பாஜகவின் பி டீம்?.. தமிழகத்தில் திராவிட மாடல் எடுபடாது.. ஒன்லி டெல்லி மாடல்தான்.. வசீகரன் சுளீர்

திராவிட மாடல் இனி தமிழ்நாட்டில் கிடையாது என வசீகரன் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவை தேசிய அளவில் வீழ்த்தும் தகுதி ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமே இருப்பதாகவும், 2026ம் ஆண்டு தமிழகத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்றும் அக்கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

நேற்றைய தினம் 5 மாநில தேர்தல் ரிசல்ட் வெளியானது.. இதில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.. தேர்தலுக்கு முன்பே எத்தனையோ கருத்து கணிப்புகள் வெளியாகின.

அதேபோல தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போலும் வெளியாகின.. அத்தனை கணிப்பிலும் உறுதியாக சொல்லப்பட்டது பஞ்சாப்பில் ஆம் ஆத்மியே வெற்றி பெறும் என்பதுதான்..

பாஜக

பாஜக

தேர்தல் சமயத்திலேயே, பஞ்சாப்பில் தங்கள் தோல்வியை பாஜகவும் லேசாக ஒப்புக் கொள்ளவே செய்தது.. முதலில் டெல்லி, அடுத்து பஞ்சாப் என தேசிய கட்சியாக ஆம் ஆத்மி இன்று உருவெடுத்துள்ளது... இப்போதைக்கு 31 மாநிலங்களில் 18 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் 2 இடத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ளது... இருந்த இடத்தையும் நேற்றைய தினம் பறிகொடுத்து விட்டது.. வேறு கட்சிகளும் இல்லாத நிலையில் ஆம் ஆத்மி மட்டுமே தன்னுடைய முத்திரையை பதித்துள்ளது.

 ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

விரைவில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தலும் நடக்க உள்ளதால், ஆம் ஆத்மி படுசுறுசுறுப்பாக வேலை பார்த்து கொண்டிருக்கிறது.. ஆம் ஆத்மி டெல்லியில் வெற்றிபெற்றபோதே காங்கிரசுக்கு மாற்று என்று அரசியல் விமர்சகர்கள் பேச ஆரம்பித்தனர்.. இப்போது அது உண்மையாகிவிட்டது.. காங்கிரஸின் கோட்டையான டெல்லி மற்றும் கோட்டையான பஞ்சாப் இரண்டையுமே ஆம் ஆத்மி கைப்பற்றி உள்ளதையடுத்து, காங்கிரசுக்கு போட்டியாக உருவெடுத்துவிட்டது.

 பாஜக அதிர்ச்சி

பாஜக அதிர்ச்சி

இந்நிலையில், பஞ்சாப் மாநில தேர்தல் வெற்றி தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில் அவர் சொல்லும்போது, "பாஜகவை தேசிய அளவில் வீழ்த்தும் தகுதி ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமே இருக்கிறது.. 2026-ல் தமிழகத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும்.. இது ஒன்றும் அதிர்ச்சி இல்லை, இது தான் உண்மை.. இது தான் நடக்கும்.. காரணம், டெல்லியில் அரவிந்த கெஜ்ரிவால் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டமான பேருந்தில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை தான் திமுக அரசு செயல்படுத்தி கொண்டிருக்கிறது.. இனி திராவிட மாடல் ஆட்சி எடுபடாது, டெல்லி மாடல் ஆட்சி தான் எடுபடும்..

 ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

இந்தியாவில் காங்கிரஸ் இல்லாத நிலை உருவாகியுள்ளது. அந்த இடத்தை இப்போது ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் கூட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி குறிப்பிட்டு சொல்லும்படியாக வாக்குகளை பெற்றுள்ளது. பாஜகவின் பிடீம் ஆக ஆம் ஆத்மியை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாஞ்சாப் மற்றும் டெல்லியில் பாஜக- காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளையும் தான் வீழ்த்தியுள்ளது.

 பாஜக இனி அவ்வளவுதான்

பாஜக இனி அவ்வளவுதான்

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வர கூடாது என்று காங்கிரஸ், பாஜகவும் உள்ளுக்குள் கூட்டணி அமைத்து வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் 2வது முறையாக வெற்றி பெற்றுள்ள பாஜகவால், அந்த மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி எதிர்கட்சியாக இருக்கிறது. அதனால், அடுத்த ஆண்டு நடைபெற்றவுள்ள குஜராத் மாநில தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும்.. பாஜக தேர்தலில் பெற்ற வெற்றி நேற்றைய வெற்றி தான் கடைசி வெற்றி.. இனி பாஜக வெற்றி பெற வாய்ப்பே இல்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+