமான உண்மை.
நீதிமன்றங்கள்
நாடு முழுவதும் உள்ள பல உயர் நீதிமன்றங்களுக்குச் சென்று பார்த்ததில் உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளன. நீதித்துறைக்கு நிதி ஒதுக்குவதும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும். வணிக வழக்குகள் விரைவாக தீர்க்கப்படும் என்று உறுதியளிக்கப்படும் போது, இந்திய தொழில்துறை மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது. நீண்ட கால சொத்து தகராறுகள் முடிவு செய்யப்படும் போது, சொத்தை பணமாக்குவதற்கு பயன்படுத்தலாம். எனவே, நீதித்துறையின் உள்கட்டமைப்பு தொடர்பான தேவைகளை நிவர்த்தி செய்யும்படி நிதியமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
நீதிபதிகள் ஓய்வுகால ஓய்வூதியம்
அதேபோல், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று பலமுறை பேசி வருகிறேன். இப்போது வழங்கப்படும் சம்பளம் அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்றதாக இல்லை. நமது நீதிபதிகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 70 ஆக உயர்த்தி, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுக்கால ஓய்வூதியம் கடைசியாக எடுக்கப்பட்ட சம்பளத்துக்கு இணையாக இருக்க வேண்டும், ஓய்வுபெறும் நீதிபதிகளை அனைத்து அரசுப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தவும், தீர்ப்பாயங்களில் பணியமர்த்தப்படுவதையும் தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு உள்நாட்டு உற்பத்தி
நடுத்தர மக்களின் வருமானத்தில் தேக்கம், சேமிப்பில் சுருக்கம், என்பதுதான் இந்த ஒன்றிய அரசின் வெற்றிக் கதை. இந்த ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுகிறார்கள். தனது சொந்த நிதியமைப்பே முற்றிலும் சீர்குலைந்த நிலையில் வைத்துள்ள ஒன்றிய அரசு, "நிதி ஒழுக்கம்" பற்றி விரிவுரைக்கும் துணிச்சலைக் கொண்டுள்ளது. நாட்டின் கடன் மீதான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 55.6% என்ற வியக்க வைக்கும் அளவில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு 26.12% ஐ மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் விவேகத்தின் பாதுகாவலர் என்று ஒன்றிய அரசு கூறிக்கொள்கிறது. நிதி மேலாண்மை என்பதை ஆழமாக ஆராய்ந்தால் ஒன்றிய அரசு சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயில், கிட்டத்தட்ட 38% என்கிற ₹14.04 லட்சம் கோடி வளர்ச்சி, சுகாதாரம், கல்வி அல்லது வேலை உருவாக்கம் ஆகியவற்றுக்கு வட்டியாக செலுத்தப்படுகிறது.
மத்திய அரசின் கடன்
மத்திய அரசின் மொத்தக் கடன் 2022-23ல் ₹156.13 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2023-24ல் ₹171.70 லட்சம் கோடி, 2024-25ல் ₹185.95 லட்சம் கோடி, 2025-26ல் ₹200.53 லட்சம் கோடி என 4 ஆண்டுகளில், ₹62 லட்சம் கோடிக்கு மேல் என விரிவடைந்து, 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் சொந்த கடன் போக்கு, செங்குத்தான, தொடர்ச்சியான உயர்வைக் காட்டி, நிதி நிர்வாகத்தின் நிலைத்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் நிலையில், அது மாநிலங்களுக்கு நிதி விவேகம் மற்றும் நிதி ஒழுக்கம் குறித்து பாடம் நடத்தி வருகிறது.
தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி
இந்தியாவின் நிதிக் கூட்டாட்சி அமைப்பினால், தமிழ்நாட்டிலிருந்து 2022-23ல் ₹1,75,088 கோடி, 2023-24ல் ரூ. 2,07,314 கோடி, 2024-25ல் ரூ. 2,17,165 கோடி என மொத்தம் ரூ. 5,99,567 கோடி வரி வருவாயை வசூலித்தும், ஒதுக்கப்பட்ட நிதி என்பது 2022-23ல் ரூ. 38,731 கோடி, 2023-24ல் ரூ. 46,072 கோடி, 2024-25ல் ரூ. 52,492 கோடி என மொத்தம் ரூ. 1,37,295 கோடியாக மட்டுமே இருந்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து ஒரு ரூபாய் வரி வருவாயில், மாநிலத் துக்கு ஒதுக்கக்கூடிய நிதி என்பது 23 பைசாவாக மட்டுமே உள்ளது.
அநீதி
இதை நிதி அநீதி என்று சொல்வதே சிறந்தது என்பது, மற்ற மாநிலங்களுடனான ஒப்பீட்டில் காட்டப்படும் ஏற்றத்தாழ்விலிருந்தே தெரியவரும்.அதே மூன்றாண்டு காலத்தில், உத்தரப் பிரதேசம் ரூ. 3,62,457 கோடி மட்டுமே வரியாக செலுத்தியுள்ள நிலையில், ரூ. 6,03,220 கோடியாக இருக்கிறது. அதாவது, உத்தரப் பிரதேசத்திலிருந்து வரும் வருவாய் ஒரு ரூபாய் என்றால், ஒதுக்கக்கூடிய நிதி ரூ. 1.66-ஐ திரும்பப்பெறுகிறது.
பீகாரில் ஏற்றத்தாழ்வு
இதேபோல கணக்கிட்டால் பீகாரில் ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகமாகிறது. பீகார் ரூ. 49,215 கோடி மட்டுமே வரியாக செலுத்தியுள்ள நிலையில், ரூ. 3,38,549 கோடியாக இருக்கிறது. அதாவது, பீகாரிலிருந்து வரும் வருவாய் ஒரு ரூபாய் என்றால், ஒதுக்கக்கூடிய நிதி ரூ. 6.90-ஐ திரும்பப்பெறுகிறது.
அப்பட்டமான வேறுபாடு
இந்தியாவின் வலிமையான பொருளாதார பங்களிப்பாளர்களில் ஒன்றாகவும், தேசிய வரி வருவாயை உருவாக்குபவராகவும் இருக்கும் தமிழ்நாடு, ஒரு பகுதியை மட்டுமே பெறும் நிலையில், மிகக் குறைவான பங்களிப்பை வழங்கும் பல மாநிலங்கள் அதிக அளவில் பலன்பெறுகின்றன. கூட்டுறவுக் கூட்டாட்சிக் கொள்கைக்கு உண்மையான அர்த்தம் இருக்க வேண்டும் என்றால், மத்திய அரசு இந்த அப்பட்டமான வேறுபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு ஒரு ரூபாயக்கு 23 பைசா
தாங்கள் உருவாக்கும் வளங்களில் இருந்து நியாயமான மற்றும் சமமான பங்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் தகுதியானவர்கள். கூட்டாட்சிக் கொள்கைக்கான உண்மையான அர்த்தமாக இருக்க வேண்டுமானால், தேசிய வளப் பங்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்வதே ஆகும். தமிழ்நாடு போன்ற உயர் செயல்திறன் கொண்ட மாநிலங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தாமலும், தண்டிக்கப்படாமலும் ஒன்றிய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு கூட்டாட்சியில் வைத்துள்ள நம்பிக்கை உண்மையென்றால் தமிழ்நாடு ஒரு ரூபாயக்கு 23 பைசாவை மட்டும் திரும்பப் பெறும் நிலையில், மற்ற மாநிலங்கள் ரூ.1.66 அல்லது ரூ. 6.90-ம் எப்படி பெறமுடியும்?
நிதி ஏழுக்கம்
நிதி ஒழுக்கம் என்பது நலனைக் குறைப்பது அல்ல என்பதையும், அறிவார்ந்த முறையில் வளங்களை நிர்வகிப்பதும், மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் ஆகும் என்பதை தமிழ்நாடு நிரூபித்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசோ தமிழ்நாட்டின் உரிமையான நிதியை நிறுத்தி வைக்கிறது, அதிகாரப்பகிர்வை குறைக்கிறது, நிலுவைத் தொகையை தாமதப்படுத்துகிறது, இதையெல்லாம் செய்துவிட்டு பின்னர் நிதி ஒழுக்கத்தைப் பற்றி போதிக்கிறது. நாட்டின் கடன் தொடர்ந்து பெரிதாக்கிக்கொண்டே இருக்கும் அதேவேளையில், வட்டிச் சுமையும் பட்ஜெட்டைச் சுற்றி இறுக்குகிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பல்வேறு திட்டங்களுக்கான நிதியில் ரூ. 10,000 கோடிக்கு மேல் ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திலும் ரூ. 5,914 கோடியை விடுவித்து இருந்தாலும், இன்னும் ₹3,112 கோடி நிலுவையில் உள்ளது
ஆளுநர் மூலம் தொல்லை
சட்டப்படியான நிலுவைத் தொகையை நிராகரித்து, மாநில ஆளுநர் மூலம் தொல்லை கொடுத்தாலும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் எப்பொழுதும் தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லும் ஒரே முழக்கம் "தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்" என்பதுதான். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நகர்ப்புற திட்ட நிதியை உள்ளிட்ட பல நிதிகள் காகிதத்தில் மட்டுமே உள்ளன.
10000 கோடி நிதி நிறுத்தம்
இன்றைய கதைகள் பரப்பப்படுவதை ஒன்றிய அரசு தன் கட்டுப்பாடில் வைத்திருந்தாலும், கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்; ரூ.10,000 கோடிக்கும் அதிகமான நியாயமான நிதியைநிறுத்திவைக்கலாம்; தரவுகளைத் திரித்துக் கூறலாம்; டெல்லியில் இருந்துகொண்டு நிதிசார் உபதேசங்களைச் செய்யலாம்; ஆனால், உங்களால் கட்டுப்படுத்தவே முடியாத ஒரு சக்தி இருக்கிறது, அதுதான் மக்கள் சக்தி. கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழகத்திற்கு நீங்கள் எதையும் வழங்காமல், மக்களைத் திண்டாட வைத்திருப்பதை தமிழ்நாடு மக்கள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள்
என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்- ஒன்றிய அரசு நடந்துகொண்ட அதே விதத்தில்தான் தமிழ்நாட்டு மக்களும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் உங்களுக்குப் பதிலடி கொடுப்பார்கள். மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய அரசுக்கு எதிரான தங்கள் தீர்ப்பை வழங்கும்போது, அதன் விளைவுகளை உணர்ந்துகொள்வீர்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு முழக்கம் மட்டுமே தெரியும், அது "ஸ்டாலின் தொடரட்டும், தமிழகம் வெல்லட்டும்!" என்பதுதான்." இவ்வாறு நாடாளுமன்றத்தில் நிதி மசோதா மீதான விவாதத்தில், மூத்த வழக்கறிஞரும், திமுக-வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் உரையாற்றினார்.
-
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
திமுக ஜாக்பாட் அறிவிப்பு! ரூ.8000 கூப்பன்.. TV, Fridge, மிக்சி, மைக்ரோவேவ் அவன்! யாருக்கு கிடைக்கும் -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications